Sunday, December 23, 2012

மக்களால் உயர்ந்த மாதரசி திருமதி. சோமசுந்தரம் - சற்குணம்

மக்களால் உயர்ந்த மாதரசி
      சோமசுந்தரம் - சற்குணம் 
          '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'சோம சுந்தரத்தின் வாழ்க்கைத் துணையான மாதரசி
தேவ என்று தொடங்குகிற நால்வரின் தாயரசி
தாமாக முன்வந்து சேவைசெய்த சிவலிங்க அக்காரசி
தாயாரே மகளாகிக் குடும்பத்தைப் பராமரித்த பொன்னரசி.

வழக்காடு மன்றமும் வைத்தியசாலை வளாகமும்
புழங்கும் மக்களுக்குச் சேவைசெய்யும் பண்பாடும்
பழக்கமான பல்கலைக் கழகமும் ஒளிவழியும்.......
அழகாக உன்வாரிசுகள் திறமையுடன் கால்பதித்தார்.

மூத்தவர் சட்டத்தரணி முற்போக்கிவர் உடன்பிறந்தோர்
மாற்றுக் குறையாத கல்விவளம் பெற்றதனால்......
சேற்றில் முளைத்த செந்தாமரைப் புகழுடனே
ஆற்றல் பலபடைத்து அன்னையை உயர்த்தினாரே.

சமுதாய அக்கறையும் சமூகத்தின் விழிப்புணர்வும்
கமுகம் பூப்போன்ற கனிவான புன்சிரிப்பும்
குமுதமாய் அல்லி,முல்லை,தாமரை சேர அமுதா(ய்)
முகம் மலரும்  சாதனாவுக்கும்  பூட்டியானார்.

-வள்ளியம்மை சுப்பிரமணியம்

திருமதி. சோமசுந்தரம் சற்குணம் (குணதங்கம்) அவர்கள் தேவராசா (சட்டத்தரணி), தேவராணி (கொழும்பு), தேவமலர் (தாதி உத்தியோகத்தர்), தேவகுமார் - கனடா ஆகியோரின் அன்புத் தாயாரும்;

மகாதேவர் (சிவலிங்கம்-கனடா), சிவபதமெய்திய பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;

கலாலஷ்மி, சபாநாயகம், பரமசிவம், வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்;

ஜனமகன், திருமதி அபிஷா குமுதன், தீபவதனன், தீபமேனன், டார்வின், தனுஜன், வினோஜா, அனுஜன், மயூரன், மதுஷன், திவ்ஜா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்;

ரனிஷ்கா, தெஷாந்த், சாதனா, ஆகியோரின் அன்பு பாட்டியுமாவர்

Thursday, December 6, 2012

கே ஏ சுப்பிரமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டம்

கடந்த சனிக்கிழமை 01.12.2012 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 23வது நினைவு தினக்கூட்டம்  தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில்பேராசிரியர்சி.சிவசேகரம் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.


 தோழர் கே.ஏ சுப்பிமணியம் அவர்களின் 23 ஆவது நினைவுதினக்கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள் உரையாற்றுவதையும், பேராசிரியர் சி.தில்லைநாதனும்,  முற்போக்கு போராளியான தோழர் க.தணிகாசலமும் ( தாயகம் ஆசிரியர் ) அமர்ந்து இருப்பதையும் காணலாம். 


தோழர் சிவ .இராஜேந்திரன், தோழர் கே.ஏ .சுப்பிரமணியத்தின் நினைவுகளை மூன்றாக வகைப்படுத்திப் பேசினார்.  தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியமும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்

Wednesday, December 5, 2012

பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் - 1991 /1992

பேராசிரியர் க. கைலாசபதி 9து நினைவு தினம் 05/12/1991

தலைமை பேராசிரியர் சி. தில்லைநாதன் 
நினைவுப்பேருரை சி.கா. செந்திவேல் அவர்கள்,


                       தேசிய கலை இலக்கியப் பேரவையின் சில வெளியீடுகள்
        பே.சு.மணி ஐயா அவர்கள் நிகழ்ச்சி                  பேராசிரியர் க. கைலாசபதி 10து நினைவு தினம் 16/12/1992

                                 தலைமை பேராசிரியர் சி. தில்லைநாதன்

நினைவுப்பேருரை ந. இரவீந்திரன், 
 வெளியீட்டுரை சோ. தேவராஜா


Wednesday, November 21, 2012

1978-1981 இல் கே ஏ சுப்பிரமணியத்தினால் வெளியிடப்பட்ட Red Banner ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு பிரதி அண்மையில் கிடைக்கப்பெற்றேன். உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்............


1978-1981 இல் கே ஏ சுப்பிரமணியத்தினால் வெளியிடப்பட்ட Red Banner ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு பிரதி அண்மையில் கிடைக்கப்பெற்றேன். உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்............                                    Please click her to watch Red Banner Video Clip Length: 2 Minutes


http://www.getcited.org/pub/101005741 

Sunday, November 18, 2012

அப்பா அம்மாவுக்கு கட்டிய அரிவாளும், சம்மடியும் தாலி

அப்பா அம்மாவுக்கு கட்டிய அரிவாளும், சம்மடியும் தாலி.
Amma's Thaali

வசிப்பதற்கு வாடகைவீடு எடுக்கப் பட்ட சிரமங்கள் ஏராளம்!எழுதி முடியாது ....திருமணத்தை அவர் (கே-ஏ-சுப்பிரமணியம் அவர்கள் )எவ்வளவு புனிதமான நிகழ்வாகவும், வரலாற்றுப் பெருமை மிக்க
சம்பவமாகவும், சிக்கனத்துக்குள் கணக்கிட்டு....உலகினை உருவாக்கும் சிற்பிகளின் இதயத்தை 
ஈர்க்கவேண்டுமென்று கருத்தைக் கொண்டிருந்தாரென்பதை இன்று குறிப்பிடுகின்றேன்;---
                                  இலங்கை வாழ்- அதிலும் யாழ்ப்பாணப் பெண்களின் திருமாங்கல்யம் பாரப்பரிய
முறைப்படிதான் செய்யப்படுகிறது.எனது தாயாரிடமும், அவரது தாயாரிடமும் தொன்று தொட்டுவந்த மாங்கல்யங்களே இருந்தன. “நமது விவாகத்திற்குத் தாலி கட்டுவதானால் நான் எனது
கட்சியின் சின்னமாகிய அரிவாள், சம்மட்டியைத்தான் செய்விப்பேன் “ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார்.ஆரம்பத்தில் மறுப்புக் கூறினாலும் “உங்கள் கொள்கைக்கு நான் மதிப்பளிக்கிறேன்.நீங்களும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். திருமணத்தில் தாலியை திருமதி- புஸ்பலீலா முருகேசு அவர்களின் கையால்
வாங்கி என்கழுத்தில் பூட்டினார்.அவர் யாழ்/ போதனா வைத்திய சாலையில் கடமையாற்றியவர். 
எமது திருமணப்பதிவுக்கும்,திருமணத்துக்கும் நல்லூர்- தோழர்- இராசய்யா அண்ணர் தான் தனது
வாகனத்தையும்,நேரத்தையும் தந்துதவினார்.திருமணப்பதிவு நல்லூர்-இலட்சுமி அம்மையாரின்
நெறியாள்கையில் நடைபெற்றது.தாலி முத்திரைச் சந்தையடி தங்கச் சிற்பி திரு-நடராசா அவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது.* இந்த இடத்தில் அந்தத் தங்கச் சிற்பியைப் பற்றிக் கூறியே ஆகவேண்டும்,.அவர் அதி அற்புதமான ஒரு படைப்பாளி.1952ம் வருடம் பிரித்தானிய இளவரசி எலிசபெத் அம்மையார் இலங்கை வந்திருந்தார். அவருக்கு அன்பளிப்பாகக்
கொடுப்பதற்கு பல விற்பன்னர்கள் தங்கள் கைத்திறனை வெளிப்படுத்தி பல ஆக்கங்களை உருவாக்கினர்.திரு-நடராசா அவர்கள் தங்கத்தால் ஒருகடிகாரத்தைச் செய்து வரவேற்புக்குழுவிடம் ஒப்படைத்தாராம்.அம்மையார் அவர்கள் நாட்டிற்கு வந்திறங்கியவுடனே அவரது அன்புத் தந்தையார் காலமாகிய செய்தியும் வந்ததால் நாடு திரும்பி விட்டாராம்..தந்தையின் மறைவுக்குப் பின்னர் எலிசபெத் அம்மையார் மகாராணியாகி  முடிசூடினாராம்.*
செய்யப்பட்ட தாலியுடன், எனக்குத் தெரியாமலே அரைத் தங்கத்தில் ஒரு மாற்று மோதிரமும் செய்யப்பட்டது.அப்போது ஒரு தங்கத்தின் விலை ரூபா 90/= மாத்திரம் தான். மோதிரத்தில் “ம “ என்ற தமிழ் எழுத்து இருந்தது.அக்கால நாகரீகம் ஆங்கில எழுத்தில் தான் மாற்று மோதிரம்
செய்விப்பார்கள்.அவர் ’மணியம்’ நான் ‘ மணி’  அதனால் நான் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை.’ம’ வுக்கு விளக்கம் என்னவென்று கேட்டார். ‘ எங்களுடைய பெயர் தான்” என்று
 சாதாரணமாகக் கூறிவிட்டேன். அவரின் விளக்கத்தை நீங்களும் செவிமடுங்கள்;----
*ம* என்பது *மனிதன்*, அவன் பிறந்த *மண்* அவனுள்ளத்தை  ஏற்றுக் கொண்ட *மனம் * அவனைப் புரிந்து கொண்ட வாழ்வு தரும் *மணம்* அதனைத் தொடர்ந்துவரும் * மக்கள்* மக்கள் பலத்தால் வரும் * மகிழ்ச்சி* மண்ணிலே வாழ்ந்தகாலத்தில் அவனது செயற்பாடுகள் ....நடைமுறைகள்....
அடக்கு முறைக்கு குரல் கொடுக்கும் * மறுப்பு * அதனால் ஏற்படும் * மரணம்* கூட *ம* வில் தானே
ஆரம்பிக்கிறது.” என்று பெரிய விரிவுரையே ஆற்றி விட்டார்.........( தொடரும் )
கொண்ட வாழ்வு  இணையும் * மணம்*

Saturday, November 17, 2012

கே ஏ சுப்பிரமணியம் ( 1931 March 5 - 1989 November 27)

கே ஏ சுப்பிரமணியம் ( 1931 March 5 - 1989 November 27) 

கொல்லங்கலட்டி  அம்பலப்பிள்ளை சுப்பிரமணியம்

 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்  நீண்டகால இடதுசாரிச் செயற்பாட்டாளரின் நினைவு 

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பொதுவுடைமைவாதிகள் இருந்து வருகிறார்கள். அவர்கள் நாடு இனம் நிறம் மொழி பண்பாடு போன்றவற்றால் வேறுபட்டவர்களாயினும் மாக்சிச உலக நோக்கினாலும் மாக்சிசம் லெனினிசம் என்றும் பொது மொழியினாலும் ஒன்றுபட்டவர்கள். அதனால் அவர்கள் சர்வதேசியவாதிகள். இவை அவர்களது வாழ்விலும் அன்றாடச் செயல்களிலும் கெட்டியாகப் படிந்திருப்பவை. அவர்களது இலக்கும் பயணமும் முழு மனிதகுல விடுதலை நோக்கியதாகும். அதனைச் சொந்த நாட்டினதும் மக்களினதும் விடுதலையில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பயணத்தின் முதல் அடியினை ஒவ்வொரு பொதுவுடைமைவாதியும் தத்தமது குடும்பங்களில் இருந்தே எடுத்து வைத்தே ஆரம்பிக்கிறார்.
அத்தகைய பொதுவுடைமைவாதிகளில் ஒருவராகவும் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் வாழ்ந்து செயலாற்றி மறைந்தவர் தோழர் கே.. சுப்பிரமணியம். தோழர் மணியம் அல்லது மணியம் தோழர் எனக் கட்சித் தோழர்களாலும் மக்களாலும் தோழமையுடனும் அன்போடும் அழைக்கப்பட்டவர் கே.. சுப்பிரமணியம். அவரது வாழ்வும் பணியும் நினைவும் விரித்து நோக்கப்பட வேண்டியது. அது விரைவில் செயலாக்கம் பெறும். இதனை அதற்கான சிறு குறிப்பு என்றே கொள்ளப்பட முடியும்.
தோழர் மணியம் சுமார் நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர். அந்த உழைப்பு தனிமனித
வட புலத்துச் சமூகச் சூழல் மிகவும் சிக்கலானதும் சில வேளைகளில் மிகப் பொல்லாததுமாக இருந்து வந்ததாகும். அத்தகைய சமூக-குடும்பச் சூழல் விதிக்கும் எல்லைகளையும் சமூக பண்பாட்டு விழுமியங்களின் பழைமைவாதப் பிற்போக்குத் தன்மைகளையும் மீறி ஒருவர் பொதுவுடைமைவாதியாகவும் அதிலும் முழு நேர ஊழியராகவும் வருவதென்பது துணிவும் தூர நோக்குமுடைய ஒரு சிலருக்கே முடியக் கூடியதாகும். அது மட்டுமன்றித் தான் வரித்துக் கொண்ட கொள்கை நடைமுறைகளை ஏற்கனவே கெட்டியாக உள்ள சமூக மத பண்பாட்டு நடைமுறைகளுடன் எச் சந்தர்ப்பத்திலும் சமரசத்திற்கு உட்படுத்தாது வாழும் வாழ்க்கையானது தான் அற்புதமான வாழ்க்கையாகும். அவ்வாறே ஏகாதிபத்தியம் காலத்திற்குக் காலம் விரித்து வரும் நச்சுப் பண்பாட்;டங்கங்கள் என்ற வலைகளில் வீழ்ந்து கொள்ளாது இவ்வாறு தான் வாழ வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாய் வாழ்ந்து சென்றவரும் தோழர் மணியம் என்பது நினைவு கூரப்பட வேண்டியதாகும்.
அவர் நிலவுடைமைக் கருத்தியலும் சிந்தனையும் நடைமுறைகளும் கொண்ட பழைமைவாத கிராமச் சூழல் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனால் அவர் மாக்சிச உலக நோக்கை தெளிவாகவும் உறுதியாகப் பற்றி உள்வாங்கிக் கொண்டமையால் பழைமைவாதத்தை முற்றாகக் களைந்து நின்றார். அதனாலேயே தற்பெருமை, தன்முனைப்பு, புகழ் நாட்டம் பதவி மோகம், பணம் சேர்ப்பு, ஆடம்பர வாழ்வு, அனைத்தையும் துறந்ததொரு வாழ்வை மேற்கொண்டார் தோழர் மணியம். இவ்வாறான ஒரு வாழ்க்கை முறை அவருக்கு பல்வேறு வாழ்க்கைக் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்தது என்பது உண்மையே. இல்லாமையும் பற்றாக் குறையும் காரணமாக அடிப்படைத் தேவைகளின் ஆகக் குறைந்தவற்றைக் கூட அவரது குடும்பம் பெற முடியாமல் இருந்தது உண்மையே. ஆனால் தானே விரும்பி மணம் முடித்; மனைவி குடும்பத்தின் வாழ்வுப் பாரத்தைச் சுமந்து தோழர் மணியம் வழி நடந்த பொதுவுடைமை இலட்சியப் பயணத்தில் கூடவே வழி நடந்தார் என்பது குறிப்பிடக் கூடியதாகும். ஒரு ஆணின் வெற்றிக்குப் பெண் பின்னால் இருக்கிறாள் என்று பொதுவாகக் கூறப்படும் கூற்று ஆணாதிக்கம் மிக்கதொன்றாகும். ஆனால் ஒரு பொதுவுடைமைவாதியின் இலட்சியப் பயணத்திற்கு துணையாகவும் இணையாகவும் வழிநடப்பது என்பது மாக்சிச லெனினிச அறம் சார்ந்த ஒன்றாகும். அதனைத் தோழர் மணியத்தின் வாழ்விற் காண முடிந்தது.
தோழர் மணியம் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவராக இருந்தார் என்பதற்கு அவரது காலத்தில் இடம்பெற்ற வெகுஜன தொழிற்சங்கப் போராட்டங்கள் சான்று பகரும். அதே வேளை கட்சியை அமைப்பு ரீதியாகக் கட்டியெழுப்பதிலும் வழிகாட்டும் பாத்திரத்தை வழங்கி வந்தமை என்றும் நினைவுக்குரியவையாகும். குறிப்பாக இலங்கையில் பொதுவுடைமை இயக்கப் பரப்பில் திரிபுவாதம், அதிதீவிரவாதம், தனிமைவாதம், சீர்குலைவுவாதம் போன்றவற்றுக்கும் அப்பால் நிதானமான நேர்மைமிக்க ஒரு மாக்சிச லெனினிசக் கட்சியின் அவசியத்தை மாஓ சேதுங் சிந்தனை வழிகாட்டலில் கட்டியெழுப்புவதில் உறுதியாக இருந்தவர் தோழர் மணியம். தூர நோக்கிலான அவரது வழிகாட்டலிலேயே இன்றைய புதிய ஜனநாயக கட்சி உறுதியான மாக்சிச லெனினிசக் கட்சியாக வளர்ந்து வந்திருக்கிறது. அத்தகைய வளர்ச்சிக்கு தோழர் மணியத்தின் பங்களிப்பு பாரியதொன்றாகும்.
தோழர் மணியம் தனது 59வது வயதில் 1989ம் ஆண்டு நவம்பர் 27ஆந் திகதி இயற்கை எய்தினார். அவர் கட்சியின் வாழ்வோடும் எதிர் கொண்ட போராட்டங்களோடு மட்டுமன்றி ஏற்பட்ட உள், வெளிக் காயங்களுடனும, நோய்களோடும் போராடியவாறே உயிர் நீத்தார். இறுதி நேர வாழ்வின் போதும் கட்சி, மக்கள் போராட்டங்கள் போன்றவற்றின் எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனுமே உயிர் நீத்தார். அவரது நம்பிக்கை வெறும் தனிமனித நண்பர்கள், குடும்பத்தவர்கள் என்போருக்கு ஊடாக எதிர்பார்த்தவாறே இயற்கையுடன் கலந்தார். அந்த நம்பிக்கைக்கு என்றென்றும் சேவை செய்வதில் நம்மை மேலும் அர்ப்பணிப்போமாக!

http://ndpsl.org/seithikal2d.php?newsid=91102  
Written in 2009 using Kalyani Tamil Font 


தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF