Tuesday, July 1, 2014

பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா நூற்றாண்டு உரையாடல் Respectable Comrade Pon Kandiah Centenary Dialogue


பெருமதிப்புக்குரிய  தோழர் பொன்.கந்தையா அவர்கள்

Respectable Comrade Pon Kandiah

1 July 1914 –  8 September 1960

சுதந்திரன் 1960.09.11 ஞாயிறு பதிப்பின் செய்தியின்படி பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா "வியாழன்" 8 செப்டம்பர் 1960 அன்று காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


According to the above news from சுதந்திரன் 1960.09.11 Sunday Edition mentioned that Respectable Comrade Pon Kandiah passed away on "Thursday". 8 September 1960

பள்ளி நாட்களில் மதிப்பிற்குரிய தோழர் பொன் கந்தையா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அவரது விடுதித் தோழரின் கூற்றுப்படி "ராஜசிங்கம்" என்று அழைக்கப்பட்டார். - ஏ.நீலகண்டன் (வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர்)

In School Days Respectable Comrade Pon Kandiah was known as "Rajasingam" according to his Hostel Mate at Jaffna Hindu College Mr. A . Neelakandan ( Teacher at Velanai Central College )

"வெவ்வேறு காலங்களில் வரலாறு ஒரு சமூகம் அல்லது நாட்டின் வாழ்க்கை சார்ந்த பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறது. இந்த நாடு தனது அரசியல் சுதந்திரத்தை வென்றபோது, ​​நாட்டின் தீர்க்கமான முக்கியமான அடுத்த கேள்வி பொருளாதார வளர்ச்சி என்று நான் கூறுகிறேன். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். எனவே நாட்டின் பொருளாதார நலனை மேம்படுத்தி, அது அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை வலுப்படுத்தும்.எமக்கு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் கேள்விகள் இந்த மிக முக்கியமான மற்றும் தீர்க்கமான கேள்வியின் பின்னணியில் தீர்க்கப்பட வேண்டும். நாடு. மொழி கேள்வி அத்தகைய கேள்விகளில் ஒன்றாகும்." -பொன் கந்தையா 4 மே 1956 அன்று பாராளுமன்ற விவாதத்தின் போது.


"At different times history poses different questions on which depend the life of a community or country. When this country won its political freedom, I say that next question of decisive importance for the country was the economic development. We must take those measures which will so promote the economic welfare of the country, that it will reinforce the political independence and the welfare and happiness of the people. Any other questions that conforny us must be solved in the context of this supremely important and decisive question of the economic development of the country. The language question is one such question." -Pon Kandiah on 4th May 1956 during Parliament Debate.



தனிச் சிங்களச் சட்டத்தின் மீது பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா அவர்கள் ஆற்றிய உரை
சில தமிழ் இனவாதிகள் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் செய்யவில்லை என்று அன்றும் இன்றும் கூறி வரலாற்றைத் திரித்து வருகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
உண்மையில் உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஸ்யாவில் லெனின் தலைமையில் அமைந்த முதல் சோசலிச அரசுதான் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு முதன்முதலாக சுயநிர்ணய உரிமை வழங்கியது. அதன் பின்னரே சுயநிர்ணயம் என்ற சொல் அகராதியில் இடம் பெற்றது என்றுகூடத் துணிந்து கூறலாம்.
இலங்கையில் 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க அரசு நாட்டின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டும் இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் ‘தனிச் சிங்கள’ சட்டத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. அப்பொழுது அந்தச் சட்ட மூலம் சம்பந்தமான விவாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன்.கந்தையா அவர்கள் நிகழ்த்திய உரையின் சில முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. இது கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒரு உதாரணம் மட்டுமே.- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள்
30 நவம்பர் 1989 இல் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவேந்தல் கூட்டத்தின் போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார் .

“இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான எனது கருத்து நோக்கு நான் ஒரு தமிழனாக இருக்கிறேன் என்ற உண்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகிறேன். எனது கடந்த காலத்தினையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கிறது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும்.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது. எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியைப் பிரயோகிக்கக்கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக்கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கிறீர்கள்.
நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதில் பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதாரக் கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புத்தான் எமது கட்சி. சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும் விரக்தியிலும் அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் பற்றிப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார, சமூக ரீதியான எல்லா மட்டங்களிலும் அவர்களது உரிமைகளுக்காக இது போராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக எமது கட்சி போராடுகின்றது.
எமது அரசியற் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினரான நாங்கள் முழுப் பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பியோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி செய்யவும் இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். மற்றெந்த மொழிக் குழுக்களையும் விட, எந்த மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது.”-பொன்.கந்தையா

பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா அவர்கள் பற்றி பெருமதிப்புக்குரிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் எழுதிய அஞ்சலிக் கட்டுரை

பெருமதிப்புக்குரிய  தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள்

பெருமதிப்புக்குரிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள்

கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1956இல் தெரிவான தோழர் பொன்.கந்தையா அன்றைய இலங்கை அரசு கொண்டு வந்த ‘தனிச் சிங்கள’ சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை எனது முன்னைய பதிவில் பிரசுரித்திருந்தேன். அதைப் பலரும் வரவேற்றுப் பாரட்டியிருந்ததோடு பகிர்ந்தும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு பொன்.கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கவில்லை. எனவேதான் இந்தப் பதிவில் கந்தையா அவர்களின் உற்ற தோழரும், கம்யூனிஸ்ட் கட்சியில் அவருடன் ஒன்றாகப் பயணித்தவருமான காலஞ்சென்ற தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் பொன்.கந்தையா காலமான (1914 – 1960) போது “தியாகச் சுடர்” என்ற தலைப்பில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையைக் கீழே பதிவிட்டுள்னேள்.
நன்றி.- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள்

"தனது 46ம் வயதில் தோழர் பொன்.கந்தையா மரணம் அடைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியும், சுதந்திரம், ஜனநாயகம் முதலிய முன்னேற்ற நோக்கங்களுக்கான பரந்த முற்போக்கு இயக்கமும் பெரும் நஸ்டமடைந்துவிட்டன. இந்நஸ்டம் சுலபமாக நிவர்த்தி செய்யக் கூடியதொன்றல்ல.
1915ல் வடமராட்சிப் பகுதியிலுள்ள கரவெட்டி என்ற கிராமத்தில் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்திலே கந்தையா பிறந்தார். அவர் வாழவிருந்த சரித்திரக் காலத்திற்கும், அவர் நடத்தவிருந்த வாழ்வுக்கும் அவர் பிறந்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அது முதலாம் உலக யுத்தம் நடந்த காலம். முதலாளித்துவ தத்துவத்தின் நெருக்கடியான நிலை உத்வேகமடைந்து வந்த காலகட்டம். இன்னும் இரு வருடங்களில் உலக சரித்திரத்தின் முதல் சோசலிசப் புரட்சி உத்வேகமடைந்து, முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு வேண்டிய இயக்கம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. என்றும் மறக்க முடியாத, போற்றித் துதிக்கப்படும் லெனினுடைய தலைமையிலும், சக்தி வாய்ந்த போல்ஸ்விக் கட்சியின் தலைமையிலும், மகோன்னதமான ருஸ்யப் புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது.
மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களைப் போல நாளடைவில் கந்தையா ஆங்கிலக் கல்வியைத் தேடிச் சென்று, யாழ்ப்பாணம் இந்துக் கலலூரியில் கல்வி பயின்றார். கீர்த்தி பெற்ற அரசியல், சமூக சிந்தனையாளன் என பிற்காலத்தில் அவரை எல்லோரும் வியந்து போற்றக்கூடிய மன வளர்ச்சித் திறனை அவர் அக்காலத்திலேயே காட்டத் தொடங்கினார். அவருடைய மரணத்திற்குக் காரணமாகவிருந்த, பிறப்புக் காலம் தொடங்கியே இதயக் கோளாறு காரணமாக உடல் பலவீனமடைந்து, பாடசாலை நாட்களில் விளையாட்டுக்களில் பங்குபற்ற முடியாத நிலையில் இருந்தது.
இதய நிலை எப்படி இருந்த போதிலும், பாடசாலைக் காலங்களில் கூட, தெளிந்த சிந்தனை, தெளிவான விளக்கம் என்பவற்றிற்கேற்ப மூளையுள்ளவராக அவர் திகழ்ந்தார். ஆகவே பல்கலைக்கழகத்தில் உபகாரப் பணம் பெற்றுப் படிக்கும் மாணவ அந்தஸ்தைப் பெற்றபோது எவரும் ஆச்சரியப்படவில்லை.
பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், பாளி ஆகிய கீழைத்தேச மொழிகளில் விசேட படிப்பைக் கைக்கொண்டார். அக்காலத்தில் உலக விவகாரங்களில், குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விசேட அக்கறையுள்ளவராக இருந்தார். முதல் மாணவன் என்ற முறையில் தனது படிப்பு நோக்கத்தையும் மனதில் தெளிவாக்கிக் கொண்டார். பட்டதாரியாகியதுடன் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேலும் கீழைத்தேச மொழிகளில் உயர் கல்வி பயில உபகாரப் பணம் பெற்று படிக்கச் சென்றார்.
இது மிக அபூர்வ சாதனையாகும். ஏனெனில் எந்தவோர் வருடத்திலும் ஆறு அல்லது ஏழு மாணவர்கள்தான் இவ்விதமான உபகாரப் பணம் பெற்றுப் படிக்கும் சலுகையை பெறக்கூடியதாக இருந்தது. அதே வருடத்தில் தோழர் அ.வைத்திலிங்கமும் கணிதத்தில் திறமை காட்டி உபகாரப் பணம் பெற்று இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார்.
1 மே 1987ல் நடைபெற்ற ஐக்கிய மே தினக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய தோழர் அ. வைத்திலிங்கம் அவர்கள் உரையாற்றினார். மேலும் தோழர் கே. நவரத்தினம் , தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.

இருவரும் தங்களது படிப்பிற்காகத்தான் கேம்பிரிட்ஜ் கலாசாலைக்குச் சென்றார்கள். அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வேண்டியதுதான். அக்காலத்து வழக்கமான முறைப்படி, இலங்கைக்குத் திரும்பி வந்ததும் ‘சிவில் சேவையையும்’, ஆயிரம் ரூபாவிற்குக் குறையாத சம்பளம், மந்திரியின் நிரந்தரச் செயலாளர் வேலை என்பனவற்றுடன், இவ்வித உத்தியோகத்துடன் வரும் அந்தஸ்தும் அதிகாரமும் அதிகமாகவுண்டு.
உலகம் முழுவதும் தங்களது காலடியிலிருக்க, படிப்பில் கௌரவிக்கப்பட்ட இவ்விரட்டையர்கள் புரட்சிகரமான பாதையில் செல்லத் தொடங்கினார்கள். இந்தியாவின் இன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் திரு.வீ.கே.கிருஸ்ணமேனனின் தலைமையிலிருந்த ‘இந்தியன் லீக்’ என்னும் ஸ்தாபனத்திலும், பின்னர் பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்தவர்களாகச் சேர்ந்தார்கள் எங்கள் இரட்டையர்கள். வயதிற்கேற்ற உணர்ச்சி வேகச் செய்கையாகவோ அல்லது அதிகாரத்தை எதிர்க்கும் செய்கையாகவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. மனித வர்க்கத்திற்கு முதலாளிகளும் சோசலிஸ்ட்டுகளும் என்னத்தைச் செய்கிறார்கள் என்ற கேள்வியை அலசி ஆராய்ந்த முடிவின் அடிப்படையிலேயே, ஓர் விளக்கம் சேர்ந்த செய்கையாகவே அவர்கள் இதைச் செய்தார்கள்.
கேம்பிரிட்ஜில் இரு வருடங்கள் படித்த பின், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கான இன்னொரு உபகாரப் பணம் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது தோழர் கந்தையாவுக்கு.
1940ல் கந்தையாவும், வைத்திலிங்கமும் இலங்கைக்குத் திரும்பி வந்தார்கள். அரசியலிலிருந்து விலகி கிடைக்கக்கூடிய பெரும் உத்தியோகங்களை எடுக்கும்படி நண்பர்களும் உறவினர்களும் அவர்களுக்குப் புத்திமதி கூறி நிர்ப்பந்தித்தார்கள்.
ஆனால், சோசலிசத்தை நோக்கித் தொடர்ந்த பாதையிலிருந்து விலகிச் செல்ல அவர்கள் சம்மதிக்கவில்லை. இலங்கையிலுள்ள புரட்சிகரமான இயக்கத்தில் சேர்ந்தார்கள். வலுவடைந்த சக்தி வாய்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் வேலையில் அவர்கள் தங்களுடைய முழுச் சக்தியையும் அர்ப்பணித்து உழைத்தார்கள்.
இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் ஸ்தாபகராக, அங்கத்தவரும் அமைப்பாளருமாக கந்தையா உழைத்தார். இன்று அது இலங்கையின் மிகப்பெரும் தொழிற்சங்க ஸ்தாபனங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கீழைத்தேச மொழிகளில் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் முதல் மார்க்சிசக் குழுவொன்றையும் அவர் ஏற்படுத்தினார்.
பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா அவர்கள் இறந்த பின்னர் அவரது மனைவி பரமேஸ் அக்காவை தோழர் சண் திருமணம் செய்திருந்தார். கடந்த காலங்களில் பல்வேறு வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்திருந்தாலும், பல தசாப்தங்களாகக் கவனமாகப் பாதுகாத்து வந்த தோழர் என். சண்முகதாசனின் குடும்பப் புகைப்படம்.

இவரின் தலைமையில்தான் இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சண்முகதாசனும் நானும் இவர் செல்வாக்கில் ஈடுபட்டோம். வேறெவரிலும் பார்க்க கந்தையாதான் எங்களுக்கு உத்வேகமூட்டும் சோசலிசம் பற்றிய கண்ணோட்டங்களை எடுத்துக் காட்டினார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், அறியாமை ஆகியவற்றை அகற்றி, சோவியத் நாடு சாதித்த பெரும் சாதனைகளையும் உற்சாகமூட்டும் முறையில் எங்களுக்கு விளக்கிக் காட்டினார்.
ஆனால் அவர் நீண்ட காலம் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்க முடியவில்லை. அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக அவர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும் அடக்குமுறைச் சட்டப்படி தடை செய்யப்பட்டது. ஆனால் கந்தையா மனம் தளராது பல துறைகளில் உற்சாகத்துடன் தனது கடமையைச் செய்து, ஆங்கில வாரப்பதிப்பு ‘கேசரி’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
1943ல் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பொழுது கந்தையா அதன் தலைவர்களில் ஒருவராக முக்கிய இடம் பெற்றார். சில வருடங்களுக்குப் பின் கந்தையா பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படக்கூடிய நிலையை அடைந்து, உதவி நூலகராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சோசலிசக் கொள்கையைப் போதனை செய்து ஊக்குவிக்கக்கூடிய நிலையில் கந்தையா திரும்பவுமிருந்தார். ஆனால் இந்த உத்தியோகமும் நீடிக்கவில்லை. இனவாதப் போக்கில், பிழையான பாதையில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓர் புதிய தலைமையைக் கொடுக்க வேண்டுமென கந்தையா தீர்மானித்தார். 1956ல் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தின் பருத்தித்துறை அங்கத்தவரானார்.
பாராளுமன்ற அங்கத்தவராக, தமிழர்களின் பிரதிநிதியான முதல் சோசலிஸ்ட் என்ற முறையில் இலங்கை அரசியலிலும் மக்களின் வர்க்க ஒற்றுமைக்கான, ஜனநாயகத்துக்கான, சோசலிசத்துக்கான போராட்டத்திலும் ஓர் புதிய கண்ணோட்டத்தை கந்தையா புகுத்தினார். தமிழர்களிடையே உண்மை நண்பர்களை சுதந்திரப் போராட்டத்துக்காக சேர்க்க முடியுமென அவர் சிங்கள மக்களுக்குக் காட்டினார். அதேபோல தமிழிரின் மொழியை, கலாச்சாரப் பின்னணியைப் பற்றி விளங்கியவர்கள் சிங்களவர்களிடையே உண்டென்ற உண்மையை அவர் தமிழர்களுக்கும் எடுத்துக் காட்டினார்.

தியாகச் கூடர் அணைந்துவிட்டது. கந்தையாவின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. ஆனால் அவரது இயக்கம் தொடர்கிறது. அவருடைய அரசியல் மாணவர்கள், அவருடைய கட்சித் தோழர்கள், அவருடைய நண்பர்கள் ஆகியோரின் இதயங்களில் அவரின் இயக்கம் வளருகின்றது. தியாகச் சுடர் எரிந்து கொண்டேயிருக்கிறது. இலங்கை மக்கள் சோசலிசத்தை நோக்கி ஓர் சக்திவாய்ந்த முன்னேற்றத்தை அடைந்து விட்டார்கள். அந்த சோசலிச நோக்கம் கந்தையாவின் இதயத்தில் என்றுமே சுடர்விட்டு மக்கள் உள்ளத்தில் ஜீவஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும்."- மு.கார்த்திகேசன்


பிள்ளை ராதா கந்தையா


தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பெருமதிப்புக்குரிய  தோழர் பொன் கந்தையா நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் புகழ் கொண்ட உரை

பாராளுமன்றத்தில் முழங்கிய பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா
1956ல் பதவிக்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் அரசாங்கம், ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, தமிழர்களின் வரலாற்றில் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரே கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினரான (1956 - பருத்தித்துறை தொகுதி) பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா, அந்த மசோதா மீது ஆற்றிய உரையின் சில பகுதிகள், அதன் முக்கியத்துவம் கருதி கீழே தரப்படுகின்றது.


"கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு எதிராக எனது கருத்துக்களைச் சொல்ல நான் இப்பொழுது எழுகின்றேன். இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் எமது கருத்தாகும். “நிச்சயமாக சிங்கள மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது. அதனாற்தான் “தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று பருத்தித்துறையில் நானே கூறியுள்ளேன். ஏன்? ஏனென்றால், எமது கம்யூனிஸ்ட் கட்சி தான், இறுதியில் எமது நாட்டின் சுயபாசைகளையும் பண்பாடுகளையும் பாதுகாக்கக் கூடிய பாதுகாவலனாக இருக்கப் போகின்றது என்பது எங்களுக்குத் தெரியும்." "கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான எனது நோக்கு, நான் ஒரு தமிழனாக இருக்கின்றேன் என்ற உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகின்றேன். எனது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கின்றது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம், சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும். இந்த மசோதாவின் மூலம் அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், நாட்டின் குடிமக்ளாகவும் இருந்து கொண்டு வாழும் பயனுள் வாழ்க்கையையும் அதற்கா
உரிமையையும் மறுக்கின்றது. நாங்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டும் என்று அவாவுகின்ற எல்லாவற்றையுமே இது எங்களுக்கு மறுக்கின்றது.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது. எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியை பிரயோகிக்கக் கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற , கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கின்றீர்கள். நானும் எனது மக்களும் இல்லாது போய்விட வேண்டும், முடிந்துவிட வேண்டும் என்று உங்கள் போக்கில் நீங்கள் எடுத்த முடிவை எங்களுக்குப் பரிசாக வழங்குகிறீர்கள்."
- --பொன் கந்தையா 

Respectable Comrade Pon Kandiah was a member of  the Ceylon Parliamentary Delegation - 1957 visit to the Soviet Union - [ standing, centre of photo] 
இலங்கை நாடாளுமன்றக் குழு உறுப்பினராக பெருமதிப்புக்குரிய  தோழர் பொன் கந்தையா  இருந்த போது  - 1957 சோவியத் யூனியனுக்கு விஜயம் - [நின்று, புகைப்படத்தின் மையம்]

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF