Saturday, September 5, 2009

Some Old Collections of Valliammai Subramaniam

 
             


புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் கைகளினால் .......
மே தினம்
                   .................

          விவசாயி தொழிலாளி வியர்வை சிந்தி
             பயிரையும் தொழிலையும் பரவச் செய்தார்
          தவறாத கடமையில் தம்மை உருக்கித்
             தரணியைச் செழிக்கத் தக்க தாக்கி
          கவிஞரும் புலவரும் செய்ய வொண்ணா
             காரியம் பற்பல ஆக்கி வைத்து
          புவிவாழ சாதனைப் புதுமை செய்தார்
             பூமியில் மேதினம் அவரால் வாழ்க!
                              - வள்ளியம்மை சுப்பிரமணியம்.


"நான்" - வள்ளியம்மை சுப்பிரமணியம்
Thanks to "Tamilmurasu".Singapore Mon, 04/08/2008
என்னை ஒரே வரியில் எளிதாகச் சொல்லிவிட அன்னை தெரசா அம்மையார் போல் - நான் நோயில் உழன்ற நொடித்தவரைக் காத்தேனா? பாயில் விழுந்தோரைப் பராமரித்துப் பார்த்தேனா?
அன்புடன் தாய் மொழியும் அயராத கைவினையும்என் இனிய மாணவிகள் தம்காலில் நிற்பதற்குதாய்போல் இருந்தவரின் தரத்தை உயர்த்திவிட்டகாய்தல் உவத்தில்லாக் கடமையுணர் வுள்ளவள்நான்.
அம்மம்மா தன்னுடைய அகவை எழுபதிலும்தம்மால் முடிந்தவரை தமிழ்கேட்க வருவதைப்பார்என்றே இளைஞர்கள் எழுச்சியுடன் ஓடிவரநன்றே அவர்கட்கும் நயமான கவிதைவரும்.
அமிழ்தென காதினிலே அருவியாய்ப் பொழிவதனால்தமிழ்க்கவிதை கேட்கையிலே தலைவலியும் தெரிவதில்லை

From Singapore Minister of Education Hon.Tharman Shanmugaratnam.......

 
"தேசிய தினம்"- வள்ளியம்மை சுப்பிரமணியம்
Thanks to Tamilmurasu.Singapore Sun, 10/08/2008

சிங்கைத் திருவிளக்கே மங்காப் பெருவிளக்கே எங்கள் இதயத்தில் என்றும் சுடர்விடும் ஆற்றல் மிகுந்த அருமைத் திருநாட்டின் போற்றும் தேசிய நாள் இது. நாற்பத்து மூன்றாவது நந்நாளைக் கொண்டாடும் காற்றில் மிதந்துவரும் கானங்கள் சொல்வதனால் துரிதவளர்ச்சி கண்டு துல்லியமாய் விளங்குகின்ற அரிய தேசீய நாள் இது. ஒரு நாட்டின் செல்வங்கள் அந்நாட்டுக் குடிமக்கள் உருவாய்க்காய் அயராது உழைப்பவர் வீட்டிலே திருமகள் வீற்றிருக்கும் திவ்வியத்தைப் பார்த்த பெருமிதத்தாயின் தேசிய நாள் இது. நான்கு இனமக்கள் நல்வழியில் வாழ்வதற்கு பாங்கான இல்லங்கள் பத்திரமாய்த் தான் ......


உ      
திருமண வாழ்த்து.
மணமகன்
திருநிறைசெல்வன்
லிங்கநாதன் குகதீசன் அவர்களும்
மணமகள்
திருநிறைசெல்வி
செல்வராசா ஜனார்த்தனி அவர்களும்
மங்களகரமான விரோதி வருடம் ஆனித்திங்கள் 7ம் நாள் ஞாயிற்றுக்கிழமை 21-06-2009 கனடா கந்தசாமி கோவில்
மண்டபத்தில் (733,Birchmount Road,Scaborough, ON) திருமணம் புரிந்து கொண்ட வேளையில் வாசித்தளித்த
வாழ்த்துப் பாக்கள்.


ஆழிசூழ் உலகமெங்கும் பண்பான தமிழ்க்குடியில்
ஏழ்பிறப்பும் தருமமே செய்து-வாழ்ந்திருந்த
சூழுறவு சுற்றம் குகதீசன் ஜனார்த்தனியை
வாழியென வாழ்த்துகிறோம் மகிழ்ந்து.
ஈழத்தின் வடபால் இயற்கை செழித்த
யாழ்ப்பாணக் குடாநாடு பண்டத் தரிப்பினிலே
மனமெலாம் தெய்வச் சிந்தனை நிறைந்த
கனவான் லிங்கநாதன் தம்பதி பெற்றெடுத்த
தங்க மகனார் குகதீசன் என்பாரும்
பங்க மில்லாச் சிறப்புடன் விளங்கும்  
செல்வராசா தம்பதியின் சீரோங்கு மூத்த
மகளாய்ப் பிறந்த வனப்புறு மங்கை
தகவுடைச் செல்வி ஜனார்த்தனி என்பாரும்
கனடா ஸ்காபரோ கந்தசாமி ஆலய
மணநிகழ் மண்டப மேடையில் இன்று
பற்றினார் கரங்களைப் பார்ப்போர் மகிழ்ந்திட
சுற்றமும் நண்பரும் சூழ்ந்து வாழ்த்தினர்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அதுவென வாழ்ந்திட
நேரிய வழியில் நிறைவாக உயர்ந்திட
காரியம் யாவிலும் கண்ணியம் மிளிர
பொங்கும் சிறப்புடன் பொருந்தி வாழ்வீரென்
சிங்கையில் இருந்து வாழ்த்து கின்றோமே.
சிங்கப்பூர்
21-06-2009


அன்புள்ள மகன்,
எப்படி இருக்கிறீர்கள்? ஜனா (கனடா இந்திராக்காவின் மகள்) வின் திருமண
வாழ்த்து அனுப்பத் தம்பி  வந்திருந்து எனக்கு உதவிகள் செய்தார்.
எல்லாம் உங்கள் அறிமுகத்தினால் தானே!
          உங்களுக்கு வேலைப் பொறுப்புக்கள் நிறைய இருக்கும்.அந்தக்கதை
1962-01-21 அல்லது 28.....வீரகேசரி...ஞாயிறு..”அன்னதானம்”.....
வள்ளி சுப்பிரமணியம்.......

கிடைத்தால் சரி. கிடைக்காவிட்டால் விடுவோம்.கீருவும்,தம்பியும் அல்பனி...
நியூயோர்க் கில் நிற்கிறார்கள்.வத்தளைஅண்ணை ஊருக்குப் போய்விட்டாரா?
        அன்புடன்....அம்மா. வள்ளியம்மை சுப்பிரமணியம்.

அன்புள்ள தம்பி ஸ்ரீராஜ்
இவ்விடம் நல்ல சுகம். நீங்கள் எப்ப்டி இருக்கிறீர்கள்? ்
அனைவருக்கும
“தமிழ் எழுத்தில் கடிதம் அனுப்புங்க பாட்டி” என்று  கேட்டார ்,. அது தான் இந்தக்கடி
தம்.இது உங்களுக்கு எப்படி வருகிறதென்று பதில் அனுப்பவும்.
            சின்னத்தாத்தா, சின்னப்பாட்டி, அப்பா, கிருபா சித்தப்பா,
வித்யாச்சித்தி,பிரியாக்குட்டி,நீங்கள் எப்ப்டி இருக்கிறீர்கள்?.........
........அன்புடன்....பாட்டி....சிங்கப்பூர்.11-06-2009

From Singapore Minister of State for Trade and Industries Hon.S Eswaran.........
 முத்துலெட்சுமியை முழுமனதாய் வாழ்த்துவமே!
       -------------------------------
       
   சிங்கப்பூர்த் திருநாட்டின் சீரோங்கும் குடும்பத்தில்
    தங்கத் திருமகளாய் வந்துதித்த சின்னமகள்
   அண்ணன்மார் இருவர் அக்கா,தம்பி ஒவ்வொருவர்
   எண்ணமே சகலரும் நலத்துடன் வாழவென
   மங்காத புகழ்படைத்த வேல்சாமியும் பாப்பாவும்
   மங்களமாய்ப் பெற்றெடுத்த மக்களில் நான்காவதாய்
   துணைவர் தனராஜ்சும் துடிப்பான மூத்தமகன்
   அனைவர்க்கும் அன்பான நாவேந்தன், நாலிரண்டு
   ஆண்டுகள் கழிந்தபின்னே ஹர்க்ஷினி பிறந்தபின்
    அவுஜ்ரேலியா நாடுசென்று பட்டக்கல்வி முடித்தனளே
    ரெக்கிஹீலிங் சிகிச்சையினை தன் இல்லமாம் ஈசூனில்
   --------                      -----
   பற்றுடனே செய்துவரும் பண்பான மகளாவார்
   சிரித்த முகத்துடனே சிறப்பாகச் சேவைசெய்யும்
   பரந்த மனங்கொண்ட பக்குவத்தைப் பெற்றவளாம்
   சொந்தத் திறமையினால் விந்தையாய்ச் சேவைசெய்ய
   வந்தோர் சுகம்பெற்று வாழ்த்துவரே மனமார
   பத்துமாதம் சுமந்துபெறும் பாசமுள்ள தாய்போல
   முத்துலக்ஷ்மியின் சிறப்பை முழுமனதாய் வாழ்த்துவமே!
        அன்புடன்....வள்ளியம்மை சுப்பிரமணியம்.
               

For further details to contact http://www.shriiiholistic.com/
முனைவர் சபா இராஜேந்திரன் கைகளினால் .........
         


Aug 9, 2009 Singapore National day 2009.

       
                      கவிதையில் சிங்கப்பூர்
               ---------------.
     
             கவிதை என்ற மூன்றெழுத் துக்கள்
             கவியில் சிங்கை களித்துச் சிரிக்கிறாள்
             கதையாக உருமாறி கடமையில் மிளிர்கிறாள்
             விதையாகப் பற்பல பயிர்களை ஆக்கினாள்.
              கவி
          ---
                நாட்டிலே வாழ்ந்த நல்லறி வாளர்களும் -வெளி
                நாட்டிலே இருந்து வந்த திறனாளரும்
                சிங்கையின் வளர்ச்சியைச் செழித்திட வைக்கிறார் -இந்த
                மங்கையின் மதிப்பை மகுடத்தில் ஏற்றினார்.
             கதை
         ---
                கதையெனச் சொல்கையில் கண்ணீரில் உதித்தவள்
                அதைமறக் காதவர் ஆற்றல் படைததனர்
                உலகமே வியந்துதலை தூக்கிப் பார்த்திட
                தலைவர் விரித்தனர் பன்னாட்டுத் தொடர்புகள்.
             விதை
         ---
               விதைத்த பயன்தரு விதைகளே பயிர்களாய்
                புதையல் கிடைத்தது போலவே வளர்ந்தனர்
                 நேர்மை, உண்மை, நிதானம், பலமென
                 சார்ந்தவர் நின்றே சிங்கையை உயர்த்தினர்.
               வள்ளியம்மை சுப்பிரமணியம்.
   -------.              
                
கவிமாலைக் குடும்பச் சுற்றுலாவின் போது....05-07-2009.
    எல்லோரும் சேர வேண்டும் - சிங்கையில்
   நல்லோர்கள் இணைய வேண்டும்
  கவிமாலைக் குடும்பங்கள் நாம் - இங்கே
  கவி பாடி மகிழ வேண்டும்     (எல்லோரும் )
  பிச்சினிக் காடார் பெருமை வேண்டும் -முன்னோடியை
  மெச்சினாம் நினைக்க வேண்டும்
  ஆசியான் கவி ஆசி வேண்டும் -அவரது
  தேன்கவியில் திழைக்க வேண்டும் (எல்லோரும் )
  புதுமைத் தேனீ ஊக்கம் வேண்டும் _ நமக்கு
  கவிதை நதி ஊற்றும் வேண்டும்
  சத்தியத்தின் உறுதி வேண்டும் - அதை
  நித்தம் நாம் காக்கவேணும்      (எல்லோரும் )
  இயலாமை என்றொரு சொல் -ந்ம்மிடையே
  சுயமாக மறைந்து போச்சுதே....
  முயலாமை என்றொரு சொல் -ந்மக்குள்
  முயற்சிகளாய் மாறி விட்டதே     (எல்லோரும் )
  தமிழ் காக்க உழைக்கவேண்டும் - கவிதையின்
  புகழ் எங்கும் மணக்க வேண்டும்
  புதுமையான கருத்தும் வேண்டும் - நமக்குள்
  கவிதைப் புனல் பெருக்கும் வேண்டும் (எல்லோரும் )
  சொல்லோட்டம் சுவைக்க வேண்டும் - நமக்குள்
  நல்லோட்டம் நயக்க வேண்டும்
  தள்ளாமை வந்த போதும் - தமிழ்
  வெள்ளாமை பெருக வேண்டும்       (எல்லோரும் )
  கவளமாக உண்ணும் உணவே - நமக்குப்
  பவளப் பாறைச் சொந்தங்களாம்
  தவளுகின்ற குழந்தைகளும் - இங்கே
  பழகுகின்ற பாக்கியமே               ( எல்லோரும் )


        எங்கள்  சிங்கப்பூர்  தேசீய கீதம்
       --------------------
ஆறிருவர் சிறுவர் ஒன்றாய் அன்புடன் கூடீத்துள்ளி அணியாய்
நடந்தே  கிடுவோம் அழகுடன் நாடி ( ஆறிருவர்)
எங்கள் நாட்டைப் பார்த்து எமது சிந்தை குளிருதே
சிங்கை நாட்டைப் போலஉலகில் வேறுநாடுண்டோ? (ஆறிருவர்)
நான்குவகை இனங்களுண்டு பார்த்திடுவீரே-.இங்கு
நான்குவகை மொழிகளுண்டு படித்திடுவோமே
உலகமொழி ஒரேமொழியாம் சகல இனத்துக்கும்-அவரவர்
நலம்மிக தாய்மொழியில் தனிச்சிறப்புண்டு  (ஆறிருவர்)
கல்விகற்று முடித்த பின்னே Nதீயசேவை--இந்த
நல்வழியைக் கைவிடாது ஏற்று நடக்கிறோம்
வீண்பொழுது போக்கிடாமல் விளையாட்டுத் திடல்களும்
காண்போரைக் கவர்ந்திழுக்கும் நீச்சல் நிலைகளும் (ஆறிருவர்)
சுத்தம் சுகாதாரமதைப் பேணி நடக்கிறோம்.
நித்தம் நூல்நிலையம் சென்று அறிவை வளர்க்கிறோம்
வீடில்லாமல் வீதியிலே தூங்குவாரில்லை -- இங்கு
பட்டினியால் பிச்சை ஏந்தும் மனிதருமில்லை (ஆறிருவர்)
ஊக்கமுடன் உழைப்பதையே உணர்ந்த மக்கள்யாம்
ஆக்கமான செயல்திறனை வளர்த்து வாழ்நாளில்
சொந்தக் காலில் நிற்பதையே உணர்ந்து நடக்கிறோம்
சோம்பேறியாய் வாழுவதை வெறுத்து ஒதுக்கிறோம் (ஆறிருவர்;)
பெற்றோரைப் பேணுவதை மறந்திட மாட்டோம்
கற்றோரை மதித்திடத் தயங்கவும் மாட்டோம்
அக்கம் பக்கம் நாடுகளில் இயற்கை தாக்கினால்
ஆக்கமுடன் பங்குபற்றித் துயர்துடைக்கிறோம் (ஆறிருவர்)
நாட்டுப்பற்றும் வீட்டுப்பற்றும் கொண்டவர் நாமே உலகை
ஆட்டுகின்ற பயங்கரத்தை உள்ளேநுழைய விடோமே
சண்டை.யுத்தம்,குண்டுமழை,கண்ணிவெடிகளை
அண்டவிடாமல் எமது நாட்டைக் காக்கிறோம்---(ஆறிருவர்)
நிமிர்ந்தபல திட்டங்களைத் தீட்டும் தலைவர்கள்
திறனாளரை வரவேற்றிடும் தகுந்த ஆட்சியர்
எத்தனையோ எமக்காக ஆக்கி வைத்தாரை
அத்தனையும் சொல்வதற்கே நேரம்போதாதே
இத்தனையும் புதுச்சந்ததிக் குச்செய்து வைத்தவரை
பக்தியுடன் நன்றிகூறி வாழ்த்திடுவோமே. (ஆறிருவர் )-திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்
 From Dr.N. R. Govindan, President, Madhavi Ilakkiya Mandram, Singapore.......... 
சிங்கையில் தீபாவளி

------------------------------------

எங்கும் ஒளிஉமிழும் எல்லோர்க்கும் குதூகலமாம்

தங்கும் ஆனந்தம் தனிச்சுவையாய்

பொங்கும் புத்துணர்வு பூரிக்கும்

கங்குல் விடியுமுன் நீராடிப் புத்தாடை அணிந்தபின்

இங்குதான் சொர்க்கமே இறங்கி வந்ததென்று

சிங்கமும் மீன்வடிவும் சேர்ந்த இலச்சினைபோல்

சிங்கையில் தீபாவளித் தினம்.

ஆரணங்கு சிங்கையின் அங்கமாம் தீபாவளி

ஆடல்பாடல் ஒலி.ஒளி அமர்க்களமாய்

பூரணம் சூழ்ந்த புனிதநாளில் பழையன கழிதலும்

புதியன யாவும்புகுந்து நிறைந்திடும்

தோரணம்ரூபவ்திரைச்சீலைரூபவ் தோதானபட்டாசு

தோழமை உணர்வுடனே உபசார விருந்தோம்பல்

காரணம் ஏதெனில் ஒரேமக்கள் ஒரேநாடு

காண்கின்ற தீபாவளித் தினம்.நிழல் தேடும் சூரியன்.
         விடிபொழுதின்  காலைக்கதிர் விரும்பிடும் உதயபானு
         கொடிதான உச்சிவெய்யில் உமிழுகையில் நெருப்புஞாயிறு
     
        சாயங்காலம் வயல்வெளியில் வேலைசெய்யக் களைப்புத்தரா
        நேயமான் நியாயமான அந்திப்பொழுது ஆதவனாய்
    
         மேலைக்கடலுள் மறையும்போது சோலையில் பறவையினம்
       ஆலையில் மனிதர்களும் வேலைமுடிந்த மகிழ்ச்சியில்...
       நேரத்துக்கு நேரம் மனிதமனம் மாறும்போது
       தூரப்பயணம்...நிழல்தேடும் சூரியனாய் மாறாமல்....
         நாளைக்கும் கடமையாற்ற நம்பிக்கை ஒளிகொடுக்க
         வேளைக்குக் களையாறி விடியலுக்கு வந்துவிடு...
           
           வள்ளியம்மை சுப்பிரமணியம்.


முனைவர் திருமதி.லெட்சுமி அம்மையார் கைகளினால் .........


செம்மொழியாம் தமிழ்மொழி செழித்திடுக உலகமெங்கும்.
--------------------------------------------------
      பாடுவோமே கூடி ஆடுவோமே-
      பக்குவமாய் நாமெல்லோரும்
      தமிழ்த் தாயின் வாழ்த்ததனைப் பாடுவோமே!
      ஊரும் உறவும் பலவாயினும் ஒன்றாய் -ஓர்
      தாயின் மக்களென ஓதுவோம் நன்றாய்-சிங்கையின்
      பேருக்குப் பெருமை சேரக் கூடிநடப்போம்- இங்கு
      யாருக்கும்  உரிமையுண்டு தமிழை வாழ்த்தவே   ( பாடு...)
      நாட்டிலே வாழ்ந்த நல்லறிஞர்களும்
      நாடுவிட்டு நாடுவந்த பேறிஞர்களும்
      தேடித்     தேடி உன்னை தாலாட்டவே
      பாடிப் பாடி உன்னைச் சீராட்டவே ( பாடு )தொட்டில்
                             --------
      ஆயிரத்துத் தொள்ளயிரத் தறுபதாம் ஆண்டுகளில்
      தாய்தந்தை மக்களெனப் பலகை வீடொன்றில்
      சிங்கப்ப்பூர்க் கிராமக் குடும்பமது வாழ்ந்ததுவே
      அங்கத்தவர் நிறைந்த அன்பான இல்லறத்தில்
      வேல்சாமி தெய்வானை பெற்றெடுத்த அறுவருமே
      நூல்போல் மெலிவான ஆண்மூன்று பெண்மூன்று
      மாமரக் கிளைதனில் கட்டிவைத்த தொட்டிலிலே
      ஆரவமர இருந்தபடி வளர்ந்து வந்தார்
     
        ஒய்யார் முதுகுப்பக்கம் உதைப்பதற்குக் காற்சட்டம்
      கைப்பிடியாய் வளைந்த சட்டம் உட்காரப் பலகையென
       கைபிடியாய் வளைந்தசட்டம் உட்காரப் பலகையென
        சிற்றுளியால் செதுக்கிய சீராட்டும் பொன்மொழியும்
        பற்றுடனே பாதுகாக்கும் பாங்கான தொட்டிலது

        இரண்டாயிரம் ஆண்டளவில் எழுபது வயதுவர
        கண்பார்வையும் சற்றுக் குறைவது போல்தோன்ற
        அடுக்குமாடி வீடுகளில் மக்களுடன் வாழ்ந்திருந்த
        மிடுக்கான தந்தையவர் இயற்கை  எய்துமுன்னே
        சாகுந்தருணம் சின்னமகள் சிந்துவிடம் சொன்னார்
        "பாவிக்காத தொட்டிலை வீட்டினுள் முடக்காதே
        பாசமுள்ள நண்பன் பரிசாகத் தந்தபொருள்
        நேசமுள்ள மனிதருக்குத் திருப்தியுடன் கொடுத்துவிடு"
  
வள்ளியம்மை சுப்பிரமணியம். 

பிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி-சாமினி திருச்செல்வம்


                                                            -------------.
சிங்கப்பூர்- சிரங்கூன் வடக்கு--திருவாளர்- திருச்செல்வம்        திருமதி- சகுந்தலா தம்பதிகளின் அருமை மூத்த மகளும், திரு- அப்புலிங்கம் , திரு-மகாலிங்கம்      ஆகியோரின் முதல் பேத்தியும், சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவியும்,  சிறந்த பரதநாட்டிய நங்கையுமாகிய திருநிறைசெல்வி-சாமினி அவர்கள் தனது 21ம் பிறந்தநாளை   (28-08-1988) சிங்கை- இலங்கை விளையாட்டு மைதான மண்டபத்தில்    கொண்டாடியபோது வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப் பாக்கள்:-
                               -----------
              உலக வரைபடத்தில் சின்னஞ் சிறுபுள்ளி
             இலகுவாகப் பல்லினமும் வாழ்கின்ற் நாடான
             சீரான சிங்கப்பூர் சிறப்பான குடும்பத்தில்
            தாராள மனங்கொண்ட திருச்செல்வம் சகுந்தலா
            சாமினி என்ற் நற்குணச் செல்வியைப்
            பூமியில் மகளாய்ப் பெற்று மகிழ்ந்தனரே- அவர்
            சிங்கப்பூர்ப் பல்கலைக் கழகத்தில் பட்டக் கல்வியை
           பொங்கும் மகிழ்வுடன் படித்து வருகின்றார்.
       
           சத்தீஸ், உமேஸ் தம்பிமாரும் தாய்வழி, தந்தைவழி
          அத்தனை சிறுவர்களும் “அக்கா” என விரும்பி
          அந்தரங்க சுத்தியுடன் அன்புடனே அழைத்து
          சொந்தங்கள், நண்பர்கள், உடன்பயிலும் தோழர்கள்
          பொற்பத விநாயகனின் திருத்தாளினைப் பணிந்து
          ந்ற்கருணை, மேற்படிப்பு நன்றாகவே எய்தி
          கற்கைநெறி நாட்டிற்கும் மக்களுக்கும் பயன்பட
          வெற்றித் திருமகளாய் வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
     
                                          இங்ஙனம்,
                                    அன்புடன்,----”சத்தியமனை”
05-09-2009

No comments:

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF