Sunday, February 8, 1987

Wedding Greetings by K.A.Subramaniam in 1987

Wedding Greetings by K.A.Subramaniam in 1987 Length:2 Minutes

"The wedding ceremony of Thevakumar and Vallinayaki takes place here.
In their lives, it means they are starting the second phase. Life is a struggle.
The first phase of their lives, the school education - the struggle against social oppression, the struggle against poverty, the two have passed separately.
Today they come forward to focus and advance their lives today in a position of life partner.
It is now time for them to support each other, depend on each other and carry on their life struggle, at the same time looking at the situation in the world as a whole, the nations and nations of the world are fighting for the preservation of independence, for the liberation of nations and for the people's revolution. May your struggle be combined with their struggle and your role in the great struggle for world peace and human well-being! On this auspicious day, I wish the bride and groom all the best and live a great life !!"



 

"திரு. சோமசுந்தரம்  தேவகுமார் -  திருமதி வள்ளிநாயகி ஆகியோரின் திருமண வைபவம் இங்கு நடைபெறுகிறது . இவர்களுடைய வாழ்க்கையில் , இவர்கள் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கிறார்கள் என்பது அர்த்தம் . வாழ்க்கை ஒரு போராட்டம். இவர்களுடைய வாழ்க்கையில் முதலாவது கட்டம் தமது பாடசாலைக் கல்வி- சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம், வறுமைக்கு எதிரான போராட்டம் என இவர்கள் இருவரும் தனித் தனியாக கடந்து வந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் வாழ்க்கைத் துணை என்ற ஒரு நிலைப்பாட்டில் இன்று தமது வாழ்க்கையை ஒருமுகப்படுத்தி முன்னெடுக்க முன்வருகிறார்கள் .ஒருவருக்கு ஒருவர் துணையாக , ஒருவரை ஒருவர் சார்ந்து ,தமது வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளை , இவ்வுலகம் முழுமையிலுமுள்ள நிலைமைகளைப் பார்த்தால்,உலகத்திலுள்ள நாடுகள், தேசங்கள் சுதந்திரத்தை காப்பற்றுவதற்க்கும் , நாடுகள் விடுதலையை அடைவதற்கும் மக்கள் புரட்சியை வேண்டியும் போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்துடன் உங்கள் போராட்டம் இணையட்டும். உலக சமாதானத்திற்க்கும் , மனித குல நல்வாழ்விற்குமான பெரும் போராட்டத்தில் உங்கள் பங்கும் இணையட்டும் ! என வாழ்த்தி மங்களகரமான இந்நாளில் , மணமக்கள் சகல வாழ்வையும் பெற்று ,பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் !!!" -கே ஏ சுப்பிரமணியம்
 07-02-1987

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF