மே தினமே..........
---------------------------------
போராடாமல் எதுவும் கிடைக்காது
போராடிப் பெற்றது ஒரு நாளும் அழியாது!
பார்முழுதும் இன்று மே' தின விடுமுறையாம்......
கூர்ந்து பார்ப்போமே எப்படிக் கிடைத்ததென்று....
ஏர்பிடித்து வயல் உழுது.......
நீர்பாய்ச்சிப் பயிர் வளர்த்து ......
கூர் அரிவாள் கைப்பிடித்து அறுவடை செய்துமே....
நேர்வழியே உழைத்த விவசாய மக்களுடன் +
சம்மட்டி,கோடரி,மண்வெட்டி, சுத்தியலும்
தம்கையில் தூக்கிச் சகல தொழில்களையும்
நம்கடமை என்று உழைத்திட தொழிலாளர்
இம்மட்டுமல்ல:இரவுபகல் ஓய்வின்றி......
இருபத்து நான்கு மணித்தியாலம் உழைத்தலுத்து....
ஒருமித்து எல்லோரும் ஒரே குரலில் தமது வேலை....
எட்டு மணித்தியாலம் உழைத்தாலே போதுமென்று
திட்டமுடன் வெள்ளைக் கொடியைக் கைத்தாங்கி.....
ஊர்வலமாக முதலாளிச் சமுகம் முன்னே....
கோரிக்கை வைத்துக் கோஷத்தை எழுப்பியதால்......
தடியடியும் தாங்கவொண்ணாக் கசையடியும்..
விடிவு பிறக்கும் வரை வீரமுள்ள மக்களெலாம்....
வெள்ளமென அவருடம்பில் வடிந்த குருதியினால்....
வெள்ளைக் கொடியெல்லாம் சிவப்பு நிறமாச்சு.....
முடிவிலொரு நல்ல தீர்ப்பு
வேலையும் எட்டுமணி....விடிவு பிறந்த தென
வீரமுள்ள உழைக்கும் வர்க்கம்
மேன்மையுடன் குரல் எழுப்பி தியாகம் வென்றதென்று.....
மேதகு விடுமுறை "மே" தினம் உலகமெங்கும்!
வள்ளியம்மை சுப்பிரமணியம்