Thursday, September 2, 1976

சிறுபொறி 3 : 1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறி 3

1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறியின் சில பிரதிகள் அண்மையில் கிடைக்கப்பெற்றேன்.
அவற்றை ஒரு  வாரம் ஒரு பிரதியாக
உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்........... மா சேதுங்




1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறியின் சில பிரதிகள் அண்மையில் கிடைக்கப்பெற்றேன்.
அவற்றை ஒரு  வாரம் ஒரு பிரதியாக 
உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்...........

Tuesday, August 10, 1976

சிறுபொறி 2 : 1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறி 2

1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறியின் சில பிரதிகள் அண்மையில் கிடைக்கப்பெற்றேன்.
அவற்றை ஒரு  வாரம் ஒரு பிரதியாக 
உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்............

Sunday, May 2, 1976

சிறுபொறி 1 : 1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறி 1

1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறியின் சில பிரதிகள் அண்மையில் கிடைக்கப்பெற்றேன்.
அவற்றை ஒரு  வாரம் ஒரு பிரதியாக
உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்...........


சிறு பொறி பெரும் காட்டுத் தீயை மூட்டும்


சிறு பொறி பெரும் தீயை மூட்டும் என்பது மாபெரும் அறிஞர் ஒருவரின் கூற்றாகும். ஆம்! சிறுபொறி பெரும் சுவாலையை உண்டாக்கும். நமது பத்திரிகையான சிறுபொறி ஒரு கையெழுத்துப் பிரதியாகும். இது மக்கள் சீனத்தில் மக்கள் தினசரி, செங்கொடி போன்ற சக்திமிக்க பத்திரிகையாக மாறவும் முடியும்.


சீனத்தின் சமூக மாற்றத்திற்கு அது உதவியது போல இலங்கையில் ஒரு புதிய சமூகத்தை தோற்றுவிப்பதற்கு இதுவும் உதவ முடியும். எமது நோக்கமும் தேவையும் அதுவே ஆகும்.


இப்பத்திரிகை மக்களின் விடிவுக்கு எவ்வளவுக்கு வழிகோலுகின்றதோ மக்கள் வாழ்வை செழுமைப்படுத்த எவ்வளவு உதவுகிறதோ அதுவே நமது 

கலை இலக்கியம் என்றுமே அழியாது நீண்ட பார்வை உள்ளதாக இருக்க உதவும் என நாம் நம்புகிறோம்.


கருத்தில் வழிகாட்டியாகவும் அதேநேரம் மக்களின் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் தோளோடு தோள் சேர்த்து நிற்கும் புரட்சியாளனாக முழுமையாக மக்களுக்குப் பயன்பட கூடியதுமான சகல அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் சவால் தான் சிறுபொறி ஆகும் !



தொழிலாளி பத்திரிகை நிதி 


இன்றுள்ள நிலையில் போதிய நிதி வசதி இன்மையால் தொழிலாளி குறிப்பிட்ட திகதியில் வெளிவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும் தொழிலாளியின் தொகையும் பக்கங்களையும் அதிகரிக்க வேண்டி உள்ளதாலும் குறிப்பிட்ட தேதியில் வெளியாக வேண்டும் ஆகையாலும் போதிய நிதி வசதி தேவைப்படுகிறது. எனவே தொழிலாளியின் மீது பற்றுக்கொண்ட எவரும் நிதி உதவி செய்து தொழிலாளி வளர்ச்சிக்கு உதவுமாறு வேண்டப்படுகின்றனர்! 


தொழிலாளி பத்திரிகை வாசகர் வட்டத்தின் நிர்வாகிகள்

பொதுச் செயலாளர்: சு. சத்தியகீர்த்தி

நிதிப் பொறுப்பாளர் : ந. இரவீந்திரன் 

இணை இயக்குனர் : வேல்முருகன் , யோகேஸ்வரன் 

கூட்டுநிர்வாகிகள் : சிவலிங்கம் , கிருஷ்ணதாசன்

போசகர் :  சோ. தேவராசா 

காப்பாளர் : சுப்ரமணியம் சத்தியராசன் 

பத்திரிக்கை நிர்வாகி : சு. சத்தியமலர்.


சிறுபொறி அறிமுக விழா 


சிறு பொறியின்அறிமுக விழா 


தலைவர்: சத்தியகீர்த்தி 

இடம்: சத்தியமனை 

காலம்: 27. 6. 76 ஞாயிறு காலை எட்டு மணி 

பேச்சாளர்கள்: சிறு பொறியின் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர் அனைவரும் பேசலாம்! {அனைவரும் வருக}




சிந்தனை விரிந்த பின்பு….{ஆக்கம் தமிழ் மங்கை }


சிந்தனை விரிந்த பின்பு சீறிவரும் உணர்வினாலே 

உந்தனைநினைத்தோம் நல்லப்பு   என்னும் வீரனே 

நிந்தனை செய்தால் போராட்டம் நின்று விடுமோ 

வந்தனை செய்வோம் மார்க்சின் வழிவந்தோர் நாமெல்லாம் 


அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழல் என்ற வரலாற்றை 

காண்பித்தீர்  உந்தன் இறப்பதனால் 

இரக்கமற்ற ஆயுதப்படை செயலால் 

உரமாகி நம்மையெல்லாம் உருவாக்கியேவளர்த்தீர்.


நல்லப்பு என்பவனின் அன்பினால் மனமுருகி 

சொல்லப்பு என்ற ன் சுறுசுறுப்பாய் குழந்தை....

கொல்லப்பட்டிறந்தார் என்றும் கொள்கைப் பிடிப்பினில்

வல்லவனாய் வாழ்ந்தவனின் வாழ்வும் நிறைந்தன்றோ!

மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, அன்வர் கோஷா மற்றும் முற்போக்கு நூல்களுக்கும் தொழிலாளி பத்திரிகைக்கும் எமது புத்தக சாலைக்கு வருகை தாருங்கள்!


கொழும்பு முற்போக்கு பிரசுராலயம் 9 டிமல் விதி கொழும்பு ரெண்டு

யாழ் வசந்தம் புத்தக நிலையம் முனீஸ்வரன் வீதி யாழ்ப்பாணம் 

அட்டன் மக்கள் புத்தகசாலை 1397/1 டிம்புல வீதி அட்டன் 

இரத்தினபுரி மக்கள் புத்தக நிலையம் 8 சந்தை கட்டிடம் இரத்தினபுரி 

சீன , அல்பேனியா சஞ்சிகைகளுக்கு சந்தா ஏற்கப்படும்.


கவியரங்கு 


கஞ்சல்  பிறவிகள் காலை கவிஞன் 


மலை பாடி நதி பாடி மாமனிதர் பலர் பாடி

கனிப்பாடி கலை பாடி கன்னியின் இதழ் பாடி

 காவியங்கள் பல பாடி கலைகள் பல பாடி 

களைத்து விட்ட கவிஞன் உடல் வாடி உள்ளம் நொந்து வாடி 

களைத்து விழும் உழவர்களை பார்த்து சொன்னான் 

“ சீ! கஞ்சல் பிறவிகளே உம்மால் எம் கவி கெட்டதே”  

கேட்ட கஞ்சல் ஒன்று சொன்னது 

“எம் உழைப்பை உண்டு கொழுத்த திமிர் அல்லவா உன் சிருஷ்டிகள் “


தொந்தி  வயிறுகள் - காலை கவிஞன்


கோட்டும் சூட்டும் போட்ட முதலாளி 

நாட்டு முதலாளியை கண்டதும் 

ஓட்டமாக சென்று கட்டி பிடிக்க 

கைகள் நீட்ட 

எட்டவில்லை 

ஏனென்றால் 

தொட்டு நின்றன 

தொந்தி வயிறுகள் 



எழுவோம் இன்றே புரட்சி வழியே


புத்தர் பிறந்தார் சித்தர் ஆனார் 

தத்துவம் படைத்தார் தாரணி தழைக்க

நித்தம் வாடும் ஏழைகள் வாழ்வில் 

வறுமை ஒழிந்ததா இதனாலெல்லாம்


இயேசு பிறந்தார் எத்தர் இவர் மறைவர் 

பேசு  சுதந்திரம் ஏழைக்காகும் 

ஏசும் பணப்பித்தர் ஒழிவர் என்றார்


ஏழ்மை ஒழிந்ததா இதனாலெல்லாம்


சமயம் எல்லாம் சமத்துவம் சொல்லி 

களைத்தன களைத்தன  தழுவின தோல்வியை 

கலைத்ததா மக்களின் கவலை வாழ்வு -மலர்ந்ததா

சமத்துவம் மண்டலம் எங்கும் 


ஏழ்மை ஒழிக்க ஏழைகள் இணைந்து 

எழுவோம் இன்றே புரட்சிப் பாதையில் 

ஒழிப்போம் கொடுமை தகர்ப்போம் வறுமை

தொழிலாளி வர்க்கத் தலைமையின் வழியே 


ஆக்கம் கீர்த்தியண்ணா


English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF