Sunday, December 16, 1984

Arrest of Meeran Master during 72 Hours Curfew from 11-12 -1984-தொடக்கம் 72 மணித்தியால ஊரடங்கு 15-12-1984 நினைவு

11.12.1984 ஆம் ஆண்டு நமது ஊர் உட்பட பண்டத்தரிப்பு சித்தங்கேணி, வடக்கம்பிராய், விக்டோரியாகல்லூரி, பறாளாய்முருகன் ஆலயம், திருவடிநிலை, மாதகல், பண்டத்தரிப்பு இதற்குள் அடக்கப்பட்ட சகல கிராமங்களையும் உள்ளடக்கி 72 மணித்தியால ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. 

Jeyamanoharan Saravanamuthu

    இராணுவத்தைக் கண்டதும் வாகனத்தைவிட்டு  இறங்கி ஓட, இராசரைக் காப்பாற்ற ஒற்றையாய் நின்று தனிச் சமர்புரிந்து   மரணமானார் ஜெயமனோகரன் சரவணமுத்து  (அவரை நண்பர்கள் 'தோழர் ரங்கன்' எனவும்  செல்லமாக 'ஆடு' எனவும்  அழைப்பராம் ) மாதகலைச் சேர்ந்தவர் . என் மகள் பபியுடன் அவர் தங்கை ஜெயபவானி ஒன்றாகப்படித்தவர். அந்த மகனின் இரத்தம் தான் என் 'சத்தியமனை'யின் வாசலில் வைத்திருந்தோம். அன்றே இறந்து போகவேண்டிய இராசனை மேலும் பதினைத்து வருடங்கள் வாழ வைத்த அந்த ஜெயமனோகரன் குழந்தையை இன்றும் நினைத்தபடியே...

இதே நாள் தான் சங்கானையில் பொன்னாலை தோழர் பாபு வாகனத்தில்  வைத்து சுடப்பட்டு இறந்ததாகச் சொல்கிறார்கள். . பின் விசாரித்ததில் பாபு இறந்த சம்பவத்திலேயே (சங்கானை சந்தைக்கு முன்பாக) தோழர் அழியாதகோலமும் தோழர் வசந்தனும்(சுன்னாகம்) காயமடைந்திருந்தார்கள். பாலமோட்டை சிவம், மெண்டிஸ், கோபு மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்கள் . பறாளாய் முருகன் ஆலயத்தின் முன்றலில் நடந்த எதிர்மறை போராட்டத்தில் தோழர் கந்தையா ஜங்கரன் அவர்களுக்கு சூடுபட்டது.  இவர் காயங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டு ராணுவ முகாமில் வைத்தியம் கிடைக்காமல், மரணமானார். அன்று தான் தோழர் குணதிலகம் பாஸ்கரன் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாக்கும் பணியில் தொல்புரம் மூட்டு சந்தைக்கு அருகில்  சூடுபட்டார். இவரை காயங்களுடன் பாதுகாக்கமுடியா நிலையாக இருந்தும், அன்றிரவு இவரது அண்ணர் இவரை பாதுகாக்க முயற்சி செய்தும் இவர் மரணமாகிவிட்டார்.   தோழர்களுக்கு  நெஞ்சார்ந்த வீரவணக்கங்கள்.

என் மகன்
மீரான் மாஸ்ட்ர் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
 (சுப்பிரமணியம் சத்தியராஜன் )   


 

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF