"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, March 20, 2006

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய தலைமைப் போராளி சங்கானை நிற்சாமத் தோழர் த. தர்மலிங்கம்

 


16-07-1941  தலைமைப் போராளி தோழர் த. தர்மலிங்கம்  20-03-2006



யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1960களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமைப் போராளி சங்கானை நிச்சாமத் தோழர் த. தர்மலிங்கம் ...
சங்கானைக்கு என் வணக்கம் !



ந.இரவீந்திரன் -சத்தியமலர் நிச்சயதார்த்தத்தில் (19-11-1986) சபையின் சார்பாக சாட்சியாக நிச்சாமம் தலைவர் தோழர் தர்மலிங்கம் கையெழுத்திட்ட போது...

1989 நவம்பர் 30 அன்று சத்தியமனையில் நடைபெற்ற தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் அஞ்சலிக் கூட்டத்தில்  நிச்சாமம் தலைவர் தோழர் . ர்மலிங்கம், தோழர் சி. கா. செந்திவேல்  மற்றும் சாந்தை தலைவர் தோழர் பொ. துரைராசா (பாவைத்கிளி) ஆகியோர் காணப்படுகின்றனர்.

தோழர் மணியம் மாமனிதர் - நிச்சாமம், கிராம அபிவிருத்திச் சங்கம் சங்கானை. சரஸ்வதி சனசமூக நிலையம்

தோழர் சுப்பிரமணியம் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.  அவரது உடல் மட்டுமே மறைந்தது. அவரது நினைவுகள் எம்மை விட்டு என்றுமே மறைந்து விட முடியாது . எளிமை உறுதி மக்களை நேசிக்கும் பண்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் கொள்கைகளை நிதானமாகவும் கிராமத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் முன்னெடுத்துச் செல்லும் தலைமைத்துவத் தன்மைதான் தோழர் மணியம் அவர்களையும் நிச்சாமம்- சங்கானை  மக்களையும் இரண்டறக் கலக்க வைத்தன.

 

அன்றைய போராட்ட களத்தில் எமது கிராமத்திற்கும் மக்களுக்கும் அவர் வழங்கிய நிதானமான உறுதியான வழிகாட்டல் தான் நாம் தலைநிமிர்ந்து மனிதர்களாக உலா வருவதற்கும் ஏனைய முன்னேற்றங்களுக்கும் அடிப்படையானவை என்பதை எமது மக்கள் என்றுமே மறந்துவிட மாட்டார்கள்.

 

அது மட்டுமன்றி, 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி எழுச்சியை அடுத்து சங்கானைப் போராட்டம் சிறு பொறியாக மூட்டப்பட்டது. அவ்வாறு மூட்டப்பட்ட சிறு பொறியை தவறான வழிமுறைகளில் வழி நடத்தியிருந்தால் அச்சிறுபொறி அது மூட்டப்பட்ட  இடத்திலேயே அணைந்திருக்கும்.  ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியும் தோழர் சுப்பிரமணியமும் மிகக் கடுமையான போராட்டங்களின் மூலம் சிறு பொறியை பாதுகாத்து நிதானமாக அடக்குமுறைக்கு எதிரான பரந்த காட்டுத் தீயாக மாறி அநீதி, அடக்குமுறை, பாகுபாடு என்பவற்றை சுட்டெரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

 

எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் சரியான கொள்கையால் சரியான தலைமையால் வழிகாட்டப்பட்டால் இழப்புகள் குறைவாகவும் வெற்றிகள் கூடுதலாகவுமே இருக்க முடியும். அன்றைய எமது போராட்டங்கள் இதற்குச் சான்று. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையும் தோழர் மணியம் போன்றவர்கள் எம்முடன் கூட இருந்து வழிகாட்டியமையும் அடிப்படைக் காரணமாகும்.

 

மேலும் ஒரு விடயம் என்னவென்றல் அப்போராட்டங்களில் எமது கிராமத்திலும், வட பகுதியின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்ட பல போராளிகள் கொலைக் குற்றச் சாட்டின் பேரில் பல மாதங்கள் விளக்கமறியலில் அடைக்கப்பட்டு நீத்மன்றங்களில் தூக்குத்தண்டனைக்கு அண்மையாகக் கொண்டு செல்லப்பட்டனர்; அவ்வேளை இவ்வழக்குகளை வெற்றிகரமாக நடாத்தும் பொறுப்பு கட்சியினால் தோழர் மணியத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

 

போராளிகளை மீட்டெடுத்துப் பாதுகாக்கும் பொறுப்பை உணவு, உறக்கம் பாராது செயற்படுத்தி ஒருவரைத் தானும் தண்டனைபெற வைக்காது வெளிக்கொணர்ந்தவர் தோழர் மணியம், மக்களுடைய, உழைக்கும் வர்க்கத்தினுடைய தேவைக்காக சட்டத்தை மீறவும் அதேவேளே சட்டத்தைப் பயன்படுத்தவும் அவர் தயங்கியது கிடையாது.

 

தோழர் மணியம் என்றும் எமது கிராம மக்களால் மறக்கப் பட முடியாத மாமனிதர். அவரது வழியில் புதிய சந்ததி திடமுடன் முன்செல்லும், வெற்றிகள் பெறும் என்பதில் ஐயமில்லை.

 

நிச்சாமம் கிராம அபிவிருத்திச் சங்கம், சங்கானை சரஸ்வதி சனசமூக நிலையம்.-


நிச்சாமம் கிராம அபிவிருத்திச் சங்கம், சங்கானை சரஸ்வதி சனசமூக நிலையம்.



"எச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து
நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்
சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள்
குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன்" - கவிஞர் சுபத்திரன்
















No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்