"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, September 13, 2009

இன்னொரு கற்பகம் தம்பி தேவா

இன்னொரு கற்பகம் தம்பிதேவா
....................


வடக்கிலே கல்விச்சாலைகள் செயற்படவும்
நெடிதுயர்ந்த பனை மரத்தின் பெயராலே
நடமாடும் கற்பகமாய் உண்ணஉணவு அனுப்பி
அல்லும் பகலும் அரும்பணி ஆற்றுகிற

நோயுற்ற மக்களுக்கு மருந்து வசதிகளை
தாயற்ற தந்தையற்ற பிள்ளைகளின் பராமரிப்பை
வாயிருந்தும் பேசப்பயப் படுவோரை...சிறுவயதில்
தாயையிழந்த தம்பிதேவா தாபரிப்பது அறியீரோ?

முந்திய அரசின் வன்செயலால் பாதித்த
அந்த உணர்வால் அனைவரையும் நேசித்து
அடக்கு முறைக்கு எதிராய் எழுந்தநிகழ்வால் ....
நடக்க முடியாமல் தவித்திருந்த நாளுமுண்டு.

வடக்கிலுள்ள நான்குமத மக்களையும் சந்தித்து
இடக்கு முடக்கான கேள்விக்கும் பதிலளித்து
தந்தையின் முற்போக்குச் சிந்தை வழிகாட்ட
நொந்ததில்லை கண்ணைப் பறித்தவரை ஒருகணமும்.

உயிர்வாழும் மிகுதிக்காலம் மக்களுக்குச் சேவைசெய்து
பயிராகும் புதுச்சந்ததிக்கு படிப்பு, வேலைவசதிகளை
அயராது செய்து கொடுப்பதிலே ஊண் உறக்கமின்றி
செயலாகச் செய்கின்ற கதிரவேல்மகன்* நீடுழிவாழ்க!


* தோழர். கதிரவேலு ( பெற்றோலியக் கூட்டுத்தாபன மாவட்ட அதிபர்)
*****************************************************************
1963 ம் ஆண்டிலிருந்தே மணியம் தோழருடன் மிக நெருக்கமான புரிந்துணர்வோடும், காலமறிந்து உதவும் மனப்பக்குவமும் கொண்டவராக திரு. கதிரவேலு அவர்கள் விளங்கினார்கள். அவர் மூலம் நாம் பெற்றுக் கொண்ட சரீர உதவிகள் ஏராளம். 

1964ம் ஆண்டு ‘ மே’ தின ஊர்வலத்தை ....பங்குபற்ற முடியாவிட்டாலும் பார்ப்பத
ற்கு என்னைத் தனது காரில் ஏற்றிக் கொண்டு ஊர்வலத்தைப் பின் தொடர்ந்து பார்பதற்கு
உதவினார். அப்போ எனது மகள் என் வயிற்றில் ....பிரசவ நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேளை. எனக்கு அடிக்கடி சலம் கழிக்க வேண்டிய இயற்கை உபாதை இருந்தது. கதிர் அவர்
கள் தனக்குத் தெரிந்த வீடுகளில் என்னை இறக்கி ஆறுதல் எடுக்க வைத்து உதவினார். அவரும் பெண் சகோதரத்துடன் பிறந்த பொறுப்புணர்வுடன் வாழ்ந்த ஒரு மகான் ஆவார்.

எனது மகன்  சிறைச்சாலையில் இருந்தபோது சர்வதேச மன்னிப்புச் சபைக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதி, அவரது விடுதலைக்கு உதவினார். 
இது எல்லாவற்றையும் விட 1989 ம் ஆண்டின் ஆரம்பத்தில் மணியம் தோழர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் நோயாளியாகச் சேர்க்கப் பட்டிருந்தார்.அந்த வேளைகளில் எமது சின்ன மகன் கீர்த்தி அப்பாவுடன் கைஉதவியாக நிற்பார். அவர் வெளியே போய் குளித்து, உடுப்பு மாற்றி வரும் வரை கதிர்மாமா தான்....” உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே...இடுக்கண் களைவதாம் நட்பு “ என்பதற்கிணங்க.... சலம் எடுக்கும் பாத்திரத்தைக் கூட ....எந்த வித அருவருப்பும் இன்றிச் சிரித்த முகத்தோடு செய்வாராம். அந்தக் காலத்தினாற் செய்த நன்றியை இன்றுவரை....கீர்த்தியின் மனதை விட்டு அகலவே இல்லை. “ காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்...அது ..ஞாலத்தின் மாணப் பெரிது “.... இப்படியாக, தோழர் கதிர் அவர்கள் எமக்கு மாத்திரமல்ல ..... அந்த கதிர் தோழரின் உதவிகளை நன்றியறிவுள்ளவர்கள்
மறக்க மாட்டார்கள். -வள்ளியம்மை சுப்பிரமணியம்

1 comment:

  1. Thanks to http://www.velichcham.com/Kavithi/Kavi13.09.09.html

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்