அண்மையில் காலமாகிய மூத்த பத்திரிகைவாதி எஸ். எம்.கோபாலரத்தினம் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்........
நண்பர் கோபாலரத்தினம் கோபு பத்திரிகையாளர் தோழர் மணியம் பற்றி எழுதிய குறிப்பை மீண்டும் வாசித்தேன். வேற்று அரசியலும், வேறு தளத்திலும் இருந்து அவர் உண்மைகளை எழுதியது , மிகுந்த ஆறுதலைத் தந்தது. உண்மைகள, தியாகங்கள் புதைந்தழிந்து போகா. …...
"நினைவுகளையும், ஞாபகங்களையும் மீட்டுப்பார்ப்பதும் பகிர்ந்து கொள்வதும் அலாதி பிரியமானது ஆனால் சில ஞாபகங்களை பகிர எண்ணும் போது கவலையும், துயரமும் சேர்ந்தே வரும்"........
மணியம் மனித நேயத்தின் ஒரு சின்னம் - எஸ். எம்.கோபாலரத்தினம்
மணியம்
விவசாய, தொழிலாளர் விடிவுக்காக வாழ் நாள் முழுவதும் போராடியவர்.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் கிராமம் கிராமமாகச் சென்று போராடி வெற்றி பல கண்டவர்.
இத்தனைக்கும் மேலாக கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாமல் வாழ்ந்தவர். ஆனலும் மாறுபட்ட கொள்கையுடையவர்களுடனும் அன்புடன் பழகிய உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
விவசாய, தொழிலாளர் போராட்டங்கள் பலவற்றை எப்படி மணியம் வெற்றிகரமாக - அதிலும் அரசாங்க அடக்குமுறை
நடவடிக்கைகளுக்கும் இடதுசரரி இயக்கங்களுக்கிடையிலிருந்த
போட்டி பொறாமைகளுக்கும் மத்தியிலும் நடத்தினர் என்பதற்கு
ஒரு சம்பவம் இது.
ஒரு சம்பவம்:-
*- ஆண்டு சரியாக நினைவில்லை. யாழ்ப்பாணத்தில் மேதின
ஊர்வலம் நடத்துவதற்கு அரசு தடை விதித்திருந்தது.
கே. ஏ. சுப்பிரமணியத்தைப் பிரதேசப் பொறுப்பாளராகக் கொண்டிருந்த இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு)யும் தொழிற்சங்கமும் யாழ்ப்பாணத்தில் மேதின் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெறுமென்று அறிவித்திருந்தது.
பொலிசார் மணியத்தைத் தேடிவலை விரித்தார்கள். மணியத்தைக் காணவில்லை.
மேதினத்தன்று ஊர்வலம் எங்கிருந்து தொடங்கும்; எந்தப் பகுதியில் "ஊர்வலம் நடைபெறுமென்பதை ஆராய்ந்து அறிந்து கொள்வதில் பொலிசார் பெரும் பிரயத்தனங்கள் செய்தனர்.
அச்சமயம் வடபகுதிப் பொலிஸ் அதிபராக இருந்தவர் பத்திரிகையாளர்களுடனும் . பொது மக்களுடனும் நல்லுறவை வளர்த்துக் கொண்டு பெருமதிப்புடன் பொலிஸ் நிர்வாகத்தை நடத்திய திரு. ஆர் சுந்தரலிங்கம்.
பொலிஸ் அதிபர் சுந்தரலிங்கம் எ ன் னு டன் நட்புறவுடன் பழகியவர். வடபகுதியில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் பத்திரிகைகள் பெரிதும் உதவ முடியுமென்பது அவரது நம்பிக்கை நானும் இதே கருத்தைக் கொண்டிருந்தேன். "ஈழநாடு’ பத்திரிகை மூலம் நான் இதற்கு உதவி செய்தேன்.
மணியத்துக்கும் எனக்கும் ந்ெருங்கிய நட்பு இருந்ததையும் பொலிஸ் அதிபர் சுந்தரலிங்கம் அறிந்திருந்தார். குறிப்பிட்ட மே தினத்தன்று திரு. சுந்தரலிங்கம் காலையிலிருந்து பிற்பகல் நாலரை மணிவரை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘மணியத்தின் ஊர்வலம்' பற்றி விசாரித்துக் சொண்டிருந்தார்.
மணியத்தை இரண்டு தினங்களாகச் சந்திக்கவில்லை. ஊர்வலம்
பற்றி எனக்குத் தெரியாது என்று நான் காலையிலேயே பதிலளித்திருந்தேன். பொலிஸ் அதிபர் என்னை நம்பத் தயாராக இல்லை. மீண்டும் அடிக்கடி தொலைபேசியில் விசாரித்தபடியே இருந்தார்.
இதே சமயம் அன்று நண்பகலுக்குப் பின் மணியம் எங்கிருந்தோ என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
எங்கிருந்து பேசுகிறீர்கள் என்பதற்கு கிட்டத்தான் என்றார், ஊர்வலம் எப்போது என்று கேட்டதற்கு "மாலையில் நடக்கும்" என்றார் ‘எங்கேயிருந்து ஆரம்பமாகும்?" என்ற கேள்விக்கு பின்னர் சொல்கிறேன் என்று பேச்சை வெட்டி விட்டார்.
மீண்டும் நான்கு மணிக்குத் தொடர்பு கொண்ட மணியம் * எஸ். பி. விசாரித்தாரா? என்று கேட் டார் "ஆம்" என்றேன் பின்னர் தொடர்பு கொள்வதாகச் சொல்லிப் பேச்சை நிறுத்தி விட்டார்
மணியமும் என்னை இவ் விஷயத்தில் நம்பத் தயாராக இல்லை
என்னை மட்டுமல்ல; எவரையுமே போராட்டங்கன் சம்பந்தப்
பட்ட இரகசியங்களில் அவர் நம்பத் தயாராக இருந்ததில்லை.
மாலை ஐந்து மணிக்கு ஐந்து நிமிஷமிருக்கையில் "வின்சர் தியேட்டர் சந்திக்கு வாருங்கள்; அல்லது ஆட்களை அனுப்புங்கள்" என்று தொலைபேசியில் பேசிய மணியம் சொல்லிவிட்டுப் போன வைத்துவிட்டார்.
ராஜா தியேட்டரிலிருந்து படம் பார்த்துக் கொண்டிருந்த சனக் கூட்டம் புற்றீசல் போல வெளிவந்து யாழ்நகரின் பிரதான வீதிகளில் முன்னே செங்கொடி பிடித்துச் சென்ற மணியத்தின் பின்னே சுலோகங்களைக் கோஷித்துக் கொண்டு ஊர்வலம் சென்றது.
பொலிசார் திக்குமுக்காடிப் போஞர்கள்! இது மணியத்துக்கே உரித்தான போராட்டத் தந்திரம் இலட்சிய வெறி!
மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் குருஷேத்திரம் போல் காட்சியளித்த நேரம், ஆலயப் பிரவேசப் போராட்டம் இருதரப்பிலும் எல்லை கடந்து போய்விடுமோ என்ற நெருக்கடி!
"ஈழநாடு" பத்திரிகை மட்டுமே யாழ்ப்பாணத்திலிருத்து வெளிவந்து கொண்டிருந்த ஒரே ஒரு தினசரி. நடு நிலை தவருது நாம் மிகக் கவனமாகச் செய்திகளை வெளியிட்டு வந்தோம். இருதரப்பும் எம்மீது கண்டனம் தெரிவித்து வந்தன. ஒரு நாள் இரவு கைக் குண்டு ஒன்று ‘ஈழநாடு அலுவலகத் தின்மேல் மாடி மீது வீசப்பட்டது. சத்தம் சிறிது; சேதம் எதுவுமில்லை
சில தினங்கள் கழித்து மணியத்தைச் சந்தித்தேன். மாவிட்டபுரம் போராட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
உங்களுடைய ஆட்கள்தானே ‘ஈழநாடு அலுவலகம் மீது குண்டு வீசியது என்று கேட்டேன். "சத்தியமாக - கோபு நாங்கள் அந்த வேலையைச் செய்யவில்லை; உங்களுக்கு அப்படி செய்ய மாட்டோம்.மணியத்தின் மனித நேயம் சொன்னபதில் இது.
# இன்ஞெரு சம்பவம். ஆண்டு, மாதம் எதுவும் நினைவில்லை.
மணியத்தைப் பொலிசார் தேடித் திரிகிறார்கள். மணியம் தலை மறைவாகி விட்டதாகச் செய்தி கிடைத்தது. இரண்டு தினங்கள் கழித்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது. "இன்ன இடத்தில் வந்தால் என்னைச் சந்திக்கலாம் சந்திக்க விரும்புகிறேன்" மணியத்தின் கடிதம் இது. யாரிடமும் சொல்லவில்லை. குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன். மணியம் தனிமையில் கைகளைப் பின்புறம் கட்டிய படி ஆழ்ந்த யோசனையில் அங்கு மிங்கும் நடந்து கொண்டிருந்தார்.
இருவரும் அரைமணி நேரத்துக்குமேல் பேசிக்கொண்டிருந்தோம். அவருக்கு நல்ல உணவு இல்லை. இரண்டு மூன்று தினங்கள் அவருக்கு வீட்டிலிருந்தே உணவு கொண்டுபோய்க் கொடுத்துவந்தேன்.
பலவருடங்களுக்குப் பிறகு 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நான் பின்னர் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த ஈழமுரசு பத்திரிகை இந்திய அமைதிப்படை அச்சு யந்திரத்தைக் குண்டு வைத்துத் தகர்த்ததைத் தொடர்ந்து ஈழமுரசு சில தினங்கள் தொல்புரத்திலும் சங்கரனையிலிருந்தும் வெளியிடப் பெற்றது.
தொல்புரத்திலிருந்து ஈழமுரசு வெளிவந்த சமயம் நண்பர் ஈ. ஆர். திருச்செல்வம் மூலம் மணியம் தனது வீட்டுக்கு வருமாறு தகவல் அனுப்பியிருந்தார்.
வீட்டுக்குச் சென்றதும் என்னைத் தனது வீட்டிலேயே தங்கியிருக்குமாறு மணியம் கோட்டார். நானே புலிகளின் பத்திரிகைக்கு ஆசிரியர் நீங்களோ சீனச் சார்ப்புக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் இருவரும் ஒன்றாக இந்தியா இராணுவத்திடம் அகப்பட்டால் எப்படி இருக்கும்? என்றேன். மனம் விட்டுச் சிரித்தார்.
'அந்தநேரம் தலைமறைவாக இருந்தபோது நீங்கள் அவருக்கு உணவு கொடுத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு உணவு கொடுத்துக் கவனிக்க வேண்டும்?“ என்று அவர் விடாப்பிடியாக நிக்கிறார் என்று திருமதி மணியம் சொன்னர்.
மணியத்தின் நன்றியே மறவாத மனிதப் பண்பு இது
ஈழமுரசு பத்திரிகையில் ஈழவிடுதலைப் போராட்டம் சம்பந்தமாக மணியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையையும் கண்டித்து ஒரு விமார்சனம் செய்திருந்தேன். இதற்கு அவரும் தங்கள் பத்திரிகையில் பதிலளித்துமிருந்தார்.
தொல்புரத்தில் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது இந்தக் கட்டுரைகள் பற்றிய பேச்சும் வந்தது. கோபுவிடம், படித்த பத்திரிகைத் தமிழிலேயே நான் அவருக்குப் பதிலும் சொல்லவேண்டியிருந்தது. ஆனல் எங்கள் நட்பில் எதுவும் இடையூறாக வரமுடியாது, வளரவும் முடியாது என்றார் மணியம் உறுதியானகுரலில்.
மணியம் நட்புக்கு வகுத்த இலக்கணம் இது.மணியம் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்காக கிராமங்களுக்குள் நுழைந்தார். விவசாய தொழிலாளர் போராட்டங்களுக்காகப் பொலிஸ் அடக்கு முறைகளை எதிர்த்துத் தடியடியும் பட்டார்.
போரட்ட வீரர் என்று பெயரும் பெற்றார், இத்தனைக்கும் மேலாக மணியத்தின் மனிதநேயத்தை, மனிதப் பண்புகளை, மனிதாபிமானத்தையே நான் காண்கிறேன்.
மணியம்,- எங்களில் பலருக்கும் பீக்கிங் மணியம்- என்பதும் எங்கள் நினைவில் வாழ்வார். கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்ளாத ஓர் இலட்சியவாதி அவர் நாமம் வாழ்க.
யாழ்ப்பாணம்
எஸ். எம்.கோபாலரத்தினம்
தோழர் மணியம் நினைவு மலர் 1989
· * 1969
· # 1971
http://noolaham.net/project/420/41944/41944.pdf