"தாழ்த்தப்பட்டோரின் இப்போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஜனநாயக உணர்வு படைத்த ஆதிக்கசாதியினரும் கலந்து கொள்ள நேர்ந்ததற்குக் கம்யூனிஸ்ட் கட்சியே காரணமாக இருந்தது. கே. ஏ. சுப்ரமணியம், நா. சண்முகதாசன் போன்ற தலைவர்கள் அன்று தலைமறைவாக நேரிட்டது. இத்தகைய தலைவர்களின் உருவிலேயே மணியத்தாரை இக்கதையில் எஸ்.பொ. படைத்துள்ளார். இத்தொகுப்பின் முக்கியமான கதை இது. முடிவு சற்றே நாடகத்தன்மையாக இருந்த போதிலும் ஈழத் தமிழை ஆக உச்சமான வீரியத்துடன் எஸ்.பொ. கையாண்டுள்ளார். அவர் சாதி எதிர்ப்புக் கதைகளே எழுதியதில்லை என்கிற குற்றச்சாட்டு தகர்ந்து போகிறது." -அ.மார்க்ஸ்
"தீண்டத்தகாதவன்" இல் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்..
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்