Tuesday, July 21, 2009

மூத்த கவிஞன் முருகையன் 19 கார்த்திகை 1986 காணொளி

மூத்த கவிஞன் முருகையன்.


-------------------
முருகையன் ஈழத்தின் முதன்மைக் கவிஞர்களுள்அருமைச் சீராடல் அனைத்திற்கும் அமைந்தவரே!பெருமைப் படுமளவு பாட்டாளி வர்க்கத்தின்உரிமைக்காய்க் குரல்கொடுக்கும் தாயகத்தின் வாயிலாகஒருமைப்பட்ட இதயத்துடன் ஒத்துழைப்பும் வழங்கிசரியான பார்வையுடன் சரித்திரக் கவிதைகள்...வரிசையில் முற்போக்கு வதனத்தில் ஓரமைதிபரிபாலன சேவையாம் பல்கலைக் கழகப்பதிவாளர்தெரிவுசெய்த மார்க்கமது முற்போக்குச் சிந்தனைகள்..பெரியோன் இவரென்று எல்லோரும் போற்றுவரே!

* * *

அல்லும் பகலும் தேசியகலை இலக்கியச்சொல்லும் செயலும் சுடரான சிந்தனையும்வல்லவராம் இருமொழியில் தாய்மொழிக்குத் தனியிடமாம்எல்லையில்லாத கவிதைகள் ஆயிரம் ஆயிரம்நல்ல கருத்துடன் நயம்பட வடித்தகவிஅத்தனையும் மானிடத்தின் அரிய விடியலுக்குசத்தமில்லா எதிர்கால விழிப்புணர்வுச் சூரியனாய்திங்களென்ற குயிலித் திருமகளும் மங்காத்தங்கமகன் கண்ணன் மாநிலத்தில் கண்மணிகள்...முல்லைச் சிரிப்பும் முறுவலித்த முகமுமாய்..இல்லையே இவனென்று நினைக்க முடியவில்லை!

* * *

மானிடன் அழிவதுண்டு மானிடம் அழிவதில்லை நானிலத்தே வாழுகையில் நலிந்தோர்க்குக் குரல்கொடுத்துஇறுதிமூச்சு இருக்கும்வரை என்னிதயக் கருத்துக்களைஅறுதியாக உரைபேனென அரும்பெரும் கவிதைகளில்வடித்து வைத்துச் சென்றதெல்லாம் மக்களின்துடிப்பை வெளிக்காட்டும் துல்லியப் பளிங்குபோலஅடியொற்றி வாழ்வோரின் அடிமனதில் ஒளிவிடும்விடிவெள்ளி ஆனவருள் முருகையன் முதற்கவிஞன்.

------------------ திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம்.
My daughter's Marriage was conducted by Poet Dr.E.Murugaiyan on 19 November 1986 in Jaffna

நடேசன். இரவீந்திரன் சுப்பிரமணியம். சத்தியமலர்
திருமண வாழ்த்து----------- 19-11-1986.
நடேசனார் பயந்த மைந்தன் இரவீந்திரன் வாழ்வில் என்றும்தொடர்நலம் பெருகவேண்டும் சுவைபயன் விரியவேண்டும்கடமையில் மட்டும் அன்றி கல்வியில்..அறிவில்...ஆய்வில்..திடமுடன் முன்னேற்றங்கள் சேர்ந்திடல் மிகவும் வேண்டும்.
* * * *
சுப்பிர மணியத்தாரின் தொண்டுகள் மணக்கும் இந்தச்சத்திய மனையில் வாழும் சத்திய மலரின் வாசம்ஒப்பிலா விதத்தில் மேலும் ஓங்குகஇப்புவி நயக்கும் வண்ணம் இன்பமே நிறைந்து வாழ்க.
* * * *
இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும்வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும்.
* * * *
புதுமண மங்கலத்தின் பொலிவினைப் போற்றுகின்றோம்பிறர்நலன் அறிந்து கொண்டு எண்ணத்தால் பகுத்துக் காணும்அறத்தினால் உறவு பூணும் ஆர்வத்தைப் போற்றுகின்றோம்அறிவினைப் போற்றுகின்றோம் தெளிவினைப் போற்றுகின்றோம்.
* * * *
எண்ணத்தில் இனிக்கும் இந்நாள் இன்பத்தின் குறியீடாகும்வண்ணத்தார் மலரினோடு ரவியெனும் மணம் கலந்தகிண்ணத்தில் கனிச்சாறாக திழைக்கட்டும் வாழ்க்கையின்பம்உண்ணத்தேன் தமிழ்நாளென்று உவகையால்....புதுமண மக்கள் சேர்ந்த புதுமையை உரைத்தோம் வாழ்க்!
அன்புடன்சபையோர் சார்பாக.. இ- முருகையன்.நீர்வேலி, 19-11-1986.
2 Video Clips each 2 minutes are available at the links below


Page Created in 2009

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF