'''சுண்ணாக எழுச்சி''' அல்லது '''ஒக்டோபர் எழுச்சி''' என்பது [[தீண்டாமை|தீண்டாமைக்கும்]], சாதியத்துக்கும் எதிராக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்ட ஊர்வலமும், அதைத் தொடர்ந்த எழுச்சியையும் குறிக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இடதுசாரிகள், குறிப்பாக [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)|இலங்கைப் பொதுவுடமைக் கட்சி (சீன சார்பு)]] முன்னெடுத்தனர். சட்ட அனுமதி [[காவல்துறை|காவல்துறையினரிடம்]] கேட்கப்பட்ட போதும், அது தரப்படவில்லை. எனினும் ஊர்வலம் ஒக்டோபர் 21, 1966 ம் திகதி, [[சுண்ணாகம்|சுண்ணாகத்தில்]] இருந்து புறப்பட்டு, யாழ் முற்றவெளி நோக்கி தொடங்கியது. அந்த ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினர், ஊர்வலத்தில் கலந்து கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர், பலரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் நிலை உருவானது. இதைத் தவிர்க்க முழக்கங்கள் இன்றி ஊர்வலத்தைத் தொடர காவல்துறை அனுமதித்தது. ஊர்வலம் தொடர மேலும் பல மக்கள் சேர்ந்து கொண்டனர், மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையிலும் கூட்டம் முற்றவெளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வும், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுமே ஒக்டோபர் எழுச்சி என்று ஈழத்தில் அறியப்படுகிறது.
[[சி. கா. செந்திவேல்]], [[ந. இரவீந்திரன்]]. 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்.  சென்னை: தெற்குப் பதிப்பகம்.
== பின்புலம் ==
யாழ்ப்பாணத்தில் 1960 களிலும் [[தீண்டாமை]] பொது இடங்களிலும் தீவரமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது.  தாழ்த்தப்பட்டோர் பல கோயில்களுக்குள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது என பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது.  தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது.  இது மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்திலேயே வெளிப்பட்டது.  இதனை எதிர்த்து நீண்ட காலமாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.  எனினும் 1960 களில் சர்வதேசப் புரட்சிச் சூழ்நிலை, இந்தத் தளத்திலும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தியது.  அதன் ஒரு திருப்பு முனையாக ஒக்டோபர் எழுச்சி பார்க்கப்படுகிறது.{{cite news|title=Conference held to explore and redress caste oppression|url=http://www.ft.lk/article/575291/Jaffna-Conference-held-to-explore-and-redress-caste-oppression|newspaper=DailyFT By Thulasi Muttulingam|date=22 October 2016|df=}}
== வரலாற்றை மாற்றிய ஊர்வலம் ==
[[படிமம்:21 October 1966.png|left|thumb|பொலீஸ் தாக்குதலுக்கு முன் ஊர்வலத்தில் வீ.ஏ. கந்தசாமி, டாக்டர் சு.வே. சீனிவாசகம், எம்.முத்தையா . [[கே. டானியல்]], ஆர்.கே.சூடாமணி,  டி.டி.பெரேரா,  சிவப்புச் சட்டையுடன் [[கே. ஏ. சுப்பிரமணியம்]] ஆகியோர்  தலைமை தாங்கிச் செல்கின்றனர்.]]
ஊர்வலத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வந்திருந்த கட்சித் தலைவரான [[நா. சண்முகதாசன்]] சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி இறுதியாக ஒருமுறை கேட்டுப் பார்த்தார். அப்பொழுதும் பொலிசார் மறுத்துவிட்டனர். 
அன்றைய தினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் [[சுண்ணாகம்]] சந்தை வளாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சாதியத்தை எதிர்த்த புரட்சிகர முழக்கங்களுடன் பேரணியை ஆரம்பித்தனர். 
சிறிது நேரத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த சுண்ணாகம் பொலிஸ் நிலையம் முன்பாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொலீஸ் படையினர் பேரணியை வழிமறித்துத் தாக்கினர்.
தலைமை தாங்கி முன்னணியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித் தனமான குண்டாந்தடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. 
மேற்படி தாக்குதலில் தலைமை தாங்கி முன்னணியில் சென்ற வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் இரத்தம் வழிந்தோட பொலீஸ் நிலையத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். 
அன்றைய பேரணியில் முன்னே சென்று கொண்டிருந்த டாக்டர் சு.வே.சீனிவாசகம், [[கே. டானியல்]], [[எஸ்.ரி.என்.நாகரட்ணம்]], டி.டி.பேரேரா, எம்.முத்தையா மற்றும் அன்றைய வாலிபர் இயக்கத் தலைவர்கள் கடுமையான அடிகாயங்களுக்கு உள்ளாகினர். {{cite book|title=வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்|url=http://noolaham.net/project/148/14737/14737.html }} [[சி. கா. செந்திவேல்]] 2003{{cite book|title=சாதி தேசம் பண்பாடு|url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 }} [[ந. இரவீந்திரன்]] 2014
அதைத் தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் நடுவீதியில்  ''''சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்'''' முழக்கங்களுடன் அமர்ந்து விட்டனர். பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர் பொலிசார் இறங்கிவந்து கோசங்கள் எழுப்பாது இரண்டு இரண்டு பேராக நடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிரகாரம் தமது பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை உணர்த்தும் முகமாக வாய்களைக் கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு [[யாழ்ப்பாணம்]] வரை நடந்து சென்ற செய்தி அறிந்து, வீதியோரங்களில் கூடி நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது கைகளை அசைத்து தமது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொண்டனர்.
மாலையில் யாழ் முற்றவெளியில் மாபெரும் பொதுக்கூட்டம் டாக்டர் சு.வே.சீனிவாசகம் தலைமையில் நடைபெற்றது. [[நா. சண்முகதாசன்]], டி.டி.பேரேரா, [[சி. கா. செந்திவேல்]] உட்பட பலர் அங்கு உரையாற்றினர். கைது செய்யப்பட்ட வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் மருத்துவ சிகிச்சைக்காக நள்ளிரவில் ஜாமீனில் விடுதலையானார்கள். ஆனால் நீதிமன்ற வழக்கு சில ஆண்டுகள் தொடர்ந்தது. குற்றவாளிகள் சார்பாக, அனைத்துலக அரசியல் சட்ட நுணுக்கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறனும் கொண்ட சட்ட நிபுணர் [[நடேசன் சத்தியேந்திரா]] ஆஜராகி விடுதலை பெற்றுக் கொடுத்தார்.{{cite news |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF |title=தொழிலாளி 1967.11.09 பக்.1, தொழிலாளி 1968.07.17 பக்.1 }}  {{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1966.10.22 |title=ஈழநாடு 1966.10.22 பக்.1 }} 
== எழுச்சியைத் தொடர்ந்த வெகுஜன போராட்டங்கள் ==
[[சாவகச்சேரி]], [[சங்கானை]], [[அச்சுவேலி]], [[நெல்லியடி]] போன்ற இடங்களில் 1966 அக்டோபர் எழுச்சியைத் தொடர்ந்து  தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரிப்போராட்டங்களில் ஈடுபட்ட [[தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்]] அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொய்க்குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பலர் வெளியே வரமுடியாதவாறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் இக்கட்டான நிலைமையை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியோடும், ஏனைய முற்போக்கு இயக்கங்களோடும் சம்பந்தப்பட்ட பல முக்கியஸ்தர்கள்  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். அவர்களில் முக்கியமானவர் [[கம்பஹா]] தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்களாகும். இவரை, வடபகுதிப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்வார்கள் என்ற அச்சத்தால் பூட்டப்பட்டிருந்த ஆலயங்கள், கோவிற்கேணிகள், கிணறுகளில் அந்த மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் விதத்தில் அவற்றைச் சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப் பட்டிருந்ததையும், ஒடுக்கப்பட்டோர் குடிசைகளுக்குத் தீ மூட்டிய உயர்சாதியினரால் பாதிக்கப் பட்டவர்களின் கையறு நிலைமைகளையும்  [[கே. ஏ. சுப்பிரமணியம்]] நேரடியாகக் காண்பித்தார். [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்கள் தான் கேட்ட, பார்த்த  பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி பாரளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். {{cite web |url=http://archive.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm |title=கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் ,நினைவுகளும் }} சூத்திரம் கே.சுப்பையா 2012 {{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_1966.11.25 |title=தொழிலாளி 1966.11.25 பக்.1}} {{cite news |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1968.07.23 |title=பாரளுமன்றத்தில் [[எஸ். டி. பண்டாரநாயக்கா]], ஈழநாடு 1968.07.23 பக்.1}} 
போராட்டங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களின் வாயிலாக கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிறைச்சாலைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்காக, நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் மறுப்புத்தெரிவித்து, சாதியமைப்பின்மீது தமது விசுவாசத்தை வெளிப்படுத்திய வேளை,  தென்னிலங்கையிலிருந்து பல சிறந்த வழக்கறிஞர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அந்த வழக்குகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்டார்கள். வழக்கறிஞர்களில் முக்கியமானவர் பின்னர் மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய [[தெ. வ. இராசரத்தினம்|நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம்]] அவர்களாகும். 1989 நினைவுமலர் ஒன்றில் இடம்பெற்ற அவர்களின் கருத்துச் செய்தி: 
[[பகுப்பு:இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்]]
[[பகுப்பு:தமிழ்ச் சமூகத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கம்]]
[[பகுப்பு:அக்டோபர் நிகழ்வுகள்]]
[[பகுப்பு:1966 நிகழ்வுகள்]] 
"நான் சட்டத்தரணியாகப் பணியாற்றத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலும் அதன் பின்னரும் தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கவாதிகளுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மிக கடினமான வழக்குகளில் எல்லாம் [[கே. ஏ. சுப்பிரமணியம்|சுப்பிரமணியம்]] என்னை ஆஜராகும் படி செய்வித்தார். அந்தக் கட்டத்தில் அரசும் சமுதாயமும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கவாதிகளையும் பெரும் தொந்தரவுகளுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் [[கே. ஏ. சுப்பிரமணியம்|சுப்பிரமணியம்]] எல்லோர்க்கும் உற்சாகம் ஊட்டக் கூடிய தலைவராகவிருந்ததால், நாம் வழக்குகளில் தோற்பது மிகவும் அரிது. அவர் சார்பாக நான் ஆஜரான கடைசி வழக்கு [[பன்றித்தலைச்சி அம்மன் கோவில்|சாவகச்சேரியில் ஆலயப் பிரவேசத்துடன்]] தொடர்புற்றிருந்த ஒர் வழக்கு. கிணறுகளை நச்சுப்படுத்துவதற்கு உயர் சாதியினர் முயன்றனர்; ஆலய வளவிற்கு தாழ்த்தப்பட்டவர்கள் புகுவதைத் தடுப்பதற்கு பொலிசார் மேல்சாதியினருக்கு உதவி புரிந்து கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு இந்தப் படுமோசமான, ஈனத்தனமான செயலைச் செய்யாது பொலிசாரைத் தடுத்தனர். அவர்கள் பொலிசாரைத் தாக்கவும் செய்தனர். பரபரப்புமிக்க வழக்காக இது இருந்ததோடு, உயர் சாதியினர் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். நாம் வழக்கில் வென்றோம்." - [[தெ. வ. இராசரத்தினம்]] .{{cite book |url= http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8F._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D ) |title= சுப்பிரமணியம், கே. ஏ. (நினைவுமலர்) பக்.24 , நீதிமன்றங்களில் ஆஜரான [[தெ. வ. இராசரத்தினம்]]}}== எழுச்சி ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் == == இவற்றையும் பார்க்க == * [[சங்கானைக்கு என் வணக்கம்]] == மேற்கோள்கள் ==
அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில்  25 - 11 - 1966 அன்று நடைபெற்றது.
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் - எஸ். டி. பண்டாரநாயக்கா - கே. டானியல் - வி. ஏ. கந்தசாமி - சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.










 
