பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய புதுமைத் தேனீ- மாசிலா அன்பழகன் அவர்கட்கு,
தங்களின் “என் வானம் நான் மேகம்” நூலினை கவிஞர்-ந-வீ- சத்தியமூர்த்தி அவர்களின் மூலம் இந்தத் தாயாருக்கும் அனுப்பி வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றியையா!
வாசித்து முடித்தபின் தொடர்பு கொள்ளலாமென்றிருந்தேன்..............
மற்றவர்கள் தான் பார்த்த திரைக்கதையைக் கதையாகக் கூறுவார்கள், விமர்சனம் செய்வார்கள்.நீங்களோ....! நெறியாளுநராகக் கடமையாற்றிய திறமையினால் (1)காட்சிகளை (2) திருப்பங்களை ...கேட்போரின் கேள்விக்கிடமின்றி கூறியிருக்கிறீர்கள்.அது பற்றி நேரில் பேசுவோம்.
ஆறு திரைக்கதையும் அற்புதம் ! அபாரம் !!
அவற்றுள் 4 ம் கதையாகிய “ காதலுடன் வாழ்” பற்றி எழுதுவதில் எனக்கு உடன்பாடு இருக்கிறது.
கதா நாயகன் கதாநாயகி பிறந்து வளர்ந்த மண் , நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணப் பிரதேசம்.
கதாநாயகி பின்னர் வாழுமிடம் ....என் உடன் பிறந்த தங்கை வாழுகிற கனடா மொன்றியல் பிரதேசம்.இரண்டு நாடுகளும் சேர்ந்தாற் போல் கதை நடக்கிறது.பக்கத்து நாடாகிய இந்தியா சென்று...அங்கிருந்து வேறு நாடு சென்று..........நாமும் கதாநாயகனுடன் ஓடுகிறோம்.போராட்டக் களத்தை நேரில் பார்க்காத தங்களால் எப்படி....? உள்ளரங்கக் காரியங்களைக் காட்சிகளை எழுத முடிந்தது?.......ஆச்சரியமாக இருக்கிறதே!ஒருவேளை நீங்கள் உளவுப்படைப் பிரிவில் ஏதாவது
நாட்டில் கடமையாற்றினீர்களா?...இருக்கட்டும்.
இப்படியொரு திரைக்காவியத்தை கனடா வாழ் புலம் பெயர்ந்த ( யாழ்ப்பாணத் ) தமிழர்கள்....செல்வச் சீமான்கள்.....திரைபடமாக்க முயற்சியெடுப்பார்கள்.நிச்சயமாக இது நடக்கும்.!
அந்த முயற்சிக்கு திரைக்கதை வசனம், பாடல்கள், நெறியாள்கை யாவும் தாங்களே செய்து கொடுக்கவேண்டியும் வரும்,அந்த நாள் அதிக தூரத்தில் இல்லையென்றே நம்புகின்றேன்.
சகல கதைகளிலும் மனித நேயம் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.போராட்டக் கதையானாலும் அங்கு மனித நேயம் வென்று விட்டது......வாழ்த்துக்கள்!................அம்மா.