Sunday, July 3, 2011

உயர்திரு- வெங்கட்ராமன் ஐயர் அவர்களின் 63ம் பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள்.........

உயர்திரு- வெங்கட்ராமன் ஐயர் அவர்களின் 63ம் பிறந்தநாள் 06-07-2011
------------------------------------------------------------------------------------------------------------

சிங்கப்பூர் -தெம்பனீஸ்ல் தனது 62ம் பிறந்தநாளை 06-07-2010ல் கொண்டாடிய ஐயர் அவர்களை வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப் பாக்கள்;------

                                                                                            ----------------------------------

சுந்தர - மீனாட்சி சுற்றியுள்ள பாசத்திலே

சந்ததி பெருகிடச் சலனமே இல்லாமல்

வந்தனை “ஹேராம்” வாயிலே உதிரவே......

எந்தனுக்குத் தம்பியான வெங்கட்ராமன் வாழியவே!



சத்தியவான் உயிருக்காகச் சாவித்திரி வாதாடினாள்.

நித்தமும் அரசாங்க நியதிக் கடமைகளில்.......

மொத்தமாய்க் கவனத்தை முழுவதும் செலுத்துகிற..........

பத்தினியைத் துணையாக்கிய வெங்கட்ராமன் வாழியவே!



அமெரிக்கப் போஸ்டனில் அருமைமகள் லக்ஷ்மியும்

அமைதியான அல்பனியில் வித்யாவும் வீற்றிருக்க......

சீருறு உமாவுடன் சின்னமகள் காயத்ரிக்கும்.........

பேருறு தந்தையானார் வெங்கட்ராமன் வாழியவே!



இரக்கமான இராஜேசும் கிருபையுள்ள கிருபாவும்

குதூகலக் குக்ஷ்க்ஷாக்ராவும் “மாமா” எனஅழைக்க.....

ஆதர்ஜும் நிக்கேலும்.......ப்ரியா ஸ்ரேயாவும்.......

ஆதரவுத் தாத்தாவான வெங்கட்ராமன் வாழியவே!



அறுபத்தி இரண்டாம் வயதினிலே அடிவைத்தார்

உறுதியான சிங்கப்பூர் உயர்ந்த நற் பூமியிலே

மறுவில்லாச் சந்திரன்போல் மங்களமாய்ப் பரிணமிக்கும்

பொறுப்புள்ள தலைவனான வெங்கட்ராமன் வாழியவே!

                                                                                  அன்புடன்,

                                                                                           அக்கா.(சிங்கப்பூர்)

0 comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo above to download the FULL VOLUME in PDF Size 10MB