மீரான் மாஸ்ட்ர் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
(சுப்பிரமணியம் சத்தியராஜன் ) 1962-10-30....2001-08-25 நினைவு
"நாட்டுக்கு உழைத்து நிற்கும் நல்ல தமிழ்த் தாய்க்குலமே
வீட்டுக்கு ஒருமகனை வீரமுடன் தாராயோ " என
உன் கையெழுத்தில் சந்திதோறும் சுவரொட்டிகள் ,
உன் பிரச்சாரத்தால் உதித்த பல ஆயிரம் போராளிகள்
என் மூத்த குழந்தை உன்னை விடுதலைக்காய் கொடுத்தேன்.
ஏற்றத் தாழ்வு இல்லாத எழுச்சியுறு அரசமைக்க.....
ஆற்றல் மிக்க தோழர்கள் அயராது பாடுபட.......
போற்றும் இளமைப் பொன்வசந்தம் சிறைக்குள்ளே......
மாற்றுச் சமுதாய அமைப்புக்காய் வெந்தோர் பலர்.!
நீயும்விதி விலக்கல்ல; மூன்றுமுழு ஆண்டுகள் சிறைக்குள்ளே....
சாயாத மனவுறுதி....சன்சலத்தைப் போக்கிவிட.......
பாயும் பாச அலை பெற்றார், சகோதரம்மேல்....
காய்தல் உவத்தலின்றிக் கடமையுணர் வுள்ளவன் நீ!
தேசம் நேசித்த உன் தந்தை இழந்தேன்
தமிழ் நேசித்த உனையும் இழந்தேன்
விடுதலை நேசித்த சந்ததி இழந்தோம் ,
ரணங்கள் ஆறவில்லை ,ஆறுதலும் கிட்டவில்லை
இராசான் ...இராசா.. ராசான் ராசா ..
வாழ்ந்த ஆண்டோ முப்பத்தெட்டு.......வாயடைத்தோம்......ராசனே.....!
ஆழ்ந்த துயரத்தில் அழுகின்றோம் ஆறுதில்லை.......மனம்.
தாழ்ந்து போகவிடாமல்.....தாயுடன், தங்கை, தம்பியும்.....என்றும்
வீழ்ந்து விடாமல் வேரெனவே நீயிருந்தாய்!- அம்மா
உலுக்கிய கொடூர நாட்கள் 11-12 -1984-தொடக்கம் 72
மணித்தியால ஊரடங்கு 15-12-1984 நினைவு
11.12.1984 ஆம் ஆண்டு நமது ஊர் உட்பட பண்டத்தரிப்பு
சித்தங்கேணி, வடக்கம்பிராய், விக்டோரியாகல்லூரி, பறாளாய்முருகன் ஆலயம், திருவடிநிலை, மாதகல்,
பண்டத்தரிப்பு இதற்க்குள் அடக்கப்பட்ட சகல கிராமங்களையும் உள்ளடக்கி 72
மணித்தியால ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தேடுதல் ஏன் ஏற்ப்பட்டது என்பது சகலரும் அறிந்த விடயம். இந்த
தேடுதல்வேட்டை முதல் நாள் சுமாரான தேடலாகவே அமைந்தது. இருந்தும் எமது
ஊரைச்சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கொடுத்த தகவல்களின்படி நமது ஊருள் தஞ்சம்
இருந்தவர்கள் பலர் தமது இடங்களை மாற்றிவிட்டனர். இருந்தும் சில பல்கலைக்கழக
மாணவர்கள் இடம்மாறமுடியாமல் போனது. இரண்டாம் நாள் கடுமையாக தேடுதலும்
கொலைகளும் அதிகரித்தநாளாகும்.அன்று தான் குணதிலகம் பாஸ்கரன் அவர்கள்
பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாக்கும் பணியில் ஓடியவர் மூட்டு சந்தைக்கு
அருகில் இவருக்கு காலன் அருகில் வந்து சூடுபட்டார். இவரை காயங்களுடன்
பாதுகாக்கமுடியா நிலையாகும். இருந்தும் இவர் அன்றிரவு இவரது அண்ணர் இவரை
பாதுகாக்க முயறச்சி செய்தும் இவர் மரணமாகிவிட்டார். இதே நாள் தான் பறாளாய்
முருகன் ஆலயத்தின் முன்றலில் நடந்த எதிர்மறை போராட்டத்தில் கந்தையா ஜங்கரன்
அவர்களுக்கு சூடுபட்டது. இவர் காயங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டு முகாமில்
வைத்தியம் கிடைக்காமல், இவர் மரணமானார். இதே நாளில் எமது ஊரில் பல
அயலூரவர்கள் இறந்தனர். எமது அயல் கிராமத்தவர் பலரையும் எமது ஊர் நோக்கி
நகர்த்தியவர்கள் அவர்கள் இடங்கள் தெரியாமை, மழைவெள்ளம், அவர்கள் பலர்
காயங்களுடன் வைத்தியம் அற்று இறந்தவர்கள் பலர். திருநாவுக்கரசு
ஜெகதீஸ்வரன், கதிரமலை நந்தீசன் இருவரும் மூன்றாம் நாள் அம்மன் கோயில்
சுற்றாடலில் வைத்து சூடுபட்டு இறந்தனர்.இவர்கள் மட்டுமல்ல அன்று எமது ஊரில்
21 பேர்களுக்குமேல் உயிர்நீர்த்தனர் இதில் 4 இளைஞர்கள் எமது உறவுகள்.
இவர்கள் மரணித்து 28வருடங்கள்.இன்று இணைய வசதிகள் இருப்பதால் இவர்களுக்கு
மதிப்பளிக்கும் வகையில் ஞாபகம் ஊட்டுகின்றேன். இவர்களை நண்பர்கள்,உறவுகள்,
ஊர்மக்கள் மறந்திருக்கமுடியாது. அந்த 15.12,1984 அன்று காலை 7 மணிக்கு
ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரம்.சரியாக ஏழு மணிக்கு நான் கூறிய ஊர்கள் எல்லாமே
மரண ஓலங்கள்.யார் இறந்தனர் என ஒவ்வொருவரும் தெரியாமல் அவரவர் உறவுகளை
தேடும்படலம் ஒருபக்கம், இறந்தவர்கள் வீட்டில் மரணஒலம், காயப்பட்டவர்கள்
தப்புவார்களா என்ற ஓலம்,கைதானோர் எங்கு என்ற கேள்விக்கு பதில் தெரியாதோர்.
காணாமல் போனவர் கிடைப்பாரா என்ற ஓலம். அவ்வளவு மக்களும் ஊரில் சில நாட்கள்
நடைப்பிணங்களாகவே உலாவந்தனர். -நன்றி-பண் த.பாலா அவர்களுக்கு
Thanks to Source: http://saanthai.blogspot.in/2012/12/11-12-1984-15-12-1984.html