Saturday, August 4, 1973

1973 Comrade N. Sanmugathasan Letter to K.A. Subramaniam in Tamil

1973 தோழர் நா. சண்முகதாசன்  கே.ஏ. சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம்  Comrade N. Sanmugathasan Letter to  K.A.  Subramaniam

நான் இக்கடிதத்தை அறிமுகம் செய்வதன் நோக்கம் என்னவென்றால், 
தோழர் மணியம் 1969ஆம் ஆண்டு மேதினத்தில் படுகாயப்பட்டதும், 
அவருக்கு தோழர் சண்முகதாசன் தனது வீட்டில் வைத்து வைத்தியம் செய்ததும் முன்னர் எழுதியிருந்தேன். 


அக்காலகட்டத்தில் தோழர் மணியத்தை  வைத்தியத்திற்காக சீனாவுக்கு அனுப்ப தோழர் சண்முகதாசன் பல முயற்சிகள் எடுத்தாராம். ஆனாலும் அம்முயற்சிகள் கைகூடவில்லை. இது தோழர் சண்ணுக்கு, சீனக் கட்சி மீது விசனத்தை ஏற்படுத்தியது.  இச்சம்பவத்தில் இருந்து சீனா பற்றிய அவரது கண்ணோட்டம் மாற்றமடைய தொடங்கியது. தோழர் மணியம் தனது உடல் நலம் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கிடையே சீனா பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. தன்னை முன்னிலைப்படுத்திய எந்த ஒருவிடயத்தையும் அவர் விரும்பியிருக்கமாட்டார். அன்று தோழர்களுடன் சேர்ந்து கைச்சாத்திட்ட 1963 ஆண்டு உடன்படிக்கையின்படி தனது மனச்சாட்சிக்கு ஏற்ப சுயநலமின்றி  தோழர் மணியம் வாழ்ந்து மறைந்தார்.

4.8.73


தோழர் மணியம் அறிவது 


நீங்கள் கூறுவது போல் அடுத்த கட்டுரையை மாற்றி எழுதுகிறேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி ஒன்றுமே கூறாமல். உங்கள் அபிப்பிராயம் சரி என எண்ணுகிறேன் .


பத்தாம் தேதிக்கு முன் உங்கள் அலவன்ஸ்ஐ அனுப்ப முடியாததை இட்டு மனம் வருந்துகிறேன் வரும் பொழுது தர எத்தனிக்கிறேன். மன்னிக்கவும்


இப்படிக்கு 

தோழமையுடன் 

சண்






"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF