Wednesday, October 29, 2014

தோழர் கே ஏ சுப்பிரமணியம் உரையாடிய சில பகுதிகளின் காணொளிகள் 1982-1989Message to Dispora by K.A.Subramaniam in 1982 Length:2 Minutes

'சத்தியமனையில் '1982அம்  ஆண்டு , மே -ஜூன் காலப் பகுதியில் இத்தாலியில் இருந்த தோழர் தேவகுமாரனுக்கான காணொளி உரையாடலின் போது தோழர் கே ஏ சுப்பிரமணியம் உரையாடிய சில  பகுதிகளின் காணொளி உரைவடிவம் .அவருடன் தோழர்கள் சோ .தேவராஜா , சி.கா.செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

"இலங்கையிலிருந்து போயிருக்ககூடிய தமிழ்த் தோழர்கள் ,அங்கிருக்கக்கூடிய சிங்களத் தோழர்கள் ஒன்றுபட்டு தேசத்தின் ஐக்கியத்தையும்,,சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்க்காக கூடப் பாடுபடவேண்டும் .மற்றது இங்கே உண்மையிலேயே பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் உழைப்பு பிரச்சனை சம்பந்தமாகத்தான் அவர்கள் போகவேண்டி வந்தது.

 சரி அவை அந்த நிலைமையை எடுத்திருந்தாலும் கூட, எதிர்காலத்திலையும் அதை நாட்டின்ரை , தேவைக்கும் நன்மைக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் அவை உழைப்பினம் என்று  நம்பிக்கை .ஆனால் அவை செய்வினம் என்று தான் நம்புகின்றேன் 

குமார் இப்போ இரண்டாவது முறை வந்து போய் இருக்கிறார். அவருக்கு இத்தாலி அனுபவங்கள் கூட இருக்கும் . இத்தாலி நாட்டிலை சரியான மாற்றங்கள் எற்பட்டு இருக்குது. அவையின்ரை  பொருளாதரா ,சமூக அபிவிருத்திகள் கூட நடந்திருக்கிறது. இன்னும் இங்கிருந்து போனவை இத்தாலி நாட்டு பொருளாதரத்தை கட்டி எழுப்புவதற்கும் , அதன்  சுதந்திரத்தை  பாதுகாப்பதறக்கும் அங்கே  அவை பாடுபடும் அதே வேளை , எங்கடை நாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கின்றதற்கும்  ,அதின்றை  பொருளாதரத்தை கட்டி எழுப்புவதிலையும்  அவை கூடுதல் பங்கு வகிக்கவேண்டும் . அதற்க்கு அவை அங்கேயுள்ள இலங்கை இளைஞர்களை அணிதிரட்டுவது  அவைக்கு கல்வியறிவைக் கொடுக்கிறது , நாட்டு நிலைமைகளை விளங்கப்படுத்துவதன் மூலம் அவை கூடிய சேவையை ஆற்ற முடியும் !"

Wedding Greetings by K.A.Subramaniam in 1984 Length:2 Minutes


 "திரு. சோமசுந்தரம்  தேவகுமார் -  திருமதி வள்ளிநாயகி ஆகியோரின் திருமண வைபவம் இங்கு நடைபெறுகிறது . இவர்களுடைய வாழ்க்கையில் , இவர்கள் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கிறார்கள் என்பது அர்த்தம் . வாழ்க்கை ஒரு போராட்டம். இவர்களுடைய வாழ்க்கையில் முதலாவது கட்டம் தமது பாடசாலைக்  கல்வி- சமூக ஒடுக்குமுறைக்கெதிரான  போராட்டம், வறுமைக்கு எதிரான போராட்டம் என இவர்கள் இருவரும் தனித் தனியாக கடந்து வந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் வாழ்க்கைத் துணை என்ற ஒரு நிலைப்பாட்டில் இன்று தமது வாழ்க்கையை ஒருமுகப்படுத்தி முன்னெடுக்க முன்வருகிறார்கள் .ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஒருவரை ஒருவர் சார்ந்து ,தமது வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளை ,இவ்வுலகம் முழுமையிலுமுள்ள நிலைமைகளைப் பார்த்தால்,உலகத்திலுள்ள நாடுகள், தேசங்கள் சுதந்திரத்தை காப்பற்றுவதற்க்கும் , நாடுகள் விடுதலையை அடைவதற்கும் மக்கள் புரட்சியை வேண்டியும் போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்துடன் உங்கள் போராட்டம் இணையட்டும் உலக சமாதானந்த்திற்க்கும் ,மனித குல நல்வாழ்விற்குமான பெரும் போராட்டத்தில் உங்கள் பங்கும் இணையட்டும் ! என வாழ்த்தி மங்களகரமான இந்நாளில் ,மணமக்கள் சகல வாழ்வையும்  பெற்று ,பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் !!! "-கே ஏ சுப்பிரமணியம் 07-02-1984

May Day Rally Speech in 1986 Length:2 Minutes
1986
ம் ஆண்டு நல்லூரில் இருந்து ஆரம்பமாகி ----- திருநெல்வேலியில் நடைபெற்ற ஊர்வலமும் கூட்டமும் .யாழ்  நகரில் மிகுந்த பதட்ட சூழ்நிலையில் வேறு  எந்த கூட்டமோ, ஊர்வலமோ நடைபெறாத நிலையில் நடந்த ஒரே ஊர்வலத்தினை  இடது கம்யூனிஸ்ட் கட்சி   மிக எழுர்ச்சியுடன் நடாத்தியது. அவ் ஊர்வலத்திற்கும் ,கூட்டத்திற்கும்  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்கள் தலைமைதாங்கி நடத்தினார் .அக்  கூட்டப் பேச்சு இது...............

"ஜெயவர்த்தனாவும் அவருடைய எடுபிடிகளும் சமாதனம் வேண்டும் வீதியில்  அமைதி வேண்டும் , நாட்டில் அமைதி வேண்டும் என்ரெல்லாம் தினசரி பத்திரிகைகளில் குரல் கொடுப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மறுக்கப் படும்போது ,நீதி மறுக்கப்படும்போது சுதந்திரம் மறுக்கப்படும்போது நிச்சயமாக பலாத்காரம் இருக்கத்தான் செய்யும் . பலவந்தமாக தங்களது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. ஆகவே நீதியைப் பற்றிப் பெருமைப்படும் அல்லது நீதி வேண்டும் என்கின்ற ஜெயவர்த்தனாவோ, அல்லது அமைதி வேண்டும் என்கிற ஜெயவர்த்தனவோ இந்த நாட்டில் நீதியையும் ,சுதந்திரத்தையும் முன்னர் முதலாக  வழங்கி இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழ் மக்களுடைய உரிமைகள் வழங்கப்படவேண்டும் 
அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் நாட்டில் அமைதியைக் காண முடியும். ஜெயவர்த்தனா பேச்சுவார்த்தைக்கு முன்வருவதாகக் கூறி ,இவவளவு காலத்தையும் இழுத்தடித்து இருக்கிறார்..இன்னும் தான் அவர்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு முன்வந்தால் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம்  தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் ,வடக்குக் கிழக்கு பிரதேசங்கள் அவர்களுடைய தாயகமாக அங்கீகரிக்கப்படவேண்டும். அந்த அடிப்படையில்  பிரதேச சுயாட்சி வழங்கப்படவேண்டும். அதுதான் தமிழர்களுடைய  கோரிக்கைகள் ஒரு பகுதியாவது  அடைவதற்கு அது ஒரு முன்தேவையாக அமையும்."
அங்கு அலை என  திரண்ட மக்கள் சுடு வெய்யிலையும் பொருட்படுத்தாது கோசங்களை எழுப்பியவண்ணம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்..அச் சுலோகங்களில் சில இங்கு .............

  • உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் 
  • பாட்டாளி வர்க்கம் பாராளும் வர்க்கம் 
  • புத்தர் சொன்னார் அகிம்சை என்று 
  • ஜே ஆர் சொன்னார் யுத்தம் என்று 
  • நாடு எங்கே போகிறது?
  • யார் யார் பயங்கரவாதி?
  • ஜே ஆர் பயங்கரவாதி 
  • அத்துலத்முதலி பயங்கரவாதி  
  • ரீகன் பயங்கரவாதி 
 
Speech During Presidential Election 1988
Length:2 Minutes
 "
தமிழ் மக்களின் பிரச்சனை எது? எப்படி தீர்வு காணவேண்டும் என்று போராடும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நிற்கிறோமே தவிர சொந்த அபிலாசைகளுக்காகவோ ,வேறு எதற்காவோ நாம்  இங்கு நிற்கவில்லை.. சிறிமாவோ பண்டரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை , இந்திய இராணுவத்தை அகற்ற முயல்வார் என்று நம்புகிறோம் "- கே ஏ சுப்பிரமணியம் 1988 இல் யாழ் / பண்டத்தெருப்பு இந்துக்கல்லூரி மைதானம்

 


May Day Rally Speech in 1989 Length:2 Minutes
 
"பிரேமதாசா அரசு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறதென்றால் ,நாம் ஏற்கனவே கூறிய உண்மை "உண்மைதான்' என்பதை அதன்  விளங்கிக் கொள்ள முடியும் .நாம் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோம் .அதேநேரம் அது பூச்சண்டியாக அமையக்கூடும் .அது உண்மையாக இரு இனங்களும் ,எமது நாட்டில்  சுதந்திரத்துடனும்,  இறையான்மையுடனும் வாழக்கூடியதாd ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும்,பாதுகாப்பதற்கும்  ஏற்ற வழி அமைக்கப்படவேண்டும். அதற்க்கு முன்பாகவே, வெலியோயா தனி மாவட்டமாக அமைப்பதைக் கைவிடவேண்டும்.அத்தோடு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி ,ஏன் முற்றாகவே கைவிடவேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது வலியுறுத்தி நிற்கிறது . இதன் மூலம் தான் பேச்சுவார்த்தைக்கு போகக் கூடிய ஸ்தாபனங்களுக்கும் ,மக்களுக்கும் நம்பிக்கையைத் தரும்.பரஸ்பரம் விடுக்கொடுத்து பேச்சுவார்த்தையை   நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகமுடியும்இதனைவிடுத்து இலங்கை அரசின் விருப்பத்தின் பேரிலோ, இந்திய அரசின் பேரிலோ , ஒருதலைப்பட்ச முடிவுகளின் பேரிலோ ஏற்படுத்தப்படக்கூடிய தீர்மானங்களும் , முடிவுகளும் , ஆயுதங்களும் எமது தேசத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது . இதுவே எமது நிலைப்பாடாகும் ".-கே ஏ சுப்பிரமணியம் 1989


 
 
 
 
 
நாம்
இந்தியாவின்
தலையீட்டை  ஆரம்பம் தொட்டு எதிர்த்து வந்திருக்கின்றோம். இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் என்ற காரணத்தினால் , சில  விட்டுக் கொடுப்பை இலங்கை மக்கள் செய்யவேண்டும். அந்த விட்டுக்கொடுப்பு, இந்தியாவையும் இணைத்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை.“


" இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை அரசு, இந்திய அரசு , ஏனைய விடுதலை அமைப்புகள் மூன்றும் ஒன்றுகதைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வெற்றிகாணக் கூடிய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், அதைவிட்டு ஒன்றிற்கொன்று கழுத்தறுப்பு வேலைகளை செய்வது, எமது நாட்டிற்கும், மக்களுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இந்தியா பற்றிய எமது நிலை ஏற்கனவே நீங்கள் அறிந்ததே , இருந்தும் சிலதை திரும்ப சொல்ல வேண்டும் , ஆரம்பம் தொட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பீட்டர் கெனமன், விக்கிரமசிங்க போன்றோர் தலைமையிலும் சரி, பின்னர் கருத்துவேறுபாட்டு பிரிந்த பின்னரும் சரி 'அந்திய தலையீடு ' பற்றி எச்சரித்தே வந்திருக்கின்றது . இதனை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள் கவனத்தில் கொள்ள தவறிவிட்டன. 1983 இனக் கலவரத்தை சாதகமாக்கி இந்திய தன்னுடைய விஸ்தரிப்பை ஆரம்பித்தது. அதனை இலங்கை அரசும் ஆதரிப்பது போன்றே நடந்துகொண்டது. ஒப்பந்தம்  உருவானது . இது பல வகையிலும் குழப்பமான ஒன்றாகவே உள்ளது. சில விஷயங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கும் , எதிர்காலத்திற்கும் உதவக்கூடிய சில அம்சங்கள் உள்ளன. ஆனால் ஒப்பந்தத்தில் காணப்படும் பெரும்பான்மையான விடயங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சகல இலங்கை மக்களையும் பாதிக்கக் கூடியதே . எதிர்க்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும்.”
  - கே ஏ சுப்பிரமணியம் மருத்துவமனையில்கடும்சுகவீனமுற்றுஇருந்துவெளிவந்து ,யாழ் / ஸ்டான்லிவீதியில் 1989-05-01  மேதினத்திலன்று...............

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF