Thursday, August 4, 2022

அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு 2022 யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்தேறியது.


 மூன்றாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு 2022

தமிழ்த்துறை, கலைப்பீடத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாடு 2022 ஆனது 03.08.2022 அன்று கைலாசபதி கலையரங்கில் நிகழ்ந்தேறியது.

சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழியல் மற்றும் தமிழிசை வளரச்சிக்கென சிங்கப்பூர் எஸ்றேற்றர் கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக தமிழ்த் துறையினால் நடாத்தப்பட்ட மூன்றாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு நேற்று யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையாரங்கில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எம். இரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆசியுரையையும், கலைப் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர் மற்றும் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் சிறப்புரைகளையும் நிகழ்த்தினர்.

யாழ். பல்கலைக் கழக கலைப்பீடத் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி சி. சிவலிங்கராஜா திறப்புரையாற்றி ஆய்வரங்கில் திறந்து வைத்தார்.

“ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்” என்ற கருப்பொருளில் இடம்பெற்ற இந்த இவ் ஆய்வு மாநாட்டில் முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன், வாழ் நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் துணைவேந்தரும், வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் சு. மோகனதாஸ், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

மூத்த தமிழ்ப் புலமையாளர்களுக்கு கௌரவிப்பு 

தமிழியலுக்குத் தொண்டாற்றிய மூத்த தமிழ்ப் புலமையாளர்களான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் , செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம், திருமதி புனிதவதியார் சிவக்கொழுந்து, திருமதி மங்கையற்கரசி நடராசா ஆகியோர், அவர்களின் அரும்பணியைப் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனர். 

வள்ளியம்மை சுப்பிரமணியம் Valliammai Subramaniam Interviewed by Vijayaratnam Vadivale from Australian Tamil Broadcasting Corporation (ATBC) அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் வானொலி நேர்காணல்













யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் , இன்று இடம்பெற்ற மூன்றாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் என்னை அழைத்துக் கௌரவித்தமகை்கு
பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட அனைவர்க்கும் இத்தாயின் அன்பும் நன்றியும்.
நாட்டில் நடந்த பல பொருளாதார நெருக்கடி , அரசியல் மாற்றங்கள்,மக்கள் ஒடுக்குமுறை எல்லாமும் சேர்ந்து , கடந்த சில மாதங்களாக சீரற்ற உடல்நிலயைுடன் போராடியபடி இருந்தேன், இந்நிலையில் இந்நிகழ்வுக்கு வரும்படி விரிவுரையாளர் செல்வி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் என் வீட்டிற்கு வந்து அழைத்திருந்தார்கள். மருமகன் இரவிக்கு கடுமையான காய்ச்சலும்,இருமலும். எனக்கும் அது தொற்றிக்கொண்டது. காலையடி மறுமலர்ச்சி மன்ற 50வருட (இது பற்றி விரிவாக எழுதவேண்டும்.விரைவில் எழுதுவேன் ) கொண்டாட்டத்திற்காக வந்திருந்த குலேந்திரனும்,சுனிதாவும் என்னைப் பார்த்துக்கொண்டனர். இதனை அறிந்த என் மகன் கீர்த்தி அவசரமாகப் புறப்பட்டு நல்லையுடன் " சத்தியமனை" வந்து சேர்ந்தார். எரிபொருளற்ற நிலையில் பிரணவனின் உதவியால் காரில் வரமுடிந்தது.
கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் சமய அனுஷ்டானங்களைப் பின்பற்றும் பழைமைவாதத்தைக் கடைப்பிடித்த பெற்றோருடனும்,பின் இருபத்தைந்து வருடங்கள் முற்றுமுழுதாக அதற்கு எதிர்மறைப் போக்குடைய , அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை அர்பணித்து வாழ்ந்த ஓர் கம்யூனிஸ்ட்டின் மனைவியாகவும் வாழ்ந்தேன். இந்த ஐம்பது வருட படிப்பினை இன்றும் என்னைக் கொண்டு நடத்துகிறது.என் கணவரை,என் மூத்தமகனை இழந்து குழம்பிய நிலையில் இருந்த எனக்கு, சிங்கப்பூர் தமிழ் சமூகம் புத்துயிர் அளித்தது. மீண்டும் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து என்னால் ஆனவற்றை பகிர்ந்து வருகிறேன். இன்று எனது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய கைலாசின் அரங்கில் இது நடைபெற்றது மிகுந்த மகிழ்வைத் தந்தது.
எனது எழுத்துகளுக்கு ஊக்கம் தரும் என் முகநூல் நட்புகளுடன் இதனையும் பகிர நினைத்தேன். நன்றி.

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF