Wednesday, August 25, 2010

24 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் காணொளி (1986) சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்) சிறையில் இருந்து எழுதிய திருமண வாழ்த்து...

இன்று 9 வருடங்கள் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்) சத்தியராஜனை  இழந்து ...... என் மகனை நினைவு கூர்ந்து ............
    மலர்வு:----30-10-1962                                   உதிர்வு:----25-08-2001




24 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் காணொளி(1986) சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்) சிறையில் இருந்து எழுதிய திருமண வாழ்த்து


யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து  என் மகன் சத்தியராஜன் எழுதிய திருமண வாழ்த்து (1986) 


பாட்டாளி பாராள வேண்டும் என்ற தந்தை - அவர்
பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னை
அடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்ற அண்ணன்
அநியாயம் கண்டு குமுறும் தம்பி
அன்பிற்கோர் மாமா மாமி
ஆசைக்கோர் அங்கிள் அன்ரி
அறிவு சொல்லும் தோழர்
ஆதரிக்கும் சுற்றம் இவர்கட்கு
அருமை பெருமையாக பிறந்தாய்
அன்பு பாசத்துடன் வளர்ந்தாய்
கருணை இரக்கம் உந்தன் பழக்கம்
கலக்கம் தயக்கம் இல்லை அது உன் வழக்கம்
சமூக மாற்றம் வேண்டி நிற்கும் ஒருவன்
வாழ்வு தனில் உந்தன் துணைவன்
வாழ்க்கை தனில் அவன் பணி தொடர வேண்டும்
அவர்களுள் நாமறிந்த இருவர்
மார்க்ஸ் / ஜென்னி (அப்பா / அம்மா)
அவர்கள் போல் நீயும் வாழ்வில்
வெற்றி கொள்ள வாழ்த்துகின்றேன்.


யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து சத்தியராஜன் 19-11-1986

1 comment:

  1. அலெக்ஸ் இரவி சார்பாக .....என் நண்பனின் தாயார் திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் சார்பாக “சகல அடக்குமுறை தனை உடைத்தெறிவோம்” என்று தன் தகப்பனார் கே.ஏ. சுப்பிரமணியம் வளர்ப்பில்… சந்ததியாரை அரசியல் ஆசானாகக் கொண்டு… 1976 இலில் மாணவப் பராயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சியை முதன்மைப் படுத்தி தன் சகோதரர்கள், தோழர்கள் துணைகொண்டு “சிறுபொறி” கையெழுத்து பத்திரிகையை வெளியிட்டு… மாணவ தோழர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி… புதியபாதை சுந்தரம் வழியில்… அடக்கப்பட்ட மக்களின் விடியலுக்காகப் புறப்பட்டு… இலங்கை இராணுவத்தினால் சிறை பிடிக்கப்பட்டு… என் நண்பன் சத்தியராஜ் யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து எனது கல்வி ஆசானும், “சிறுபொறி” கையெழுத்து பத்திரிகையின் ஆசிரியர் குழுவை சேர்ந்த தோழரை மணமுடித்த தன் அன்புச் சகோதரியின் திருமணத்தை ஒட்டி எழுதிய கவிதை இன்று அவரின் 9வது நினைவு தினத்தில் நினைவுகூரப்படுகிறது- அலெக்ஸ் இரவி.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF