05-12 1991 அன்று, பேராதனைப் பல்கலைக்கழக, தமிழ்ச் சங்கத்தின் ஊடாக ஹெட்டியாராச்சி கலையரங்கில் பேராசிரியர். சி. தில்லைநாதன் அவர்களின் தலைமையில் ஈழத்து இலக்கியத்துறைக்கு முன்னோடியாக விளங்கிய பேராசிரியர். க. கைலாசபதியின் 9வது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூரும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர். க. கைலாசபதியின் நெருங்கிய நண்பரும் "புதிய பூமி’ பத்திரிகை ஆசிரியரும். முற்போக்கு சிந்தனையாளரும் ஆகிய சமூக இலக்கியவாதி திரு. சி. கா. செந்தில்வேல் அவர்கள் கலந்து கொண்டு "கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஈற்றில் மரீனா இல்யாஸ் நன்றியுரையாற்றினார்.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் சில வெளியீடுகள்
பேராசிரியர் க. கைலாசபதி 10வது நினைவு தினம் 16/12/1992
16 - 12.- 1992 அன்று, பேராதனைப் பல்கலைக்கழக, தமிழ்ச் சங்கத்தின் ஊடாக பேராசிரியர் கைலாசபதியின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டிய நிகழ்வு பேராசிரியர். சி. தில்லைநாதன் அவர்களின் தலைமையில் ஹெட்டியாராச்சி கலையரங்கில் 5.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் நினைவுப் பேருரையை ஸ்ரீ பாதக் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திரு. ந.இரவீந்திரன் “முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அதனையடுத்து தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடுகளான ‘கைலாசபதியின் சமூக நோக்கும் பங்களிப்பும்’ பதின்மூன்று (13) ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ‘பன்முக ஆய்வில் கைலாசபதி' என்ற மேற்படி நூல்களை தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் திரு. சோ. தேவராஜா வெளியிட்டு உரையாற்றினார். கலாநிதி. எம். ஏ. நுஃமான் இந்நூல்கள் மீதான ஆய்வுரையை நிகழ்த்தினார்.
Thanks Noolaham