Tuesday, August 13, 2013

சாவு அறிவித்தல்: திருமதி மகேஸ்வரி- வைரமுத்து (1929-10-01 - 2013-8-10)




நேற்று திடீரென ஒரு இழப்புச் செய்தி - மகேஸ்வரி- வைரமுத்து (1929-10-01  - 2013-8-10) எங்கள் 'சைலு'வின் (சைலகாந்தன் வைரமுத்து) அம்மா. 


                                         சைலகாந்தன் வைரமுத்து (சாஜகான்)   
                                அம்மாவிலிருந்து 1966 ........இந்து மா சமுத்திரத்தில் 1986

 1986-ஆனி 29 அன்று PLOTE அமைப்பிலிருந்து பயிற்சி முடித்து வந்த 33 வீரர்கள் இந்து மா சமுத்திரத்தில் படகுடன் சேர்த்து , இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டனர்.ஒருவரது உடலும் கிடைக்கவில்லை (போட்டி இயக்கத்தினரின் காட்டிக்கொடுப்பினால் இது நிகழ்ந்த தாகவும் ஒரு ஆதாரமற்ற கதை உண்டு ) நாமிழந்த 33 வீரகளில் பலர் என்னோடு பழகிய உறவுகள். வேதனையின் வலிகள் சொல்லி மாளாதவை .
திமுரசு ஆசிரியர் ரமேஷ் அப்பாவுடன் திண்ணையில் இருந்து பேசிக்கொண்டு இருந்த போதே இச்செய்தி எமக்குக் கிடைத்தது..அந்த வலியுடன் ,அப்பா எப்படி அந்த உரையாடலைத் தொடர்ந்தாரோ தெரியவில்லை. நான் எப்படிச் சைக்கிள் ஓட்டிச் சென்றேனோ தெரியவில்லை.அண்ணா சிறைச்சால்லையில் ,தம்பி உயர்கல்விக்காக வெளியூரில் ,எனக்கு எல்லாமாக இருந்தது சைலு தான் . 5 பெண்பிள்ளை களின் கடைசிப் பையனாக பிறந்து என் தம்பியின் உயிர் நண்பனாக 'சத்தியமனை'யில் உண்டு உறங்கி வளர்ந்த உறவு. அவனுடன் ஏற்ப்பட்ட உறவுக்கு அவனின் விதவைத் தாயின் ,அவனின் 5 சகோதரிகளின், எம் மீதான நம்பிக்கையே காரணம். எங்களுக்கும் சொல்லாமல் திடீரென முடிவெடுத்துச் சென்றான். போராளி சுந்தரத்தின் மிக நெருங்கிய உறவு. வறுமையும் ,குடும்பப் பொறுப்பும் நிறைந்த அவனையும் விடுதலை வேட்கை விட்டுவைக்கவில்லை. எப்பொழுதுமே அவனின் நினைவு எம்முடனே இருந்து வந்தது. அவனின் அம்மாவின் இழப்பு பலத்தை மீட்டுத் தந்தது. அவர்களுடனான குடும்ப உறவு எப்போதும் தொடரும்! -சத்தியமலர்,

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன் K.A.Subramaniam Commemoration Volume

தோழர் கே ஏ சுப்பிரமணியம் 1989 விடைபெறுகிறேன்  K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo to download the FULL VOLUME in PDF