Monday, May 25, 1981

கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடும் ! போராளி சுந்தரம் 1980/81 இல் எழுதிய கடிதமும் மனம் வருந்திய மிகத் தவறும் !


கலாநிதி ஆ. தியாகராசா M.A.M.Litt PhD ( 17 ஏப்ரல் 1916 – 25 மே 1981) அவர்கள்   அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ. அமிர்தலிங்கத்தை 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.





 
எமது மக்களின் தரமான வாழ்விற்காக 1981 யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட, முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் "கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மிகத்தவறு!"



முப்பதுவருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றிய கலாநிதி ஆ. தியாகராசா M.A.M.Litt  PhD அவர்கள் காரைநகரிலுள்ள யா/கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்  அதிபராக நியமனம் பெற்றகாலம் கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படுகின்றது


"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!" ...வள்ளியம்மை சுப்பிரமணியம்


தோழர்- சுந்தரம் அவர்கள் தோழர்- மணியம்
அவர்களுடன் உரையாடும் போது என்காதில் விழுந்த சில
செய்திகளின் துளிகள்.... "கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மிகத்தவறு!".



                        (சுந்தரம்) சதாசிவம் சிவசண்முகமூர்த்தி

தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒன்று சேர்ந்த, மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம் 1980/81 இல்  
சுழிபுரம்  ஸ்ரீலங்காவில் இருந்து மேற்கு ஜெர்மனி நண்பருக்கு எழுதிய கடிதம்,

"இனிய நண்பா நீண்ட நாட்களின் பின் தான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. மன்னிக்கவும். தங்கள் நலன், நிலை  முதலியன நான் அறிய விரும்புகிறேன்.நட்புகளை நான் மறப்பதில்லை நண்பர்கள் என நான் மதித்தவர்கள் என்னை மறந்து போனார்கள் அவர்கள் மறந்தனால் எனக்கு எந்தவித நட்டமும் இல்லை. ஆனால் மனக்கவலை தான் நீங்கள் அப்படி இல்லை என நம்புகிறேன். உங்களுக்கு என்ன கஷ்டமோ என எனக்குத் தெரியாது. ஆனால் உணர்கின்றேன் .  நீங்கள்பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய மடலுக்கு  பதில் அனுப்ப முடியாது போனது குறித்து வருந்துகிறேன். தயவுசெய்து இக்கடிதத்துக்கு பதில் எழுதவும். உங்களைப் பற்றி நாளாந்த வாழ்க்கை பற்றி  வேலைகளை பற்றி நண்பர்களை பற்றி சூழலை பற்றி எழுதவும்.


நான் நலம். வீட்டிலும் அவ்வாறே.  ஆறு மாதங்களுக்கு முன்னர் அப்பாவை கைது செய்து மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்தனர் . என்னால் பகிரங்கமாக நடமாட முடியாத நிலை எனினும் நடமாடுகின்றேன். இயங்குகிறேன். எடுத்த துறையில் 100% வேலை செய்கிறேன்............


...... தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டது . அமைச்சர்களுக்கு இராசதுரை மாலை போட்டதால் கட்சியை விட்டு விலக்கி ஒதுக்கி விளக்கம் கேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள்  ( அமீர்,  சிவா ) அத்துலத்முதலிக்கும்  முகம்மதுவுக்கும் சுபாஷில் விருந்து அளித்தார்கள். ஜே ஆரின் ( J R ) பிறந்ததின விழாவில் முதல் ஆளாக வரிசையில் நின்று ஜே ஆருக்கு பரிசளித்தார் (மாஜி) தலைவர் அமீர்.   இராசதுரை , கனகரத்தினம் தங்களை மட்டும் முதலாளித்துவ ஜே ஆர் ஆட்சி கும்பலுக்கு அடகு வைத்தார்கள் . அமீர் சிவா பிற்போக்குத் தலைமை, கட்சியையும் இனத்தையும் தங்களுடன் சேர்த்து அடகு வைத்துவிட்டனர். இந்த அரசை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ? என அமீர் பகிரங்கமாக கேட்கிறார்.  இன்பம்,   செல்வரத்தினம் …… பிணங்களை பார்த்த நாம் …. …. காலம் பதில் சொல்லும் …….  பதிலை எதிர்பார்க்கிறேன் ….. மிகுதி அடுத்த மடலில் …..  தோழமையுடன் மூர்த்தி  முகவரி சுழிபுரம்  ஸ்ரீலங்காவில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு"












      

பின்குறிப்பு:----


என்குழந்தைகள் சிறுபொறி வெளியிட்டது  1976ல்........... 

புதியபாதை கை யெழுத்துப்பிரதிகள் 1977/78ல் பார்வைக்குக் கிடைத்தது. 

அச்சுவாகனமேறியது 1979/1980 ....

1980/81ல்.........வீடுகளுக்குச் சென்று கைகளில் ஒப்படைப்பதில் மிகக் கவனமாகச் சுந்தரம் செயற்படுவார். 



"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!" ...வள்ளியம்மை சுப்பிரமணியம்  Updated in 2009


No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF