Friday, February 26, 2010

பிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி-ஸ்ரீ

சிங்கப்பூர்த் திருநாட்டின் தங்கத் திருமகள்
அவுஜ்ரேலியா நாடு சென்று சீரோங்கும் கல்வி
.
........அன்புடன்....பாட்டி....
வள்ளியம்மை சுப்பிரமணியம்
சிங்கப்பூர்.04-03-2010

Monday, February 22, 2010

பாண்டித்துரையின் புதிய வீட்டிற்கு வாழ்த்து.

பாண்டித்துரையின் புதிய வீட்டிற்கு வாழ்த்து.
———————————————————————————
சிங்கப்பூர் கவிமாலை கவிஞரும்,கணக்காளருமாகிய நீதிப்பாண்டி அவர்களால் அமைக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்தவுடன் அம்மாவின் மனதில் ஏற்பட்ட உற்சாகத்தில் பிறந்த பாடலிது.

ஆக்கமான அன்புவழி அரணாகிய வீடு
ஊக்கத்துடன் ஒத்துழைத்து உருவாக்கிய வீடு
தேக்கமான பாசத்திலே திழைத்திருக்கும் வீடு
நோக்கமெல்லாம் முன்னேற்ற நுணுக்கமான வீடு.

பாண்டித்துரை சகோதரரின் பண்பான இல்லம்
காண்போரின் பார்வையிலே கணிசமான இல்லம்
தூண்களெலாம் விருந்தினரை வரவேற்கும் இல்லம்
மாண்புடைய மேன்மையான மனிதர்வாழும் இல்லம்.

வேப்பமரம் சிதைந்தாலும் விநோதமான மனையாம்
கூப்பிட்டு விருந்தளிக்கும் குதூகல மனையாம்
சாப்பிட்டுப் போங்களென்று ஆதரிக்கும் மனையாம்
மாப்பிள்ளைக் கோலங்கள் மருவுகின்ற மனையாம்.

ஆசிகளுடன்…………………அம்மா………….வள்ளியம்மை சுப்பிரமணியம்

Friday, February 19, 2010

கவிமாலைக் குடும்பச் சுற்றுலாவின் போது....14 02 2010


எல்லோரும் சேர வேண்டும் - சிங்கையில்
நல்லோர்கள் இணைய வேண்டும்
கவிமாலைக் குடும்பங்கள் நாம் - இங்கே
கவி பாடி மகிழ வேண்டும் (எல்லோரும் )

பிச்சினிக் காடார் பெருமை வேண்டும் -முன்னோடியை
மெச்சினாம் நினைக்க வேண்டும்
ஆசியான் கவி ஆசி வேண்டும் -அவரது
தேன்கவியில் திழைக்க வேண்டும் (எல்லோரும் )

புதுமைத் தேனீ ஊக்கம் வேண்டும் _ நமக்கு
கவிதை நதி ஊற்றும் வேண்டும்
சத்தியத்தின் உறுதி வேண்டும் - அதை
நித்தம் நாம் காக்கவேணும் (எல்லோரும் )

இயலாமை என்றொரு சொல் -ந்ம்மிடையே
சுயமாக மறைந்து போச்சுதே....
முயலாமை என்றொரு சொல் -ந்மக்குள்
முயற்சிகளாய் மாறி விட்டதே (எல்லோரும் )

தமிழ் காக்க உழைக்கவேண்டும் - கவிதையின்
புகழ் எங்கும் மணக்க வேண்டும்
புதுமையான கருத்தும் வேண்டும் - நமக்குள்
கவிதைப் புனல் பெருக்கும் வேண்டும் (எல்லோரும் )

சொல்லோட்டம் சுவைக்க வேண்டும் - நமக்குள்
நல்லோட்டம் நயக்க வேண்டும்
தள்ளாமை வந்த போதும் - தமிழ்
வெள்ளாமை பெருக வேண்டும் (எல்லோரும் )

கவளமாக உண்ணும் உணவே - நமக்குப்
பவளப் பாறைச் சொந்தங்களாம்
தவளுகின்ற குழந்தைகளும் - இங்கே
பழகுகின்ற பாக்கியமே ( எல்லோரும்

Friday, February 12, 2010

தோழர் சுந்தரம் அவர்கள், தனக்கென்று ஓர் முகவரி தேடாதவராவார்.

2010 ஜனவரி 16ந் திகதியன்று, விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) அவர்களின் 28வது நினைவு தினத்தினை முன்னிட்டு, கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் ஊடகத்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக “ஊடகங்களின் தவறான செய்திகள், ஆய்வுகள் உரிமை போராட்டத்தை எவ்வளவு தூரம் பின் நகர்த்தியுள்ளது” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்த கருத்தரங்கத்தில் கழகத் தோழர் அமரர் மீரான் மாஸ்டர் (சுப்பிரமணியம் சத்தியராஜன்) இன் தாயாரும் இடதுசாரியவாதி, பொதுவுடமைவாதி அமரர் கே. கே ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியாருமான திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டதை கீழே தருகின்றோம்


அன்றொரு கவிஞன் பாடிய பாடல்கள்.......
இன்றும் நினைவில் இருக்கின்ற வரிகள்.....
“சுந்தரமே! எங்கேநீ?....சுதந்திர உலகிற்குத்
தந்திரமாய் அனுப்பினரோ?.....தாளமுடியு தில்லை.
எந்திரம் போலநீ எத்தனை செயல் புரிந்தாய்
உன்தரத்தை அறியாதார் உலகில் இருந்தென்ன?
அந்தரத்தில் எம்மைநீ அநாதையாய் விட்டாயோ?
ப சுந்தரம் பெற்றெடுத்த பாசம்மிகு புதல்வா!.................
                                  
 தோழர்- சுந்தரம் அவர்கள் தோழர்- மணியம்
அவர்களுடன் உரையாடும் போது என்காதில் விழுந்த சில
செய்திகளின் துளிகள்....தந்தையார்---சுளிபுரம்- தாயார் காரைநகர்.
நாட்டுவைத்தியமும், நாடக இயக்குனருமான....அண்ணாவியார்
பரம்பரை( விக்காவில் , ஆயிலி..காரைநகர்) பெரியம்மா....மூளாய்.....
(திருமதி-கந்தையா )
தாய் மாமன் ...ஓவிய ஆசிரியர்.இராசரத்தினம் .
(சுந்தரம்) சதாசிவம் சிவசண்முகமூர்த்தி படித்தது
சுளிபுரம் , விக்ரோறியாக் கல்லூரி.
குணாதிசயங்கள்:------
தன்னடக்கம், நன்றிமறவாமை, குருபக்தி,நட்பினைப்
பேணுதல், பெரியோருக்குக் கீழ்ப்படிவு,சுதந்திர வேட்கை.
குழந்தைகளிற் பாசம், பிறமொழிகளை ஆர்வத்துடன்
கற்றல்...................
     

 
என்குழந்தைகளால் கையெழுத்துப் பிரதியாகச்
“ சிறுபொறி” வந்தது 1976ல்
“புதியபாதை” 1980ல்  வெளிவந்து ....சிறிதுநாள்
தாமதித்து 1981ல்  தொடர்ந்து வந்தது.
தோழர்  சுந்தரத்தின் குணாதிசயங்கள்:----
பெரியோருக்குக் கீழ்ப்படிவு, குருபக்தி,
நன்றிமற்வாமை, குழந்தைகளிற் பாசம்,
சகலமொழிகளையும் படிக்க ஆவல்,
தன்னடக்கம், ஊக்கம், நட்புக்கு முன்னுரிமை.
                   ஆண்டுகள் 27 கழிந்தும் அவரை
நினைவுகூரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும்
ந்ன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும்...........
.......அம்மா.

பின்குறிப்பு:----


என்குழந்தைகள் சிறுபொறி வெளியிட்டது1976ல்...........புதியபாதை கை யெழுத்துப்பிரதிகள்

1980ல் பார்வைக்குக் கிடைத்தது. அச்சுவாகனமேறியது

1981ல்.........வீடுகளுக்குச் சென்று கைகளில் ஒப்படைப்பதில் மிகக் கவனமாகச் சுந்தரம் செயற்படுவார்.
இவ்வளவும் நான் அறிந்தவை.கனடா -மொன்றியலில்


அவரது பெரியம்மாவின் மகள் - ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி

விசாகபூசணி முருகையா..வசிக்கிறார்.அவருக்கு குடும்பவிபரம்

முழுவதும் தெரியும்.  ஆண்டுகள் 29 கடந்த பின்னும் அந்த விடுதலை விரும்பியை நினைவுகூரும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இத் தாயாரின் நன்றியும், வாழ்த்தும் உரித்தாகட்டும்.......அம்மா.


தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF