மாற்றத்தின் காற்று-தியாக.இரமேஷ்
மாற்றம் என்பது
மண்ணின் வளர்ச்சி
மனிதனின் வளர்ச்சி...
உள்மூச்சு,வெளிமூச்சு
வலதுநாசி,இடதுநாசி என்று
காற்றின் மாற்றமே
உயிர்வளம்,உடல்வளம்...
மாற்றத்தின் காற்று
வீறுகொண்டு வீசும்போதெல்லாம்
இயற்கையின் இருப்பு மட்டுமல்ல
மனித இருப்பும்
ஈராக்,எகிப்து,லிபியாயென
மாறிதான் போய்விடுகிறது..
காற்று வீசட்டும்
நம் வீதியெங்கும் வீசட்டும்
நாற்றம் வீசும் அரசியலின்
அக்குளுக்குள் ஒளிந்திருக்கும்
கையூட்டு அசுத்தங்களை
வாய்மை சவுக்காரத்தால்
ஒழித்தொழிப்போம்...
காசு,சாதி என்று
விழலுக்கு நீர் பாச்சாமல்
விழிப்போடு ஓட்டுப்போட்டு
கழனிக்கு நீர் பாச்சுவோம்
அப்போது
மாற்றத்தின் காற்று மனக்கும்...
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள அன்பு மகன் தியாக.இரமேஷ்க்கு வாழ்த்துகள்!
அன்புடன்.......அம்மா....வள்ளியம்மை சுப்பிரமணியம்


0 comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்