Saturday, November 18, 2017

Comrade E.T. Moorthy தோழர் திருஞானமூர்த்தி


தோழர் திருஞானமூர்த்தி எம்மை விட்டுப் பிரிந்தார். E T மூர்த்தி என எல்லோராலும் அழைக்கப்பட்டவர். 
காரைநகர் என்ற கிராமத்தை யாரும் மறக்க முடியாது. திண்ணைக்களி சிவன்கோவிலும், 'கசோரினா' பீச்சும் வடமாகாணத்தின் புகழை நிலைநாட்டி நிற்பது போல் ,நடுத்தெரு சம்பந்தர் கண்டி ' நாகலிங்கம் என்பவர் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வேலை பார்த்து நாடு திரும்பியவர். அவரது சகோதரியின் மகன் சிங்கப்பூரிலிருந்து வந்து தாய்மாமன் வீட்டில்
தங்கியிருந்தார். அவரைத் 'திருஞானம்' என்றுதான் அழைப்போம். கம்யூனிச சித்தார்த்ததினால் இழுக்கப்பட்டு தோழர் மணியத்துடன் நெருங்கிப் பழகினார் 
அவர், நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் அவர்களின் மூத்த மகள் வசந்தியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
வசந்தியின் அம்மாவுக்கு , திரு.மூர்த்தி அவர்களின் படிப்பு, ஒழுக்கம், பழக்க வழக்ககள் யாவும் பிடித்திருந்தும், ஆலய வழிபாடு, இல்லாத தால் அது ஒரு மனத்தாக்கமாவேயிருந்தது.அதற்காக, திருஞானம் அவர்கள் தோழர் மணியம் அவர்களிடம் தான் வந்து தனது
லட்சியத்தையும், வசந்தியோடுள்ள காதலைப்பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார்.
இதனால், தோழர் மணியம் வாரத்தில் 2நாட்களுக்காவது , தனதுசொந்த வேலைகளை ஒதுக்கி நவாலிக்குப்போய் வசந்தியின் அம்மாவுடன் கலந்து கதைத்து " மெல்லெனப் பாயுந்தண்ணீர் கல்லையும் உருகப் பாயும்" என்ற முதுமொழிக்கமைய....18 மாதங்களின் பிறகு சம்மதம் தெரிவித்தனர். மூர்த்தி தனது பிடிவாதங்களைக் குறைத்து
கொண்டதனால், நவாலி வீட்டில் சகல சிறப்புக்களுடனும் திருமணம் நிறைவேறியது. எனக்கு மாத்திரம் தான் தெரியும் ' வசந்தி அவர்மேல் வைத்திருந்த காதலின் பெறுமானம் எவ்வளவு ஆழமானது' என்று. ( இப்படி காதலுக்கு உதவிய பல கதைகள் உண்டு செ.யோகநாதன், சின்னத்தம்பி, தேவராஜா... என பட்டியல் நீளும்.)
புதுமணத் தம்பதிகள் முதல் முதலாக எமது வீட்டிற்கு வந்த பின் தான உறவினர் வீடுகளுக்கு சென்றார்களாம். வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வார்கள்.பின் கட்சி பிளவுகள், கொள்கை முரண்பாடுகள்,என பிரிந்து நின்ற போதிலும் மாறாத அன்புடன் பழகினோம். அன்பு மறவாத வசந்தி ,அப்பா 1989ல் நோய்வாய்ப்பட்டு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசனில் தங்கியிருந்த காலத்தில் தானே உணவு தயாரித்து அனுப்புவார்.அவர்களும் மிகச் சிரமத்துடன் வாழ்ந்த காலம். பிற்காலத்தில் புலி அரசியலும், தமிழ்தேசியமும் அவரையும் விட்டு வைக்கவில்லை. 
எங்கள் இரு குடும்பங்களின் உறவும், அன்பும் இன்றுவரை ...பேரப்பிள்ளைகள் பாசப்பிணைப்பாக இருக்கிறது. 
நினைவுகளும் , அன்பும் தொடரும்.........

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF