நன்றி உரை;----செல்வன் -ஸ்ரீராஜ் சத்தியகீர்த்தி
முதலில்......யாழ்ப்பாணம்- சுளிபுரம்- விக்ரோறியாக் கல்லூரியின் மாலை அமுத நிகழ்வுக்கு நன்றிஉரை கூற என்னை அழைத்தமைக்கு எனது இதயபூர்வமான நன்றியைக் கூறிக் கொள்ளுகின்றேன்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்காக ஏற்கெனவே உங்கள் வேலைகளை ஒழுங்கு படுத்தி வருகை புரிந்திருக்கிறீர்கள். ஆகவே, உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியுரை கூறவேண்டியது எமது கடமையாகும்.
இந்த மாலை அமுது நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வந்திருந்து மங்கள விளக்கேற்றும் வைபவத்தைத் தொடக்கிவைத்த திருமதி - உஷாதேவி கெளரீஸ்வரக்குருக்கள் அவர்களுக்கும், அதே மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து செய்த முன்னாள் அதிபர் -உயர்திரு- க- அருணாசலம் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய பழைய மாணவர்கள் உயர்திரு சதானந்தவேல், உயர்திரு ராஜேந்திரன், உயர்திரு நித்தியானந்தமனுநீதி அவர்கட்கும்..முதற்கண் நன்றி உரையைச் சமர்ப்பிக்கின்றேன்.
அடுத்ததாக,................பாடசாலைக்கீதம் பாடிய திருமதி - ரோகிணி திருநீலகண்டன் மற்றும் மாணவமணிகளுக்கு, எமது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்ளுகின்றேன்.
மேலும்........வரவேற்புரை வழங்கிய செல்வி- ருக்சிகா இளங்குமரன் அவர்களுக்குப் பாராட்டுடன் கூடிய நன்றியுரை உரித்தாகட்டும்.
அடுத்ததாக,................வரவேற்பு நடன விருந்தளித்த, நடனாலயக்கல்லூரி -ஆசிரியை திருமதி- மீனா இளங்குமரனுக்கும், தன் திறமையை வெளிப்படுத்திய செல்வி- கவிப்பிரியா அருணகிரிநாதன் அவர்களுக்கும் எமது மனமகிழ்வான நன்றியுரையைச் சொல்லிக் கொள்ளுகின்றேன்.
அத்துடன்............ காற்றில் மிதந்து வந்து எமது காதுகளையும், மனதையும் நெகிழ்வித்த இன்னிசை வழங்கிய சாதகப்பறவை இசைக்குழுவினரான, திருமதி பிரியா சதாசிவம், திரு-செல்வகுமார், திருமதி ரூபா பகீரதன் முதலியோருக்கு .. நன்றியுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.
அடுத்ததாக....................... இன்றைய வைபவத்திற்கு பிரதான ஆதரவை வழங்கிய “ஆதீஷ்” தங்க நகைமாளிகை உரிமையாளர்களுக்கு, அவர்களது வள்ளல் தன்மையை மெச்சி நன்றியுரையைக்
கூறிக்கொள்ளுகின்றேன்.
மேலும்........இந்த நிகழ்ச்சிக்கு உன்னதமான ஒலி அமைப்பை இலவசமாகத் தந்துதவிய திரு- பகீரதன் மற்றும் திருமதி பிரியா சதாசிவம் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய நன்றியுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.
அடுத்ததாக...................மாலை அமுது மலர் வெளியிட விளம்பரங்கள் மற்றும் வாழ்த்துச்செய்திகளை மிகுந்த பிரயாசத்துடன் பெற்றுத்தந்தவர்களுக்கு மனமகிழ்வுடன் நன்றி கூறுகின்றேன்.
மேலும்........மாலை அமுது மலரை வடிவமைத்த திரு- கதிர் அவர்களுக்கும்,.......அவரது கைவண்ணத்தையும், மனவண்ணத்தையும் பாராட்டி நன்றி கூறுகின்றேன்.
அத்துடன்............மாலை மலரை அழகுற அச்சிட்ட “ஞானம் ஆட்ஸ்” நிறுவனத்தினருக்கு உங்கள் சார்பாக நன்றிகூறுகின்றேன்.
அடுத்ததாக............நிகழ்ச்சியைச் சிறப்புற நடாத்துவதற்கு இந்த மண்டபத்தைத் தந்துதவிய கே-சி- கவுன்சில் திரு-ஜோன் அவர்கட்கு, சபையோர் சார்பாக நன்றியைக் கூறிக் கொள்ளுகின்றேன்.
விசேடமாக கெளரவிப்பு....நடாத்துவதற்குதவிய திருமதி -தேவி- ராஜேந்திரன் மற்றும் செல்வி.- ரம்யா ஈஸ்வரநாதன் அவர்களுக்கு அன்புடன் நன்றி கூறிக் கொள்ளுகின்றேன்.
மேலும்........எமது நிகழ்ச்சியை விளம்பரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறிய ஊடகங்களான ஈழமுரசு பத்திரிகை, தமிழ் ஓசை FM 92.3 வானொலிக்கும், சங்கநாதம் FM 97.1 வானொலிக்கும் நன்றிகூறக் கடமைப் பட்டுள்ளோம்.
அடுத்ததாக............இராப்போசனத்தை சுவையாகத் தயாரித்து வழங்கிய “ஓம் எலெக்றிக்” ஸ்தாபகர் திரு- ராஜா , திரு- பாலா மற்றும் இவர்களுடன் பழையமாணவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகட்டும்.
மேலும்........அதிஷ்டச் சீட்டுக்குப் பரிசுகளைத் தந்துதவிய கலாநிதி- சிவானந்தன் அவர்கட்கும்,திரு-திருநீலகண்டன் அவர்கட்கும். திரு- நித்தியானந்தமனுநீதி அவர்கட்கும்..நன்றி!
அடுத்ததாக.............. நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செல்வி.- யாதனா கெளரீஸ்வரக்குருக்கள் மற்றும் செல்வி.- ஸ்ரீரஞ்சனி சத்தியகீர்த்தி அவர்கட்கும் நன்றி கூறிக் கொள்ளுகின்றேன்.
பங்கு பற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனி பெயர் குறிப்பிட்டு நன்றி கூற எனக்கு இன்னும் வயதுத் தகுதி கிடையாது. ஆதலால் ஒருவரும் குறை கூற மாட்டீர்கள். அத்துடன்.....விசேடமாக நன்றி கூற வேண்டியதை கூறாது விட்டால்...நன்றிஉரை நிறைவு பெறாது.
இந்தவிழா இவ்வளவு சிறப்புற ஓடியாடி உழைத்த அனைத்து நல்லுள்ளங்கட்கும், வருகை தந்து நிறைவுகண்ட தமிழ்நெஞ்சங்களுக்கும்....... நிகழ்ச்சிக்கு நிதியுதவி, சரீர உதவி நல்கிப் புகழ் விரும்பாது ஓரமாக ஒதுங்கி நிற்கும் பெரியோர்களுக்கும். தாய்மார்களுக்கும், என்போன்ற மாணவ , மாணவிகளுக்கும் நன்றிகூறி.....
ஈற்றில்.......,மண்டபத்தைத் திரும்பவும்சுத்தம் செய்யக் காத்திருக்கும் கடமைவீரர்களுக்கும் அன்பைக் கூறி எனது நன்றிஉரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.!


0 comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்