Sunday, August 3, 2008

கவிதை தொகுப்புகள்

 "நான்" - வள்ளியம்மை சுப்பிரமணியம்

Thanks to "Tamilmurasu".Singapore Sun, 03/08/2008 




என்னை ஒரே வரியில் எளிதாகச் சொல்லிவிட 

அன்னை தெரசா அம்மையார் போல் - நான்

நோயில் உழன்ற நொடித்தவரைக் காத்தேனா?

பாயில் விழுந்தோரைப் பராமரித்துப் பார்த்தேனா? 

அன்புடன் தாய் மொழியும் அயராத கைவினையும்
என் இனிய மாணவிகள் தம்காலில் நிற்பதற்கு
தாய்போல் இருந்தவரின் தரத்தை உயர்த்திவிட்ட
காய்தல் உவத்தில்லாக் கடமையுணர் வுள்ளவள்நான். 

அம்மம்மா தன்னுடைய அகவை எழுபதிலும்
தம்மால் முடிந்தவரை தமிழ்கேட்க வருவதைப்பார்
என்றே இளைஞர்கள் எழுச்சியுடன் ஓடிவர
நன்றே அவர்கட்கும் நயமான கவிதைவரும். 

அமிழ்தென காதினிலே அருவியாய்ப் பொழிவதனால்
தமிழ்க்கவிதை கேட்கையிலே தலைவலியும் தெரிவதில்லை....

சிங்கப்பூர் "தேசிய தினம்"- வள்ளியம்மை சுப்பிரமணியம்
Thanks to Tamilmurasu.Singapore Sun, 10/08/2008

சிங்கைத் திருவிளக்கே மங்காப் பெருவிளக்கே எங்கள் இதயத்தில் என்றும் சுடர்விடும் ஆற்றல் மிகுந்த அருமைத் திருநாட்டின் போற்றும் தேசிய நாள் இது. நாற்பத்து மூன்றாவது நந்நாளைக் கொண்டாடும் காற்றில் மிதந்துவரும் கானங்கள் சொல்வதனால் துரிதவளர்ச்சி கண்டு துல்லியமாய் விளங்குகின்ற அரிய தேசீய நாள் இது. ஒரு நாட்டின் செல்வங்கள் அந்நாட்டுக் குடிமக்கள் உருவாய்க்காய் அயராது உழைப்பவர் வீட்டிலே திருமகள் வீற்றிருக்கும் திவ்வியத்தைப் பார்த்த பெருமிதத்தாயின் தேசிய நாள் இது. நான்கு இனமக்கள் நல்வழியில் வாழ்வதற்கு பாங்கான இல்லங்கள் பத்திரமாய்த் தான் ......

 சிங்கப்பூர் கடற்கரைச் சாலை கவிமாலை கவிதை தொகுப்புகள்

2009 கவிமாலை கூடி வாழ்த்தும் குயில்கள்  

2010 கவிமாலை பொன்மாலை பூக்கள்  



2011 கவிமாலை பளிங்கு மொட்டு  

2012 கவிமாலை ஒருதுளி கடல்  

2013 கவிமாலை கதவு திறந்தது  



2014 கவிமாலை மீண்டும் ஒரு முறை  

2015 கவிமாலை இன்னும் கொஞ்சம் வெட்கம்


Thanks to  


"ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்"





"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF