Saturday, August 20, 2011

சிங்கப்பூரின் உதவியால்............. சிரித்து மகிழும் யாழ் நூலகக் குழந்தைகள்

 
 
சிங்கப்பூரின் உதவியால்............. சிரித்து மகிழும்  யாழ் நூலகக் குழந்தைகள்..................
                                                       ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
யாழ்ப்பாணப் பிரதேச முற்றவெளிக் கயலில்
பாழடைந்து பலகாலம் பயனற்ற அறிவகத்தை
மீள் உயிர் கொடுத்ததோடு சிறுவர்களின் சீரமைப்பும் -சொல்லி 
மாளாது சிங்கப்பூர்த் தன்னார்வ உதவிதன்னை!
 
எத்தனையோ ஆண்டுகளாய் இயங்காத நூலகத்தை
அத்தனை அழகாகத் திரும்பவும் உருவாக்க......
ஒத்துழைப்பும் வழங்கி நேரில்போய்ப் பார்த்துவந்து.....
மெத்தவும் சிறப்பாக உலகமே வியந்துரைக்க.......
 
நாம்மட்டும் உயர்ந்தால் போதாது மற்றவரும்
தாம்நன்றாய்க் கற்று நலமடைய வேண்டுமென....
சான்றோரின் நல்லெண்ணம் செயலாக நிறைவேறி..
மீண்டுமந்த நூலகம் மிளிர்ந்துதலை நிமிர்கிறது!
 
உலகம் முழுவதும் பரந்துவாழும் மனிதருக்கு...
அலைகின்ற இயற்கையிடர் தாக்கிடும் போதினிலே.....
வலதுகை செய்யுதவி இடதுகை அறியாமல்
சிலவல்ல: பலசேவை செய்திருக்கும் சிங்கப்பூரே!
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

0 comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo above to download the FULL VOLUME in PDF Size 10MB