Monday, November 9, 1992

Comrade V.A. Kandasamy தோழர் வீ் ஏ கந்தசாமி


தோழர் வீ் ஏ கந்தசாமி அவர்கள்,  தனது பொதுவுடமை பாதையில் கடைசிவரை  பயணித்த முதுபெரும் தலைவர் வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கு முறையை சந்தித்தார்களோ அந்த இடங்கள் எல்லாம் இவருடைய பாதம் தடம் பதிக்க தயங்கியது இல்லை தொழிற்சங்கங்கள் கட்டி அமைத்து தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்காக சமரசம் இன்றி போராடியவர் இறக்கும்வரை பதவிகளுக்கோ பாசாங்குகளுக்கோ ஆள்பட்டவர் இல்லை அவரது எழுத்துக்கள் என்றும் ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான வீச்சருவாளகவே இருந்தது 


1966 அக்டோபர் எழுச்சியின் போது தோழர்கள் வீ. . கந்தசாமி, கே. டானியல் , வீ. . கந்தசாமி , டாக்டர் சு. வே. சீனிவாசகம் , எஸ். ரி. என் நாகரத்தினம், கே. . சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை ஏற்றுச் சென்றனர்.


The  1966 October Uprising left a lasting impact. It was demanding the abolition of caste discrimination. Comrade KAS was detained, along with comrades R.K. Soodamani and V.A. Kandasamy. The three arrested were released on bail at midnight for medical treatment. But the court case continued for some years. On behalf of them, legal expert Mr. Nadesan Satyendra, who has an uncanny insight and skill in the subtleties of international constitutional law, appeared and secured the acquittal.

1966 அக்டோபர் எழுச்சி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜாதிப் பாகுபாட்டை ஒழிக்கக் கோரி இருந்தது. தோழர் கேஏஎஸ் கைது செய்யப்பட்டார், தோழர்கள் ஆர்.கே. சூடாமணி மற்றும் வி.ஏ. கந்தசாமி. கைது செய்யப்பட்ட மூவரும் மருத்துவ சிகிச்சைக்காக நள்ளிரவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நீதிமன்ற வழக்கு சில ஆண்டுகள் தொடர்ந்தது. அவர்கள் சார்பாக, சர்வதேச அரசியலமைப்புச் சட்டத்தின் நுணுக்கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறமையும் கொண்ட சட்ட நிபுணர் திரு.நடேசன் சத்யேந்திரா அவர்கள் ஆஜராகி விடுதலையை உறுதி செய்தார்.


எனக்குத் தெரிந்து தோழர் சண் அளவிற்கு, இவரால் மிக நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டவர் தோழர் வி.. கந்தசாமி. ஒரு தடவை தோழர் மணியமும் அவரும் எமது காலையடி வீட்டிற்கு வந்த போது, தோழர் மணியம் பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடக்க முடியாது இருந்த அவரை தன் கைகளில் காவி வந்ததாகச் சொன்னார். திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியராக வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்ற மரியாதை எப்பவும் எனக்குமுண்டு. என் பிள்ளைகள் மீது அதீத அன்பு காட்டியவர். அவரது பேச்சுக் கேட்பதற்காக அந்தக் காலங்களில் இளைஞர்கள் கூட்டத்திற்கு வருவர். மீண்டும் பிரிவோ என்கிற பயத்தை தோழர்களின் வருகைகளும், கதைகளும் உணர்த்தின. தோழரிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்ட போதுஉட்கட்சி போராட்டம் என்பது, சிறந்த மக்களுக்கான அமைப்பை ஒற்றுமையுடன் கொண்டு செல்ல இவை போன்ற கருத்தை கருத்தால் புரிந்து கொள்ளுவதன் மூலமே முடியும். இவை இருப்பது தான் சரிஎன்றார். எனக்கு இருந்த ஒரே கவலை பிரிவு வந்துவிடுமோ என்பதே. ஒருநாள் காலை தோழர் வீட்டின் வளை மீதுகொள்கையற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். தோழர் வி.. கந்தசாமி தனியே வந்தார். சுக விசாரிப்புகளின் பின்னே வீட்டு வளையைப் பார்த்தார்.
"! எனக்காகத் தான் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரா?" என்று கேட்டார். அவரிடம் இருந்து தகவல் அறிய நான் முற்படவில்லை. அதை நான் எப்போதும் செய்ததும் இல்லை. “வந்தேன் என்று சொல்லுங்கள். குழந்தைகளை கவனமாகப் பாருங்கள்என்று தோழர் வி.. கந்தசாமி அவர்கள் சொல்லிச் சென்றார். ஏனோ எனக்கு கண்ணீர் தளம் தட்டியது.

ஜே.வி.பி. பிரச்சனையால் தோழர் சண் ஜெயிலில் இருந்தார். அத்தருணம் வாட்சன் பெனார்டோ, றொசாரியோ, ராமையா, .ரி. மூர்த்தி (செங்கொடிச் சங்க தோழர்கள்), HLK கரவிட்ட, நிகால் டயஸ் என சில தோழர்களுடன் நீர்வை பொன்னையன்) வி.. கந்தசாமி, கார்த்திகேசன் மாஸ்ரர், தோழர் கதிரேசு என சிலரும் தோழர் சண்ணை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாக கூறிப் பிரிந்தனர். தோழர் மணியம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் உரையாடல்களில் 1969 இல் நடந்த சட்டமறுப்பு ஊர்வலத்தின் பாதிப்பு பற்றி தலைமையைக் குற்றம் சாட்டியது என் காதுகளில் அரசலாகக் கேட்டது. நான் அது பற்றித் தோழருடன் இறுதி வரை கேட்டதே இல்லை.பின்னர் , பிரிந்த அவர்கள் வேறு ஒரு பெயருடன் இயங்கினர்.


1989 தோழர் வீ. கந்தசாமி அவர்கள் சத்தியமனைக்கு திடீரென வந்தார். ஒரு காலத்தில் மிக மிக நெருக்கமாக இருந்த தோழர்கள் அவர்களிருவரும், கொள்கை முரண்பாட்டினால் மிக நீண்டகாலம் உறவறுந்திருந்தனர். தோழர் விறாந்தையில் படுத்திருந்தார். எழ எத்தனிக்க தானும் நிலத்தில் அமர்ந்து தோழரின் கைகளை பொத்திப்பிடித்துக் கொண்டு, “இந்தியாவில் வைத்தியம் செய்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். போகலாம்என்றார். வழமையான புன்முறுவலுடன் தோழர், “அவர்களின் அத்துமீறல்களை கண்டித்தபடி தான் இயங்குகிறேன். உங்கள் அக்கறைக்கும், வருகைக்கும் நன்றிஎனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். ‘கொள்கையற்ற நடைமுறை குருட்டுத்தனம், நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்என தோழர் வீ. இற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் வளையில் எழுதியதை நினைத்துக் கொண்டேன்.

When comrade KAS returned to Sathiamanai after the reatment in 1989, comrade V.A. Kandasamy unexpectedly came to Sathiamanai. Once very close comrades, they had been estranged for a long time due to ideological differences. My comrade was lying on the floor and tried to get up but comrade V.A. Kandasamy sat on the ground, he held my comrade's hands tightly and said, "I will arrange for treatment in India. Let’s go." With his usual feigned cheerfulness, my comrade replied, “I’m acting in defiance of India’s arrogance. Thank you for your concern and visit,” bringing the matter to a close. I recalled what comrade KAS had written in the past for comrade V.A. Kandasamy, "A practice without ideology is blindness; an ideology without practice is stagnation."

தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் தோழர் வீ ஏ கே  தவிர்க்க முடியாதவர் தனது பொதுவாழ்க்கைக்காக  குடும்ப வாழ்க்கையை துறந்தவர் 60 வருட பொதுவாழ்வில் அவர் சேர்த்த சொத்துக்கள் ஒரு உடுப்பு பெட்டியும் சட்டைகளும் வேட்டிகளும் கண்ணாடியும் தான். 

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் இருக்கும் வரை அவர் தன் தோழர்களால் நினைவு கூரப்பட்டுக்கொண்டேயிருப்பார் 

தோழருக்கு எங்கள் செவ்வணக்கங்கள்.

 

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF