புத்தாண்டாள் சிரித்துப் பிறப்பாள்
--------------------------------------------------------------
ஆசியநாட்டில் எமதுநாடே ஆரம்பம் செய்த
தேசியசேவை அவசியத்தைத் திட்ட மாக்கினார்
வாலிபவயதில் மனச்சறுக்கித் தடம் புரண்டு
போலியான நடைமுறைக்குத் தள்ளப் படாமல்
சாதிமதப் பூசலில்லாச் சமத்துவம் காட்டி
நாதியற்ற நலிந்தவர்க்கு உதவிகள் நல்கி
நீதியிலே சகலருக்கும் நிதான மானவீடு
ஓதியுணர்வு மிகுந்தவர்கள் மதிக்கும் நாடு
கரியமல வாயுவின் பெருக்கம் குறைக்க
கருமமாற்றும் நாடுகளின் கைகள் உயர
உரியநட வடிக்கைகளை ஊக்கப் படுத்தி
அரிய’ஓசோன்’ படலத்தின் ஓட்டையை அடைக்க
தெரிவுசெய்யும் ஆக்கங்கள் திருப்தி கரமாய்
புரிந்துணர்வு கொண்டவர்கள் இங்கும் வாழ்வதால்....
சரிந்திடாமல் பொருளாதாரம் ஓங்கி உயர்வாள்
சிறப்புடனே புத்தாண்டாள் சிரித்துப் பிறப்பாள்.!
வள்ளியம்மை சுப்பிரமணியம்