தோழர் அ. சீவரட்ணம் அவர்களுக்கான அஞ்சலி...தனது இறுதி மூச்சுவரை மார்க்சிய தத்துவத்தின்பால் பற்ருறுதியுடன் வாழ்ந்த தோழர்களில் குறிப்பிடக்கூடிய தோழர்களில் ஒருவர்.....
தோழர் மணியம் அவர்களின் 2013 நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினம் உரையாற்றினர்.
1989 இறுதி
அஞ்சலி நிகழ்ச்சிகளின் போது அ.சீவரத்தினம் (துணைத் தலைவர்,
அ.வி.சே.ச.
கொழும்பு- 2 ) உரையாற்றுவதைக் காணலாம்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் மறைவு தொழிலாளி வர்க்கத்துக்கும் இடதுசாரி
இயக்கத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக
அவர் ஆற்றிய பணி மகத்தானது. சிறப்பாக, வட இலங்கையில் புரையோடிக்கொண்டிருக்கும் சாதி வெறிக்கு எதிராக நடைபெற்ற
போராட்டங்களில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்ததை எவரும் மறக்க முடியாது.
மனிதனை மனிதன் சுரண்ட முடியாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்குப் புரட்சிதான்
ஒரே வழி என்ற கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் தோழர் மணியம் அவர்கள்.
வெறும் நம்பிக்கை மட்டுமல்ல அந்த இலட்சியத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தவர்.
அந்த இலட்சியப் பயணத்தில் அவர் சந்தித்த சோதனைகள், வேதனைகள் யாவற்றையும் துச்சமென மதித்துத் தன் பணியைத் தொடர்ந்தவர்.
இன ஒடுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் தோழர் மணியம் அவர்கள். அவரைப்
பொதுச் செயலாளராகக் கொண்ட இடது கம்யூனிஸ்ட் கட்சி சுயநிர்ணய
உரிமையின் அடிப்படையிலான இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டுமென
வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களும் அவரது கட்சியும் இடதுசாரி இயக்கங்களிடையே
ஒற்றுமையை வலியுறுத்தியது மட்டுமன்றி அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதும்
குறிப்பிடத்தக்கதாகும். வடபிரதேச தொழிற்சங்கக் கூட்டுக்
குழுவுடனும் மற்றும் முற்போக்கு இயக்கங்களுடனும் இணைந்து ஐக்கிய மேதினம்
கொண்டாடுவதன் மூலம் இந்த ஒற்றுமைக்கு ஒரு
அத்திபாரம் இட்டதில் அவரின் பங்கு அளப்பரியதாகும்.
அந்த ஒற்றுமையை மென்மேலும் வளர்த்தெடுத்து சோசலிசத்துக்கான போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்வதே தோழர் மணியம் அவர்களுக்கு நாம்
செய்யக்கூடிய அஞ்சலியாகும்.
அன்னாரை இழந்து
தவிக்கும் அவரது மனைவி, மக்கள், உற்றார், உறவினர்
ஆகியோரின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
அ.சீவரத்தினம்,
துணைத் தலைவர்,
அ.வி.சே.ச. கொழும்பு- 2.