Monday, December 18, 2017

தோழர் மூ. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எமது செவ்வஞ்சலிகள்

அண்மையில் காலமாகிய மூத்த பொதுவுடமைவாதி தோழர் மூ. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எமது செவ்வஞ்சலிகள்Sunday, December 10, 2017

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களுடைய 28 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களுடைய 28 ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் 


Wednesday, December 6, 2017

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 28வது நினைவுக் கூட்டம்

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி தோழர் கே.ஏ சுப்பிரமணியத்தின் 28வது நினைவுக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில்  
10.12.2017 ஞாயிற்றுக்கிழமை 
பி.ப. 03.30 மணிக்கு நடைபெறும். 

Comrade K.A. Subramaniam: 28th Anniversary Event

10.12.2017 Sunday at 03.30 pm
Venue:
National Arts Council of Literary's
Poet Murugaiyan Auditorium 
(62, KKS Road, Kokuvil Junction, Jaffna)


Saturday, November 18, 2017

Comrade E.T. Moorthy தோழர் திருஞானமூர்த்தி

தோழர் திருஞானமூர்த்தி எம்மை விட்டுப் பிரிந்தார். E T மூர்த்தி என எல்லோராலும் அழைக்கப்பட்டவர். 
காரைநகர் என்ற கிராமத்தை யாரும் மறக்க முடியாது. திண்ணைக்களி சிவன்கோவிலும், 'கசோரினா' பீச்சும் வடமாகாணத்தின் புகழை நிலைநாட்டி நிற்பது போல் ,நடுத்தெரு சம்பந்தர் கண்டி ' நாகலிங்கம் என்பவர் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வேலை பார்த்து நாடு திரும்பியவர். அவரது சகோதரியின் மகன் சிங்கப்பூரிலிருந்து வந்து தாய்மாமன் வீட்டில்
தங்கியிருந்தார். அவரைத் 'திருஞானம்' என்றுதான் அழைப்போம். கம்யூனிச சித்தார்த்ததினால் இழுக்கப்பட்டு தோழர் மணியத்துடன் நெருங்கிப் பழகினார் 
அவர், நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் அவர்களின் மூத்த மகள் வசந்தியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
வசந்தியின் அம்மாவுக்கு , திரு.மூர்த்தி அவர்களின் படிப்பு, ஒழுக்கம், பழக்க வழக்ககள் யாவும் பிடித்திருந்தும், ஆலய வழிபாடு, இல்லாத தால் அது ஒரு மனத்தாக்கமாவேயிருந்தது.அதற்காக, திருஞானம் அவர்கள் தோழர் மணியம் அவர்களிடம் தான் வந்து தனது
லட்சியத்தையும், வசந்தியோடுள்ள காதலைப்பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார்.
இதனால், தோழர் மணியம் வாரத்தில் 2நாட்களுக்காவது , தனதுசொந்த வேலைகளை ஒதுக்கி நவாலிக்குப்போய் வசந்தியின் அம்மாவுடன் கலந்து கதைத்து " மெல்லெனப் பாயுந்தண்ணீர் கல்லையும் உருகப் பாயும்" என்ற முதுமொழிக்கமைய....18 மாதங்களின் பிறகு சம்மதம் தெரிவித்தனர். மூர்த்தி தனது பிடிவாதங்களைக் குறைத்து
கொண்டதனால், நவாலி வீட்டில் சகல சிறப்புக்களுடனும் திருமணம் நிறைவேறியது. எனக்கு மாத்திரம் தான் தெரியும் ' வசந்தி அவர்மேல் வைத்திருந்த காதலின் பெறுமானம் எவ்வளவு ஆழமானது' என்று. ( இப்படி காதலுக்கு உதவிய பல கதைகள் உண்டு செ.யோகநாதன், சின்னத்தம்பி, தேவராஜா... என பட்டியல் நீளும்.)
புதுமணத் தம்பதிகள் முதல் முதலாக எமது வீட்டிற்கு வந்த பின் தான உறவினர் வீடுகளுக்கு சென்றார்களாம். வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள்.பின் கட்சி பிளவுகள், கொள்கை முரண்பாடுகள்,என பிரிந்து நின்ற போதிலும் மாறாத அன்புடன் பழகினோம். அன்பு மறவாத வசந்தி ,அப்பா 1989ல் நோய்வாய்ப்பட்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசனில் தங்கியிருந்த காலத்தில் தானே உணவு தயாரித்து அனுப்புவார்.அவர்களும் மிகச் சிரமத்துடன் வாழ்ந்த காலம். பிற்காலத்தில் புலி அரசியலும், தமிழ்தேசியமும் அவரையும் விட்டு வைக்கவில்லை. 
எங்கள் இரு குடும்பங்களின் உறவும், அன்பும் இன்றுவரை ...பேரப்பிள்ளைகள் பாசப்பிணைப்பாக இருக்கிறது. 
நினைவுகளும் , அன்பும் தொடரும்.........

Friday, June 2, 2017

எனது சின்னப் பேத்தி சிறீரா , விவேக்கின் திருமண நிச்சயதார்த்தத்தின் போது…22 May 2017

-------
வாழ்த்துக்கள்.
--------------
திருநிறை .இராஜசேகர், திருமதி .வள்ளி தம்பதிகளின் ஏகபுத்திரனாகிய
Dr.விவேக் அவர்களும்,
திருநிறை. சத்தியகீர்த்தி, திருமதி. சுசித்ரா தம்பதிகளின் மூத்த மகளான
Dr. ஶ்ரீரஞ்சினி அவர்களும்,
விவாகம் செய்து கொள்ளும் பொருட்டு - முன்னோடியாக விவாகப்பதிவு
நிகழ்ச்சிக்கு உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்
அனைவரும் ஒன்றுகூடியிருக்கும் இவ்வேளையில், அந்த இணையர்களை
அவர்களின் பாட்டியுடன், உடனிருந்து வளர்த்தவருமாகிய
திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள், வாழ்த்திப் பாடிக்கொடுத்த
வாழ்த்துப் பாக்கள்.
-------------------
சிங்கப்பூர் என்ற சீரோங்கும் நாட்டினிலே
மங்காப் புகழுடைய 'இராஜ சேகர்' என்பவரும்,
தங்கம் நிகரான ' வள்ளி' என்ற தாய்க்குலமும்
பொங்கும் வைத்திய நிபுணரெனப் பெயரெடுக்க
ஒரேயொரு செல்வமகன் சிந்தையால், செயலால்....
மலர்போன்ற சிரித்த முகம், மாண்பு கொண்ட பண்பாளன்
பெரியோர்கள் மதிக்கும் பெருங்குணமுங் கொண்டவனாய்....
வைத்திய கலாநிதி ' விவேக்' என்ற வித்தகனும்.....
அவுஸ்ரேலியா நாட்டில் அமைதியாய் வாழ்கின்ற
' சத்திய கீர்த்தி' என்ற சகலரையும் பேணுகின்ற
உத்தமனும், 'சுசித்ரா' என்ற சகலகலா மேதையும்.....
முதல்குழந்தையாகப் பெற்றுப் பேணிவளர்த்து வைத்த
கல்வியில் கலைமகளாய்,வீணைஇசை மீட்டலிலும்
முன்னணியில் மிளிரும்'ஶ்ரீ ரஞ்சனி' என்ற மகள்
கண்ணுக்குக் கண்ணாக வைத்திய துறையை
எண்ணியபடியே கற்று முடித்த கவின்பெறு செல்வியும்....
இருவரும் இணையும் இந்நாள் ! ஒரு பொன்நாள்!!
பூவும் மணமும் போல,வானமும் நிலவும் போல....
நீவிர் இருவரும் பல்வேறு சிறப்புக்கள் பெற்று
'நீடூழி வாழ்க' வென சபையோர் சார்பாக...
நாமும் வாழ்த்துகின்றோம்!
சமர்ப்பணம்.
....................
பாரத தேசமும், பக்கத்து இலங்கையும்
பாரம்பரியமாக தமிழ்மொழியை நேசிக்கும்
இருபெரிய குடும்பங்கள் ஒன்றாய் இணைகின்ற
பெருமையே பெருமை! பேணுதற் குரியது!!
நன்றி......வணக்கம்.
22-05-2017. அன்புடன்.....பாட்டி,
வள்ளியம்மை சுப்பிரமணியம்."சத்தியமனை".

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF