Monday, December 6, 1982

05-04-1933 பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 06-12-1982 Professor K . Kailasapathy

 05-04-1933 பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 06-12-1982


எங்கள் தோழர்களுடனும், கட்சியுடனும் ,எம் குடும்பத்துடனும் மிக நெருக்கமாக வாழ்ந்த அறிஞர், தோழர், சகோதரன் என சொல்லாம்.
நீண்டகாலமாக தோழர் மணியம் , கைலாஸ் உறவு வளர்ந்திருத்தாலும், பாரதி பன்முகப்பார்வை என்ற தலைப்பில் யாழ் றிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன. அச்சந்தர்பத்தில் தான் நான் அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் அமைந்தது. (பின்னர் அது 1984இல் நூலுருப் பெற்றது)
அவர் உடல் நலமற்று கொழும்பில் இருந்த போது பல தடவைகள் சென்று பார்த்து வந்தார். ஒருதடவை மகள் பபியையும் அழைத்துச் சென்றார். அவரது இறுதி நிகழ்வுகளில் கட்சியினதும், தோழர்களினதும் முன்னெடுப்பை திருமதி சர்வம் கைலாசின் வேண்டுகோளின் படி முன்னின்று ஒத்துழைத்தனர்.
அவரின் மறைவின் பின்பும், அவர் குடும்பத்துடனான ஊடாட்டம் தொடர்ந்தது. அவர்கள் குழந்தைகள் தோழர் மணியத்தின் மீது வைத்த அன்பிற்கும், மரியாதைக்கும் பேராசிரியர் கைலாசபதியே காரணம். தோழர் மணியம் விடைபெற்ற மலரில் அவரத துணைவியார் எழுதிய வரிகள் இன்றும் நினைவு மீட்டலுக்கு உரியது.
“கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்; முதன் முறையே அவருடைய எளிமையான தோற்றமும், இனிய சுபாவமும் எங்கள் எல்லோரையும் கவர்ந்தது. அவர் அப்பொழுது வெறுங்காலுடன் வந்திருந்தார். "மாமா வெறுங்காலுடன் இந்த வெய்யிலில் வந்திருக்கின்றார்” என்று எமது பிள்ளைகள் அங்கலாய்த்தனர்.
அவர்களுடைய அன்பு நச்சரிப்பால் அவர் பின்னர் செருப்புப் போட்டு வருவார். அவருடைய எளிமைக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. கைலாசபதியும் திரு. சுப்பிரமணியமும் இரண்டு வயது வித்தியாசமுடைய சமகால அரசியல் தோழர்களாயிருந்தனர். இருவரும் தேசிய சர்வதேசிய அரசியல் விவகாரங்களில் இறுதிக் காலம் வரை ஒத்தகருத்தைக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் பரஸ்பரம் மதித்தும் வந்துள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது.”

இலங்கை நாட்டிற்கு மட்டுமல்ல அறிவு தேடும் அனைவரும் இவரின் பங்களிப்புகளையும் உள்வாங்கியே கடந்து செல்வர் . அந்த வகையில் எங்கள்
Raveendran Nadesan
அவர்களின் இவ்வளவு வளர்ச்சிக்கும் பேராசிரியரின் ஊக்குவிப்பு உரமாக அமைந்தது.
என்றும் அவரின் நினைவுகள் நிலைபெறும்!
“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி,அமிர்தத்தை ஊட்டுவாய்"
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே”
அவரது நூல்கள்:
  • பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
  • தமிழ் நாவல் இலக்கியம்,1968
  • Tamil Heroic Poetry,Oxford,1968
  • ஒப்பியல் இலக்கியம்,1969
  • அடியும் முடியும்,1970
  • ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
  • இலக்கியமும் திறனாய்வும்,1976
  • கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
  • சமூகவியலும் இலக்கியமும்,1979
  • மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
  • The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
  • திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,198
  • இலக்கியச் சிந்தனைகள்,1983
  • பாரதி ஆய்வுகள்,1984
  • The Relation of Tamil and Western Literatures
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
  • On Art and Literature
  • இரு மகாகவிகள்,1987
  • On Bharathi,1987
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)



No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF