Saturday, October 14, 1995

A poem in tribute to K A Subramaniam by Poet Sillaiyoor Selvarajan ஆங்கிலத்தில் ( தமிழாக்கம் : அரசி விக்னேஸ்வரன் )

















( தமிழாக்கம்: அரசி விக்னேஸ்வரன் ) 


மணியம் என்னுமொரு மாமனிதனின் நினைவுகளை, 
அவனது வீரவாழ்க்கையை, 
அவனது பண்புமிக்க நடத்தையினை,
சேவை நோக்கிலான அவனது விரிந்த பார்வையை, 
நினைவு கூரவென 
அலைபோலக் கூடியிருக்கும் தோழர்களே, 
என்னவனைப் பற்றிப் பாட எனக்கு பத்தே நிமிடம் தாருங்கள்.
ஆம், அவனை நான் ஆணவத்துடனே என்னவன் என்கிறேன்.
அவனை என்னவன் என்றே அழைக்கிறேன்-
அத்தகைய நெருக்கமான நட்புறவு நம்முள் இருந்ததனாலே தான்.
தவறென்றால் மன்னியுங்கள்.

அவனது இல்லத்தின் கதகதப்பில்,
அவனது துணைவி, குழந்தைகளுடன்,
போராட்டக் கொள்கைகளில் ஒன்றுபட்ட தோழர்களோடும் நண்பர்களோடும்,
பகிர்ந்து வாழ்ந்தவன் நானே என்பதால் 
அப்படிச் சொன்னேன். 
தவறென்றால் மன்னியுங்கள்.

என் பள்ளிக்காலத்தில் மொட்டவிழ்ந்தது நம் நட்பு. 
பின் நாம் கட்டற்று அலைந்தோம்.
உச்சமடையும் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்றிணைவதற்காய்,
ஒடுக்கப்பட்டவரின் பக்கம் நின்று வாதிடுவற்காய்,
தொழிலாளரின் வர்க்கப்போராட்டத்திற்காய்,
அரசியல் விவாதங்களில், கலாசாரச் சிந்தனைகளுக்கான போராட்டங்களில், 
மீண்டும் சந்திப்போம் என்று அறியாமல்,
இளவயதில், புரட்சியின் வீச்சினை உணராமல்
 சாதாரண  இளந்தாரிகளாய்ப் பிரிந்தோம். 

போர்க்களங்களில் மீண்டும் சந்தித்தோம், ஒரே தரப்பில். 
மணியம் என்னும் கவனம் கொண்ட மாணவனை,
சிறுகதைகள் பேச நேரம் இன்றி மௌனம் பேணிய
மாய மனிதனை,
மறைந்திருந்து போராடி மறைந்தபின்னும் வாழும் போராளியை,
மக்கள் பேரணியின் தலைமையில் தன் மௌனத்தைக் கலைக்கும் தலைவனை,
பாடி, சத்தியப்பிரமாணம் எடுத்துப் பின் சரணடையும் குணமற்ற வீரனை,
சமரசம் அற்ற வெற்றி வீரனை,
இளவாலை புனித ஹென்ரி கல்லூரியில் நான் சந்தித்தேன். 

அம்மகிழ்வைக் கூறவென் கவிதை திக்குகிறது.

மணியத்துக்கா மௌன அஞ்சலி? 
மௌனமாயிருக்க மறுத்து 
மக்கள் போராட்டங்களில் குரல் உயர்த்திய போராளிக்கா?
போர்க்குரலுக்குப் பதில் மௌன அஞ்சலியா? 
மன்னியுங்கள், என்னால் முடியாது!

மார்க்சிய லெனினிய வழியிலான 
பொதுவுடைமைப் பாதையால் ஈர்க்கப்பட்டோம்.
சந்தித்தோம், பேசிக்கொண்டோம், பாதையைக் கைக்கொண்டோம். 
வெவ்வேறு முனைகளில் போர்க்களத்தில் புகுந்தோம்
கலை, கலாசார முன்னணியில் நானும்
சளைக்காத போராட்டச் செயற்பாடுகளில் அவனும். 

மக்களுக்கு அமுதத்தை ஊட்டவென 
சீமெந்துத் தொழிற்சாலைப் போராட்டமென்னும் பாற்கடலைக் கடைந்து 
வெளிவந்த நஞ்சினை உண்டதுடன் நில்லாது 
ஹர்த்தால் போராட்டத்திலும்,
கல்விச் சமத்துவத்திற்கான போர்க்குணம்மிக்க ஆர்ப்பாட்டங்களிலும்,
தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கு தன் முயற்சியை அர்ப்பணிக்கவும்,
விளக்கின் சுவாலைபோல் வழிகாட்டவும்,
தொழிலாளர் சங்கங்களின் கொள்கைக் குழப்பங்கள் மத்தியிலும் 
விஞ்ஞானபூர்வ ஆய்வினூடு பிரச்சனைகளைக் கண்டறியவும்,
சாதிச்சமூக வன்முறைகளால் சூடிழந்து போகாமல் 
தந்தம் கொண்ட யானைபோல் வேலைசெய்யயவும், 
விட்டுக்கொடுக்காப் போர்த்தனத்துடன் கடைசிவரை குணமிழக்காமல் போராடவும், 
தியாகியென்னும் சொல்லுக்கு வரைவிலக்கணமான வாழ்வை வாழவுமென,
தொடர்ந்து போராடிய
கே. ஏ. சுப்பிரமணியம், என்னவனின் நண்பன் நான்.

நட்பின் மனித உருவம்.
சமத்துவத்தில் தேர்ந்த  திறனாளி.
அம்மகிழ்வைக் கூறவென் கவிதை திக்குகிறது.

கலை கலாசாரத்துள்அழுக்குகள் ஊடுபுகாது 
தவிர்க்கும் கொள்கைகளைக் கண்டறிந்து 
மற்றவர்களுடன் நானும் ஈர்க்கப்பட்ட வேளையில் 
“செல்வா, குழம்பாதே”என்று 
பக்கம் நின்று எச்சரித்துப் பாதைகாட்டிய 
தோழர் மணியத்தை நினைவு கூர்கிறேன்.
 அம்மகிழ்வைக் கூறவென் கவிதை திக்குகிறது.

நெருங்கிய உறவின் காலங்கள்
மனதில் நிழலாடி நினைவை நனைக்க 
அம்மகிழ்வைக் கூறவென் கவிதை திக்குகிறது.

மணியமும் நானும் தனிமையில் பேசுகையில் 
அவன் அன்புத்துணையாளின் உபசரிப்பின் கதகதப்பு,
சத்தியராஜன், சத்தியகீர்த்தி, சத்தியமலர் என்னும் 
அவன் மூன்று இளம் குழந்தைகள் 
குளிர் வசந்தத்தின் இனிமையொத்த தொனியில் 
என்னை “மாமா” என்றழைக்கும் இன்சொற்கள்,
சொல்ல வார்த்தையில்லை. 
அம்மகிழ்வைக் கூறவென் கவிதை திக்குகிறது.

இல்லாதவர்களின் நண்பனே, 
நாம், நீயில்லாதவர்களானோம்.
மணியம்! உனக்கென் மார்க்சிய வணக்கங்கள்!
போய்வா மணியம்! ஆனால்
உன்னோடு நான் பெற்ற மகிழ்வான பொற்காலங்கள் 
இனிப்பான பானங்களுடன்
புது உலகை அமைக்கும் ஆர்வத்தில் கொண்ட 
பெரு நம்பிக்கையையும் பகிர்ந்த 
பொற்காலங்கள்
போய்விடவில்லை. 
உன் சிறு மகன்கள், உன் சிறு மகள், உன் மாப்பிள்ளை,
இன்னும் நீ போகமுன்னர் எழுச்சிகொள்ளவைத்த மேலும்பலர், 
இவை பொற்காலங்கள், இனிய பொற்காலங்கள்.

போய்வா மணியம்!
நீ திரும்பும் போது உன் பணி நிறைவுற்றிருக்கும்!
உன் சிந்தனைகள்
உன் பெருங்கனவுகளின் காட்சிகள்
எல்லாம் கிடைக்கப்பெற்றிருக்கும்.

என் இளவரசே போய்வா!
சமத்துவத்துக்கான அவாவுடன் நீ
திரும்பும் போது,
மண்ணில் பொதுவுடைமை மலர்ந்திருக்கும் 
அப்புதிய பூமியைக் காண,
விடுமறை கழிந்து நீ வரும்வரை 
கனத்த  நெஞ்சுடன் 
நாம் காத்திருப்போம்.
மணியம்! உனக்கென் மார்க்சிய வணக்கங்கள்!

( தமிழாக்கம் : அரசி விக்னேஸ்வரன் )

Comrades who have gathered here
To recall in a cascade
Thoughts of a great man called Maniam
His life of bravery, his conduct of humility
His broad outlook based on service,
To pay tribute to that immortalised soul,
Allow me a mere ten minutes to sing of my man.
Yes, I arrogantly referred to him as my man.
I called him my man
For there was such intimate fellowship between us.
Forgive me if I was wrong.
I said so since I was one who shared and lived among friends
In the warmth of his shelter with his wife and children
And comrades who united as one in the policies of struggle.
Forgive me if I was wrong.
Our friendship budded in my schooldays
Then we ran free. We were mere lads
Who parted company
In our adolescence, unaware of the revolutionary sweep,
Not knowing that we will meet again
To merge through struggles for rights that would dominate,
Through arguing the case for the oppressed and
The class struggle of the workers,
In political debate and in battles for cultural thought.
We met again in battlefronts, on the same side.
I met at St Henrry’s College, Ilavalai
Maniam, the meticulous student
Who preserved silence, with little time for chit chat,
A man of mystery,
An underground fighter who lives on after his death,
A leader who breaks his silence at the head of a mass rally,
A hero who did not sing and swear only to surrender,
A hero who achieved things without compromise.
Poetry stammers to describe that joy.
A silent tribute for Maniam–
The fighter who refused to be silent
And spoke up in struggle for the masses?
A silent tribute in place of a battle cry?
Forgive me, I cannot!
We have been captivated by the communist way
Along the path of Marxism Leninism.
We met. We spoke. We embraced the path
And entered the battlefield on different fronts.
I, in the front of art and literature, and
He, in the field of relentless action in struggle.
Having consumed the poison that
Emerged in the churning of the cement factory struggle
To feed the ambrosia to the folk*
He continued in struggle in the hartal,
In the militant demonstrations for equality in education,
To dedicate his efforts to working class struggles,
To lend his shoulder to the oppressed in caste conflicts,
To lead the way like the flame of the lamp
Amid ideological confusion in the worker’s unions,
To identify the issues by scientific analysis
Without losing heat by communal violence,
To work like a tusker and
Struggle with character to the end with relentless militancy,
And to lead a life true to the definition of a martyr.
I am a friend of KA Subramaniam, my man,
The personification of friendship,
The able master of egalitarianism.
Poetry stammers to describe that joy.
I recall the Comrade Maniam
Who identified the principles that prevent filth
From infiltrating art and literature and,
When I among others was tempted,
Stood behind to warn me,
“Hey, Selva, do not be baffled”, and show me the way.
Poetry stammers to describe that joy.
As the times of close relationship
Cast their shadows in my mind and soak my thought
Poetry stammers to describe that joy.
For me to sing of the times
When Maniam and I discussed in privacy,
The warm hospitality of his dear wife,
The sweet words of the three tender children,
Sathiyarajan, Sathiyakeerthi and Sathiyamalar,
Calling me “Uncle”
In a tone akin to the comfort of a cool spring,
I have not the words.
Poetry stammers to describe that joy.
The friend of the dispossessed, we have been dispossessed of you.
Maniam! My Marxist salutations to you!
Farewell Maniam! But
The golden moments of happiness I had with you,
The golden moments in which we shared
With sweet drinks and our majestic confidence in
The desire to make a new world,
They have not gone away.
Your little boys, your little girl, your son-in-law
And so many more whom you had aroused before you went.
Those are golden moments, tender golden moments.
Farewell Maniam! When you return
Your task would have been done.
The thoughts that you had,
The scenes of your great dreams
Would all have been realised.
Farewell my prince! When you return
With the desire for equality,
Communism would have blossomed on earth.
With aching hearts we would await your
Return from leave to see that new world.
Maniam! My Marxist salutations to you.


[This poem in tribute to Comrade K A Subramaniam was read out as funeral oration by the late Sillaiyoor
Selvarajan
a close friend and a leading Sri Lankan Tamil poet.]

* Note: Refers to Hindu mythology where the Devas and Asuras churned the celestial ocean of milk with the celestial serpent as rope to extract its ambrosia, and when the serpent spat venom Lord Shiva swallowed it to save all living beings. 

சில்லையூர் செல்வராசன் (25 சனவரி 1933 - 14 அக்டோபர் 1995) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த சில்லாலை ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராசன் எனச் சூடிக்கொண்டார்.

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF