சோமசுந்தரம் - சற்குணம்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'சோம சுந்தரத்தின் வாழ்க்கைத் துணையான மாதரசி
தேவ என்று தொடங்குகிற நால்வரின் தாயரசி
தாமாக முன்வந்து சேவைசெய்த சிவலிங்க அக்காரசி
தாயாரே மகளாகிக் குடும்பத்தைப் பராமரித்த பொன்னரசி.
வழக்காடு மன்றமும் வைத்தியசாலை வளாகமும்
புழங்கும் மக்களுக்குச் சேவைசெய்யும் பண்பாடும்
பழக்கமான பல்கலைக் கழகமும் ஒளிவழியும்.......
அழகாக உன்வாரிசுகள் திறமையுடன் கால்பதித்தார்.
மூத்தவர் சட்டத்தரணி முற்போக்கிவர் உடன்பிறந்தோர்
மாற்றுக் குறையாத கல்விவளம் பெற்றதனால்......
சேற்றில் முளைத்த செந்தாமரைப் புகழுடனே
ஆற்றல் பலபடைத்து அன்னையை உயர்த்தினாரே.
சமுதாய அக்கறையும் சமூகத்தின் விழிப்புணர்வும்
கமுகம் பூப்போன்ற கனிவான புன்சிரிப்பும்
குமுதமாய் அல்லி,முல்லை,தாமரை சேர அமுதா(ய்)
முகம் மலரும் சாதனாவுக்கும் பூட்டியானார்.
-வள்ளியம்மை சுப்பிரமணியம்
திருமதி. சோமசுந்தரம் சற்குணம் (குணதங்கம்) அவர்கள் தேவராசா (சட்டத்தரணி), தேவராணி (கொழும்பு), தேவமலர் (தாதி உத்தியோகத்தர்), தேவகுமார் - கனடா ஆகியோரின் அன்புத் தாயாரும்;
மகாதேவர் (சிவலிங்கம்-கனடா), சிவபதமெய்திய பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;
கலாலஷ்மி, சபாநாயகம், பரமசிவம், வள்ளிநாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்;
ஜனமகன், திருமதி அபிஷா குமுதன், தீபவதனன், தீபமேனன், டார்வின், தனுஜன், வினோஜா, அனுஜன், மயூரன், மதுஷன், திவ்ஜா ஆகியோரின் அன்பு பேத்தியாரும்;
ரனிஷ்கா, தெஷாந்த், சாதனா, ஆகியோரின் அன்பு பாட்டியுமாவர்
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்