Wednesday, March 3, 2010

ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி.

ஜன்சில மஜீத் என்ற சமூக சேவகி.

------------------------------------------------------------

ஈழத்து மண்ணிலே பிறந்த இனமொன்று

வாழ்கின்ற வயதிலே வளமிழந்து இடம்பெயர்ந்து

சூழ்கின்ற துயரங்கள் சுழன்றடித்த போதினிலே -மனமும்

பாழ்பட்டுப் போகாமல் பக்குவப் படுத்தவேண்டி

ஆழ்ந்த சிந்தையுடன் அயராது பாடுபட்டு -தோல்வியில்

மூழ்கிப்போய் மூலையிலே முடங்கிக் கிடக்காமல்

வீழ்ச்சியில்லா வீறுகொண்ட வீரமான மாதரசி!

தாழ்வில்லை உன்பணிக்கு தரணியிலே முன்னுரிமை!!



மங்கிய பொழுதொன்றில் இருபது ஆண்டுமுன்னே

பொங்கிவந்த கண்ணீரை வெறுங்கையால் துடைத்துவிட்டு

எங்குதான் போவதென்ற ஏங்கிய உள்ளத்தோடே

தங்களின் சொத்துக்களை வடக்கிலே விட்டுவிட்டு-அகதிக்கு

பங்களிக்கும் பாசப்பூமி புத்தளம் வந்தடைந்த

நங்கையர்கள் வாலிபர்கள் நலிந்த முதியோர்கட்கு......

“உங்களுக்கு நாமிருக்கோம்” என்றவொரு நம்பிக்கையை

அங்கு வழங்கினார்கள் அன்பான மானிடர்கள்.!



‘ஜன்சில மஜீத்” என்ற சமூகநலச் சேவகியே!

சனங்களின் புனர்வாழ்வைச் சரித்திர நிகழ்வாக்கி

மனம் மொழி மெய்யறிவு மாறாத தியாகச்சிந்தை.....

இனங்களின் பாதுகாப்பை ஏற்றமாய் நடாத்துவதால்.....

தன்நம்பிக்கை விடாமுயற்சி தளராத மனவுறுதி.....

தன்னலம் சிறிதேனும் தலைகாட்ட முடியாத

பொன்மனச் செல்வியெனப் பொதுமக்கள் போற்றுவரே!

மென்மேலும் உனதுசேவை மேதினியை உயர்த்தட்டும்!!

    

தகவல்:  அலெக்ஸ் இரவி

வாழ்த்துரை எழுதியவர்;----வள்ளீயம்மை சுப்பிரமணியம்.

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF