"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, June 6, 2014

Comrade S. D. Bandaranayake former MP for Gampaha முன்னாள் கம்பஹா தொகுதி பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த எஸ்.டி. பண்டாரநாயக்க அவர்கள்

S.D. Bandaranayake and his wife meeting with Mao Zedong, Lin Biao and Zhou Enlai during their visit to China.
எஸ்.டி. தனது துணைவியாருடன் சீனாவுக்கு சென்ற சமயம் தலைவர் மாஓசேதுங் அவர்களைச் சந்தித்தபோது எடுத்த படம். எஸ்.டிக்கு இடதுபுறம் நிற்பவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய துணைத் தலைவர் லின்பியாவோ. எஸ்.டியின் துணைவியாருக்கு வலதுபுறம் நிற்பவர் சீனப் பிரதமர் சௌ என்லாய்

Message of Condolence by  Comrade SK Senthivel, General Secretary of the New‐Democratic Marxist‐ Leninist Party issued the following statement on behalf of the Party on the passing away of SD Bandaranayake former MP for Gampaha. 

Former Member of Parliament SD Bandaranayake who was a voice of democratic and progressive forces in Sri Lanka and an upholder of positions supportive of the left passed away on 3rd June 2014 at the age of 98 years. The news of his departure saddens the democratic, progressive and left forces and toiling masses of Sri Lanka. 


SD Bandaranayake who was elected to parliament in 1956 remained a consistent democratic progressive, a supporter of the left, and a courageous activist inside and outside parliament. When members of the UNP led by JR Jayawardane went on a march to Kandy in 1957 to oppose the Bandaranayake‐Chelvanayakam Pact, claiming that the agreement designed to grant Tamils their rights was a secessionist move, SD Bandaranayake took the initiative to mobilize people to obstruct the march at Imbulgoda on the Colombo‐Kandy road in the Gampaha electorate and force the UNP to retreat to Colombo. SD Bandaranayake himself lay across the road as an act of protest. 


During the struggles in the North in the 1960s against caste oppression and untouchability, SD Bandaranayake spoke in support of the struggles in parliament as well as visited the North to personally express solidarity with the struggling masses. At the time, during a parliamentary debate he dared to quote Lenin that “the parliament was a den of thieves” and declare that the Parliament of Ceylon too was a den of thieves. As a result he was forcefully removed from the House of Representatives and suspended from parliament for two weeks. He always supported the people and their just struggles. As a result he was arrested in 1971 and detained for more than two years. He spoke firmly in support of granting the Tamil people their just rights and campaigned for the rights of workers, peasants and plantation workers.

As a result of his above political stand, he was a long standing friend of the Party who continued to maintain his bond with the Party. In a context in which racism and religious fanaticism are wreaking havoc in the south of the Country, his departure is a loss that very much saddens the Party and the people of the country. The Party expresses its deepest condolences and heartfelt sorrow to his wife, children and other members of the family and to the people of Gampaha. 
SK Senthivel General Secretary




முன்னாள் கம்பஹா தொகுதி பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த எஸ்.டி. பண்டாரநாயக்க அவர்கள் , யாழ்ப்பாணத்தில் நடக்கும் சாதி அடக்குமுறைகளையும், ஒடுக்கப்பட்டோர் முகங்
கொடுத்த இன்னல்களையும் நேரில் பார்வையிடுவதற்காக 1969 ம் ஆண்டு, சில தடவைகள்
யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் ஒரு புத்த பிக்குவும் ,சில சிங்களத் தோழர்களும் வந்தார்கள்.
அவர்களுடன் தோழர் மணியம் அவர்களும் உடன் சென்று பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும், பிரச்சனைகளையும் காட்டி விளங்கப்படுத்தினார்..
இந்த நிலையில், ஏன் ...தென்னிலங்கை எம். பி. க்கு இருந்த அக்கறை ....வட பகுதி தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளு
க்கு இருக்கவில்லையா?” என்று நண்பர்கள் நினைக்கலாம்....பாவம்..அவர்கள்...!
ஒடுக்கப்பட்டோர் குடிசைகளுக்குத் தீ மூட்டிய உயர்சாதியினரின் வெறுப்பைத் தேடிக் கொள்ள
அவர்கள் விரும்ப வில்லை.பாதிக்கப் பட்டவர்களின் கையறு நிலைமைகளையும் கேட்டறிந்த,நேரில் பார்த்தார். நிச்சாமத்தில் எரிந்த வீடு ஒன்றை அவர் பார்வையிட்ட படம் இன்றும் அக் கொடுகமகள் சொல்லும். எஸ். டி. பண்டாரநாயக்க அவர்கள் தான் கேட்ட, பார்த்த நிகழ்ச்சிகள் பற்றி பாரளமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.
அந் நேரம் அது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.அதன் பிரதிபலிப்பு அடுத்து வந்த தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டன.
உயர்சாதியினர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல. ஒரு சிலவக்கிர உணர்வு கொண்டவர்களே ...தீயிட்டு குடிசைகளை அழித்தவர்களாவர்.’ மான்’ முத்தையா
என்ற இடைச் சாதித் தோழர் ஒருவரை , அவரது உறவினர்கள்...சங்கானைக் கிராமத்தில் வசிக்க
விடாமல், அவரது வீட்டிற்கு கல் எறிந்தும், கிணற்றுக்குள் குப்பை க்கூளங்களைப் போட்டும்...
உடனடியாக ...வேறு கிராமத்துக்கு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கினர். அதுபற்றி தோழர் சண் எழுதியிருந்தார்.


சங்கானைக்கு வந்திருந்த வேளையில் எஸ். டி. பண்டாரநாயக்க அவர்கள் நாம் வசித்த ,காலையடி வீட்டிற்கும் வந்திருந்தார். நான் நடக்க முடியாமல் ....கால்களை நிலத்தில் வைக்க
முடியாமல் அவஸ்த்தைப் படுவதைக் கண்ணுற்ற அவர்,....அடுத்த தடவை வந்த போது “ முடக்
கொத்தான்” எனப்படும் ஒரு மூலிகையைக் கொண்டுவந்து தந்து “ இதனுடன் கொத்தமல்லியும்
சேர்த்து அவித்துக் குடியுங்க “ என்று ஆலோசனை கூறினார். நானும் அந்நேரம் சிங்களம் கற்றிருந்தமையால் தட்டித் தட்டி சிங்களத்தில் பேசினேன். அது மணியம் தோழருக்கும், தோழர் எஸ்.டி க்கும் மகிழ்வைத் தந்தது. அவரது மருத்துவம் பொய்க்க வில்லை.
நானும் அதன்படி அவித்துக் குடித்து சுகம் பெற்றேன்.
மனிதாபிமான சுபாவமுள்ள அவர்....மேற்படி தீயிட்ட சம்பவத்தை பாராளுமன்ற கூட்டங்களில்
எடுத்துக் கூறியுள்ளார்.அதனால்....தங்கள் கைவரிசை பாராளுமன்றம் சென்றதோடு மாத்தி
ரமன்றி....பத்திரிகைகளிலும் செய்தி வெளியானதால் சம்பந்தப்பட்டோர்.....பிறகு அடங்கி நடக்கத் தொடங்கினர்....” தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால், தம்பி...சண்டப் பிரசண்டம்
ஆடுவான்.... “ என்று நாட்டுப் புறத்தில் ஒரு முதுமொழி ஒன்று உண்டு. அது மட்டுமல்லாது பல வழக்கறிஞர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளரான தோழர் சிவதாசன் வரமுடியாது போனதால் தோழர் மணியம் அவர்களே ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்த்தார்.
அனைத்து சாதியினருடனும் இணைந்து அப்போராட்டத்தை நிகழ்த்தியமையே வெற்றிக்கு வழியமைத்தது.


குறிப்பு : எஸ்.டி.பண்டாரநாயக்க ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் உறவினர். இந்தியாவில் உயர்கல்வியை படித்த காலத்தில் ,சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்றோரை சந்தித்தாகச் சொன்னார்.விவசாயத்திலும், மூலிகை வைத்தியத்திலும் நாட்முள்ளவர். இரண்டாம் உலகப் போரின் பின் ,
அவர் அரசியலில் நுழைந்தார், எஸ். டபிள்யூ. ஆர். பண்டாரநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். அவர் 1952 இல் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இருப்பினும் சிங்கள மட்டும் சட்டம் குறித்து எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவியை ஏற்கவில்லை.

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கீழ் எஸ்.எல்.எஃப்.பி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான 1971 ஜேவிபி இல் இணைந்தார். அவருடனும் அவர் குடும்பத்துடனும் நட்பு நீள்கிறது. அவர் இறப்பதற்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் அவரை என் குடும்பத்தினருடனும், தோழர் சுப்பையாவுடனும் சென்று பார்த்து வந்தேன். 96 வயதில் அவர் கண் பார்வையை இழந்திருந்தார். அழகான அவரை அந்நிலையில் பார்த்தது மனதில் வேதனை தந்தது. அவர் பற்றிய ஒரு தனிக்குறிப்பு எழுதவேண்டும்.. . .வள்ளியம்மை சுப்பிரமணியம்


சங்கானைக்கு என் வணக்கம் !