"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Thursday, May 1, 1986

May Day Rally Speech in 1986 by K.A.Subramaniam

May Day Rally Speech in 1986 Length:2 Minutes

1986 May Day rally procession started from Nallur and meeting held in Tirunelveli. At that time from the beginning to the very tense situation in Jaffna. The Communist Party (Left) had conducted the successful procession and the crowded meeting. Comrade K. A. Subramaniam presided over the meeting .This is his meeting speech ...............

"We know that Jayewardene and his cadres want peace, peace on the streets and peace in the country. We know that the voice of the people in this country is being voiced in the daily press. Jayawardene, who is proud of or wants justice, or Jayawardene, who wants peace, must have been the first to deliver justice and freedom in this country, especially the rights of the Tamil people. 
Only in such a situation can peace be found in the country. Jayewardene has been dragging his feet for so long, claiming that he is coming forward for talks. If they still come forward to find a political solution, we will support it. Divisional autonomy should be granted on that basis. That would be a prerequisite for some of the demands of the Tamils ​​to be met. "




1986 ஆம் ஆண்டு மே தினத்தன்று நல்லூரில் இருந்து ஆரம்பமாகி ----- திருநெல்வேலியில் நடைபெற்ற ஊர்வலமும் கூட்டமும் .யாழ் நகரில் மிகுந்த பதட்ட சூழ்நிலையில்  நடந்த  ஊர்வலத்தினை இடது கம்யூனிஸ்ட் கட்சி மிக எழுர்ச்சியுடன் நடாத்தியது. அங்கு அலை என திரண்ட மக்கள் சுடு வெய்யிலையும் பொருட்படுத்தாது கோசங்களை எழுப்பிய வண்ணம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்..அச் சுலோகங்களில் சில இங்கு ............. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் பாட்டாளி வர்க்கம் பாராளும் வர்க்கம் புத்தர் சொன்னார் அகிம்சை என்று ஜே ஆர் சொன்னார் யுத்தம் என்று நாடு எங்கே போகிறது? யார் யார் பயங்கரவாதி? ஜே ஆர் பயங்கரவாதி அத்துலத்முதலி பயங்கரவாதி ரீகன் பயங்கரவாதி அவ் ஊர்வலத்திற்கும் ,கூட்டத்திற்கும் தோழர் தலைமை தாங்கி நடத்தினார். அக் கூட்டப் பேச்சு இது............... "ஜெயவர்த்தனாவும் அவருடைய எடுபிடிகளும் சமாதானம் வேண்டும் வீதியில் அமைதி வேண்டும் , நாட்டில் அமைதி வேண்டும் என்றெல்லாம் தினசரி பத்திரிகைகளில் குரல் கொடுப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது ,நீதி மறுக்கப்படும் போது சுதந்திரம் மறுக்கப்படும் போது நிச்சயமாக பலாத்காரம் இருக்கத்தான் செய்யும் . பலவந்தமாக தங்களது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. ஆகவே நீதியைப் பற்றிப் பெருமைப்படும் அல்லது நீதி வேண்டும் என்கின்ற ஜெயவர்த்தனாவோ, அல்லது அமைதி வேண்டும் என்கிற ஜெயவர்த்தனவோ இந்த நாட்டில் நீதியையும் ,சுதந்திரத்தையும் முன்னர் முதலாக வழங்கி இருக்க வேண்டும்.குறிப்பாக தமிழ் மக்களுடைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் நாட்டில் அமைதியைக் காண முடியும். ஜெயவர்த்தனா பேச்சுவார்த்தைக்கு முன்வருவதாகக் கூறி , இவ்வளவு காலத்தையும் இழுத்தடித்து இருக்கிறார்.. இன்னும் தான் அவர்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு முன்வந்தால் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம் தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் ,வடக்குக் கிழக்கு பிரதேசங்கள் அவர்களுடைய தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் பிரதேச சுயாட்சி வழங்கப்பட வேண்டும். அதுதான் தமிழர்களுடைய கோரிக்கைகள் ஒரு பகுதியாவது அடைவதற்கு அது ஒரு முன்தேவையாக அமையும்."



No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்