Thursday, January 28, 2016

கே.ஏ.சுப்பிரமணியம் பல தடவைகள் பார்த்த, 1953ம் ஆண்டு வெளியாகிய "அவன்" என்ற படத்தின் பாடல்கள்

1953ம் ஆண்டு வெளியாகிய "அவன்" என்ற பெயரில் தமிழ் மொழிக்கு இந்தி மொழியிலிருந்து (ahh) எடுக்கப்பட்ட அற்புதமான ஒரு படம்.
இந்த அருமையான,எந்த விரசமுமற்ற புனிதமான காதலை
இரண்டு இளம் உள்ளங்கள் எப்படித் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளுகிறரார்கள் என்பதனை படத்தின்
பாடல்கள் மூலம் கேட்டு உணர்ந்து கொள்ள முடியும்.
பாடல்களை கம்ப தாசன் எழுதியிருக்கிறார்.
50,60,70ம் ஆண்டுகளில் எங்கள் இலங்கை வானொலியில்
ஒலித்துக் கொண்டிருந்த 'அவன்' படப்பாடல்கள் பிறகு
கேட்க முடியாமலே போய்விட்டது. பழைய படங்களை
வெளியிடும் இந்தியத் தொலைக்காட்சிகள் கூட இதனைச்
செய்யத் தவறி விட்டன.
எனது 77 வயதுக்குப் பிறகு ....இளமையில்
பார்க்க முடியாத இந்தப்படத்தை இனிமேல் பார்க்கவே
முடியாத என்ற தாகம் என்னுள்ளே மறைந்து கிடந்தது.
எனது மகளுடன் கடந்த இரவு கலந்துரையாடினேன்.
என்ன அற்புதம்! .......மலேசியாவில்
வாழுகிற ஒருவரிடமிருந்து பெற்றுக் காட்டினார்.அதனைக்
காணொளிக்கு ஏற்றி வைத்த அந்த நண்பருக்கு நன்றி.
சென்ற ஆண்டு கூட எனது மகள்
பலவழிகளில் மடிகணனி மூலம் முயற்சி செய்தும்
கிடைக்காத 'அவன் ' பட தமிழ்ப்படப் பாடல்களும்
இந்திப் படமும் பார்கக்கிடைத்தது மறைந்த எனது
கணவன் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்கள் , இந்தப் படத்தை தான் 10 தடவைகள் திரும்பத் திரும்ப பார்த்தது "படத்தின் பாடல்கள் தான்"
அத்தனை அர்த்தம் பொதிந்தவையாக அமைந்திருந்தன'
என கூறியதுடன் அப் பாடல்களை தன் இனிமையான குரலினால் திரும்பத்திரும்ப ்்் திரும்ப பாடி ,என்னையும் சேர்ந்து பாடவைத்தார். என்னை அந்தப் படத்தைப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார். எங்கள் காதல் வாழ்க்கையில் இப்பாடல்கள் பெரிதும் இடம்பிடித்தன. (சித்தார்த்தமும், போராட்டமுமாக வாழ்ந்த கம்யூனிஸ்ட் ,தன் சுற்று சூழல், சொந்தங்கள் ,பணம், பொருள் எல்லாம் துறந்து ஆறடி அவ்வழகன் ... நாலடியும் இல்லாத தென்னோலை செத்தைக் குடிசைக்குள் ஒளிந்திருந்து பார்க்கும் இந்தக் குண்டு - வேறு சமூகப் பெண்ணை , அடம்பிடித்து "அரிவாள் சம்மட்டியை " தாலியாக்க் கட்டி மரணம் வரை தன் கொள்கையிலிருந்து மாறாது விடை பெற்றார்.)

ஒவ்வொரு மனிதரும் எவ்வளவு சுதந்திரமாக வாழவேண்டுமென
தனது வாழ்வை, இளமையின் வசந்தத்தை பொதுவுடமைத்
த்த்துவத்திற்கு அர்ப்பணித்தாரோ, அது போல் காதலை,
கலப்புத்திருமணத்தை அதன் அப்பளுக்கற்ற புனித த்தைச்
மதித்தார். சினிமாவில் வந்தாலும் பாராட்டத் தவற மாட்டார்....... அவருடன் நெருங்கிய தோழர்கள் அனைவரும் அவரின் குரலுக்கு ரசிகர்களே! வி ஏ, வி பி, கார்த்திகேசன், நீர்வை, ஜீவா, டானியல், மான், பின்னர் செந்தில்,இரவி, தேவர்,சந்திரன் என......
கடந்த இரவு 27-01-2016 இரவு தூங்கும் போது நேரம்
2-00 மணியாகி விட்டது. அவருடைய தூய்மையான
அன்பைச் சேவையை , வியந்த படியே தூங்க முடிந்தது
மீண்டும் எனது மகளுக்கும் உலகில்
வாழுகிற சகல மக்களுக்கும்.....அவரே பாடுகிற
இனிய ஓசை காதில் இப்போதும் கேட்கிறதல்லவா?
ஏ-எம்- ராஜாவும், ஜாக்கியும் தமது பாடல்களால்
இன்றும் வாழ்கிறார்கள்......நன்றி. வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF