Friday, November 25, 2022

நிச்சாமம் தோழர் சி. பழனி அவர்கள் Nitchamam Comrade S. Palani





யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானை நிற்சாமத் தோழர் சி. பழனி அவர்கள்.

Valliammai refered to comrade S. Palani. as her brother. He showed love and concern for me and the children after comrade Nallappu. Comrade S. Palani cut the palmerah trees from comrade Markandar yard and brought them for Sathiamanai roof. Comrade S. Palani's family played a pivotal role in Marxist-Leninist activism, with every member actively involved in the struggle for justice in Jaffna. His brothers, including Comrades S. Rasathurai, S. Sinnathurai, and S. Veerawagu, were key contributors to the movement. Two brothers, S. Nallathambi alias Sinnarasa and Balasingam, now living abroad, were also field fighters. Another brother comrade, S. Thuraisingham of the New Democratic Marxist-Leninist Party, was abducted on 11 January 1991 and murdered by LTTE. Comrade S. Palani lost his youth in jails and his family's sacrifices, including abduction, imprisonment, exile, and loss of life, underline their deep commitment to the cause of equality and justice.





இலங்கையில் சுழிபுரத்தில் அமைக்கப்பட்ட தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நூலகத்திற்கு நிலை வைக்கும் நிகழ்வு நிச்சாமம் தோழர் பழனி அவர்கள் தலைமையில் 5 March 2021 காலை இடம்பெற்றது.

புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் தோழர் சி.துரைசிங்கம் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.





 19 - 09- 1951    சங்கானை நிச்சாமத் தலைமைத் தோழர் சி.துரைசிங்கம்  11 - 01- 1991. Comrade S. Thuraisingam is the brother of comrade Palani

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானை நிற்சாமத் தோழர் சி. இராசதுரை

19-06-1938 தோழர் சி. இராசதுரை  11-09-2007 
Comrade S. Rasathurai is also the brother of comrade Palani



Sunday, October 16, 2022

வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நினைவு (30 May 1920 - 16 December 1993)







வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் நூற்றாண்டு நினைவு.  (30 May 1920 - 16 December 1993) முன்னாள் மகாஜனாக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர். 1951ஆம் ஆண்டு வித்துவான் நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் கல்லூரி கீதம் மற்றும் கொடி கவி ஆகிய இரண்டையும் இயற்றினார் .
Date and Time: Oct 15, 2022 Saturday 06:00 PM Colombo
மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கிளையில் இருந்து மகாஜனக் கல்லுாரிக் கொடிக்கவி, கல்லுாரிக்கீதம் பாடியவர்கள் திரு. இதயமூர்த்தி செந்திவேல், செல்வி. ஆரோகனா இதயமூர்த்தி.

All were welcomed to share their views through this Zoom Meeting








 18:04:01 From  Ravi Buby  to  K.A. Subramaniam's SATHIAMANAI Library கே. ஏ. சுப்பிரமணியம் சத்தியமனை நூலகம் කේ.ඒ. සුබ්රමනියම් සත්යමනායි පුස්තකාලය(Direct Message):
Stop other mic in library please
18:42:08 From  Bhuvanachandran  to  Everyone:
please send text message , who ever like speak
19:06:44 From  Mano  to  Everyone:
பலவேறு தகவல்களைத் தந்த திரு. சண்முகலிங்கம் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி
19:15:59 From  சேரன்  to  Everyone:
ஏற்பாட்டாளர்களுக்கு மனம் கனிந்த நன்றி. வணக்கம்.




கலாநிதி ந. இரவீந்திரன், பண்டிதர் ம. ந. கடம்பேசுவரன், நாம் அன்புடன் தியாகு வாத்தியார் என்று அழைக்கும் கிருஷ்ணர் மாஸ்டரின் மகனான திரு. நடராஜர், தாம் தலைவராக இருக்கும் தோல்புரம் சர்வோதயம் அமைப்புக்கு வந்து புலவர் - நா. சிவபாதசுந்தரனார் பற்றி உரையாற்றுவதற்காகப் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.



கையெழுத்துப் பிரதியின் முழுமையான எழுத்து வடிவம்:

(தொல்புரக் கிழார்) எனது பண்டித வகுப்பின் யாப்பிலக்கண அணியிலக்கிய ஆசானாக விளங்கிய புலவர் - நா. சிவபாதசுந்தரனார்.

புலவர் - நா - சிவபாதசுந்தரனார் அவர்கள், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் தமிழ்க் கற்பிக்கும் ஆசானாகக் கடமையாற்றி, ஓய்வு பெற்ற ஒரு பெருந்தகையாவார். தன்னோடு கற்பித்த சக ஆசிரியர்கள், அதிபர் ஆகியவர்களுடன் ஒத்துழைத்து கல்லூரியின் தரத்தை உயர்த்திய பெருமைக்குரியவராவார். அவரால் தொல்புர மண் பெருமை கொள்கின்றது.

நன்மக்களைப் பெற்றெடுத்த வித்துவான் அவர்கள் பண்ணாகம் - மெய்கண்டான் பாடசாலையில் நடாத்தப்பட்ட பிரவேச - பாலபண்டித வகுப்புகளுக்கு 1957 – 1959 யாப்பிலக்கண, அணியிலக்கண வகுப்பினை அமரர் - பண்டிதர் - அ. ஆறுமுகம் அவர்களுடன் ஒத்துழைத்து ‘மாணவர்கள் சித்திபெற வேண்டும்’ என்ற ஒரு நல்ல நோக்கத்துக்காக எந்தவிதமான பிரதிஉபகாரமும் கருதாது பாடுபட்டவராவார். நானும் பண்ணாகம் வி. கனகமணி, தொல்புரம் - நா. விநாயகமூர்த்தி அன்னாரிடம் பாடங் கேட்ட பெருமைக்குரியவர்களாவோம். நல்ல ஒருவரிடம் படிக்கும் பேறு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.

நான் எனது கடமையின் நிமித்தம் மூளாயில் இருந்து எனது இல்லமாகிய ‘சத்தியமனை’க்குத் திரும்பி வரும்போது வழியில் உள்ள வித்துவான் அவர்களின் வீட்டிற்கும் சென்று வருவேன். “களைத்து வந்த பிள்ளைக்கு காப்பி கொண்டுவா அம்மா” என்ற வித்துவான் அவர்களின் கட்டளையை அடுத்த சில நிமிட நேரத்தில் அம்மையார் அவர்கள் நிறைவேற்றி விடுவார். “புலமையும் வறுமையும்” என்ற தொடர் எங்கள் வித்துவான் ஐயாவின் இல்லத்தையும் பாதிக்காமல் விடவில்லை. தனது கணவனுக்கும், பிள்ளைகளுக்குமாக அம்மையார் அவர்கள், தனது பெற்றோர் கொடுத்த நகைகள், நிலங்கள் எல்லாவற்றையும் இழந்தார். அந்த நிலையிலும் சிரித்த முகத்துடன் வாழ்ந்த இந்த மாதரசி ஒரு நாளேனும் தனது வீட்டுப் பற்றாக்குறையை மற்றவர்களின் காதுகளுக்கு எட்ட விடவில்லை.

“கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” அதன்படி வாழ்ந்த அம்மையார் அவர்கள் தனது இல்லத்தையும், இல்லறத்தையும் கண்ணை இமை காப்பது போலப் பேணிப் பாதுகாத்தவர். வித்துவான் அவர்கள் தமிழ்த் தொண்டனாகி பல நூல்களை எழுதினாரென்றால் – அது அவரது துணைவியாரினது – மக்களினது கீழ்ப்படிவும், நேர்மையும், செயற்றிறனும் என்று கூறினால், மிகையாகாது! ஆகவே, எனது குருவுடன் அன்னாரது ஏனைய மாணவர்களது குருவும் ஒளிபெறாகட்டும்!

வாழ்க வித்துவான் நாமம்! 

வள்ளியம்மை சுப்பிரமணியம்



 முக்கியத் தகவல்கள்:

  1. கற்பித்த காலம் மற்றும் பாடங்கள் (1957–1959): பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் பண்டிதர் அ. ஆறுமுகத்துடன் இணைந்து 1957–1959 காலப்பகுதியில் பிரவேச பண்டிதர் மற்றும் பாலபண்டிதர் வகுப்புகளுக்கு யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகிய பாடங்களை எவ்விதப் பிரதிபலனுமின்றி இலவசமாகக் கற்பித்தார்.

  2. குறிப்பிடத்தக்க மாணவர்கள்: பண்ணாகம் வி. கனகமணி, தொல்புரம் நா. விநாயகமூர்த்தி ஆகியோர் இவரிடம் பயின்ற மாணவர்களாவர் (முன்னர் நீங்கள் பகிர்ந்த பசுமையான நினைவுகளில்... பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் நூலின் பகுதியோடு இது அப்படியே பொருந்துகிறது).

  3. சிறப்புப் பெயர்: 'தொல்புரக் கிழார்' என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.

31-ம் நாள் நினைவஞ்சலி

  • பிறப்பு: 30 - 05 - 1920    இறப்பு: 16 - 12 - 1993

அமரர் வித்துவான் நா. சிவபாதசுந்தரனார் 

(முன்னாள் மகாஜனாக் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர்)

செந்தமிழ் வளர்த்த சிவபாதசுந்தரனார் அகவற்பா

சைவமும் தமிழும் வளர்த்திட உழைத்த சான்றோர் பலரை ஈன்ற நற்பதி தொல்புரம் என்னும் பல்புகழ் சேர்பதி! அத்தகு பதியில் சான்றோர் மரபில் தோன்றிய அறிஞர் சிவபாத சுந்தரம், இயல் இசைத் தமிழ்ப்பற் றுடையவர் ஆதலின் தமிழகம் சென்றே அண்ணா மலையெனும் பல்கலைக் கழகம் தன்னிற் பயின்றே இலக்கண இலக்கியத் தெளிவு பெற்றவர்! பட்டம் பெற்றுத் திரும்பிய பின்னர் மகாஜனத் தாயின் நல்லாசிரியருள் தாமும் ஒருவராய்த் தமிழ்ப்பணி புரிந்தனர்! மாணவர் உள்ளத்தில் தமிழ்ப்பற் றென்னும் பயிரினை நட்டே வளர்த்திடும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி பற்பல கண்டவர்! "ஜயஜய மாதாவே" என்றே தொடங்கிடும் கல்லூரிக் கீதம் இனிதுற இயற்றினர்! மகாஜனத் தாயின் வளர்ச்சியிற் புகழில் ஆர்வம் கொண்டே அயரா துழைத்தனர்! சங்கத் தமிழ்முதற் பாரதி தமிழ்வரை சுவைத்துத் தெளிந்து மேடைகள் தோறும் கேட்போர் உவப்பப் பேச்சுகள் நிகழ்த்தினர்! வார இதழ்களில் மாதசஞ் சிகைகளில் கட்டுரை கவிதை சிறப்புற எழுதினர்! கற்றோர் உலகம் ஏற்றும் வண்ணம் புறப்பொருள் வெண்பா மாலை என்னும் புறப்பொருள் நூற்குச் சிறப்புறு விளக்கம் செய்தே தீந்தமிழ்த் தொண்டுகள் புரிந்தனர்! பொன்பொருள் தேடுதல் அறியாராகி செந்தமிழ் வளர்த்தலே கொள்கையாய்க் கொண்டனர்! மாணவர் போற்றிடக் கல்வியை வழங்கியும் கற்றோர் போற்றிட ஆய்வுகள் வழங்கியும் வாழ்ந்த அறிஞர் சிவபாத சுந்தரம் அன்பாற் பண்பால் அறிவாற் சிறப்பால் எங்கள் உள்ளத்தே தெய்வமாய்த் திகழ்வார்.

"சிவபாதசுந்தரனார், நா." பகுப்பிலுள்ள பக்கங்கள்



Saturday, October 8, 2022

செல்வி சுப்பிரமணியம் இரத்தினம் ஆசிரியர் கௌரவிப்பு

 ஆசிரியர் கௌரவிப்பு செல்வி சுப்பிரமணியம் இரத்தினம்

புண்ணியமூர்த்தி கணேசராசாவின் எழுத்தாக்கம், நெறியாள்கையில் சண் நாடகக்குழு தயாரித்து வழங்கும் இரண்டு நாடகங்கள்: 1. “வீட்டுக்காரன்” 2. “தலையெழுத்து”


























































English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF