"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Thursday, October 6, 2011

யாருக்கு விருது?

  யாருக்கு விருது?
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
காலுடைந்து போனபின்னும் சக்கர நாற்காலியில் சாதிக்க வேண்டுமென
நாலு கி.மீ  ஓட்டத்தில் முதலிடத்தில் வந்து களைத்தவர்க்கு -
 
நாலிரண்டு வருடங்கள் தோல்விமேல் தோல்விகண்டு நம்பிக்கையில்
காலூன்றி நின்ற தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் கிடைக்கவைத்த மருத்துவர்க்கு -
 
வாலறுந்த பட்டம்போல் வாழ்வில் குறிக்கோளற்ற ஊதாரி இளைஞனுக்கு
மேலும் மனிதனாக வாழலாமென்று வழிவகுத்த மஞ்சள்நாடா குழுவினர்க்கு -
 
சின்னஞ் சிறுவயதில் சிந்திக்கும் திறனை வளர்த்த பெற்றோரின்
சொன்னசொற் தவறாது வளர்ந்து தன்நாட்டிற்குப் பெருமைசேர்த்த மகளுக்கு -
 
விஞ்ஞான ஆராய்ச்சியினால் விண்வெளியில் தடம்பதித்து மீண்டு
அஞ்ஞானம் அகல அனைவர்க்கும் வழிகாட்டும் அணுவிஞ்ஞானிக்கு -
 
சும்மா கிடைத்தால் அதன்பெயர் விருது அல்ல; அதைக்கருதி
தம்மால் இயன்றவரை அடுத்தடுத்து முயன்றபின்னும் தோல்விவர
“அம்மா” எனப் பெருமூச்சில் அவன்கண்ணால் மழைபொழியத் துவளாமல்
நம்மால் முடியுமென்ற நம்பிக்கை நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டவர்க்கே!
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

1 comment:

  1. விருது
    ‘’’’’’’’’’’’’’’’’’’
    விருது கிடைக்குமென்று கவிஞன் எழுதவில்லை - மனதில்
    வருகின்ற உணர்வுகளை வடிக்கின்றான் தாளதனில்
    அருமையான கருத்தென்று அறிஞர்கள் தீர்மானித்து - முடிவில்
    பெருமைப்பட வழங்குகின்றார் கவிஞனுக்கு விருதுகளை.

    அன்னையும் அப்படியே.......

    பத்துமாதம் சுமந்து பாலூட்டித் தாலாட்டிக் - குழந்தையை
    மெத்தனமாய் நோகாமல் மேன்மைபெற வளர்த்தெடுத்த
    அத்தாயின் சிரமத்திற் கிணையில்லை இவ்வுலகில் - அவளுக்கு
    எத்தனையோ விருதுகள் கொடுத்தாலும் ஈடாமோ?

    அப்படியான அன்னைதான்........

    ’கவிமாலை’ மொட்டாகி மங்கள மலராகி - இன்று
    புவிமீது நறுமணத்தை வீசிவரும் மாலையாகி
    விருதுகள் தேடிவர வியந்துதலை தூக்கிநிற்க - முகத்தில்
    அருமையன்னை இறுமாப்பும் அற்புதமும் காண்கின்றோம்.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்