"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Wednesday, December 1, 2010

கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் மூன்று நூல்கள்-வள்ளியம்மை சுப்பிரமணியம்


கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின்  மூன்று நூல்கள்


எங்கள் கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் 

(1) பூக்கள் உடையும் ஓசை
                                                                                           
(2)பூட்டுகள்
                                                                                           
(3) புலமைக்கு மரியாதை  
   
ஆகிய மூன்று நூல்களைப் பற்றிய இந்தத் தாயின் கணிப்பீட்டினைச் சிலவரிகளில் கூறுவதற்கும்,அதனை அனைவரும் செவிமடுப்பதற்கும் முதலில் அனுமதி பெற்றுக் கொள்ளுகின்றேன்.
(1)பூக்கள் உடையும் ஓசை;........பண்டிதர் முதல் பாமரர் வரை மிக இலகுவாக வாசித்து கருத்தினை ஏற்றுக்கொண்டு நடைமுறை
சாத்தியமான ”வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்களை கொண்டிருக்கிறது” என்று வியப்பர்.
(2) பூட்டுகள்:---------ஒரு தடவை வாசித்து விட்டு, திரும்பவும் ஒருமுறை வாசித்து......ஓகோ! இவ்வளவு கருத்துக்கள் இதற்குள் இருக்கிறதே! என்று வியக்க வைப்பதுடன் ( சிரிக்கவேண்டாம் ) இனிப்பு நீர் உள்ளவர்கள் ....அதிகம் உண்ணலாமா? என்று சிந்திக்க வைக்கும் மாம்பழச் சுவையை கொண்டது.
(3) புலமைக்கு மரியாதை :--------இது பலாப்பழத்தின் சுவையைக் கொண்டது. உடனே சாப்பிடமுடியாது. பழத்தை வெட்டி.....கட்டுக்குலையவிடாமல் காக்கும் வரப்பினைக் கடந்து....பாதுகாக்கும் ( வைக்கோல் போன்ற) நார்களை அகற்றி.....அப்பொழுதும்
சாப்பிடமுடியாது....உள்ளேயிருக்கும் விதைகளைப் பத்திரமாகப் பிரித்தெடுத்து (ஏனெனில்  அவை வம்சவிருத்தி செய்பவை) ...அதன் பின்னர் தான் உண்ணவேண்டும். இந்நூலினை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்து மறந்து போன ப்ற்பல அறிஞர்களின்
படைப்புக்கள் கண்முன் வரக்கிடைக்கிறது.அக்காலத்திலிருந்து-- இக்காலம்வரை இராமாயணம்....மகன் இறந்தபோது தாயின் நிலை, பாரதம்
-----பாஞ்சாலி சபதம், சிலப்பதிகாரம்,நற்றிணை,குறிஞ்சித்திணை....பெருவழுதியார்,பிசிராந்தையார், வீரமாமுனிவர்,தேவநேயப் பாவாணர்,
பாரதியார், பாரதிதாசன்,ந்ம்முடன் வாழும் கவிப்பேரரசு. வைரமுத்து வரை எடுத்துக் கூறி மரியாதை செலுத்தியது புதுமையானதே!
 மொத்தத்தில் முக்கனிகளையும் அதன் சுவைகளையும் ஒரே நேரத்தில் கொடுத்த கவிதை ந. வீ. விசயபாரதிக்கு ஒரு  கவிதை:--
         கொஞ்சமும் அலுப்பின்றி குதூகலமாய் வாசிக்க...
         துஞ்சாமல் கண்விழித்துத் தூயதமிழ் தந்தவரே!
         பஞ்சாமிர்தம் செய்ய முக்கனிகள் அவசியமே....
         எஞ்சிய காலங்கள் எல்லாமே ஏற்றந்தான்!..........................அன்புடன்........அம்மா.


 தாய் மடியில்  தலை சாய்த்து சொர்க்கம் காணும் சுகம் போல அன்னை உங்கள் விமர்சன வாழ்த்தில் ஆன்மா நெகிழ்ந்தேன்;
 பட்டறிவு மிக்க உங்கள் விமர்சனத்தில் பாசத்தின் விகிதம் கொஞ்சம் கூடுதலாகவே தொனித்தது. இந்தத் தாய்மை
அன்புக்கும் தமிழாய்ந்த விமர்சனத்துக்கும் என்றும் என் நன்றிகளைக் காலத்தாற்காட்டுவேன்.
                                                                                                                    என்றும் உங்கள் பாசமகன் 
                                                                                                                     ந.வீ.விசயபாரதி   

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்