குப்பைத் தொட்டி.
-------------------------------
என்னுடைய பதற்றத்தை யாரிடத்தில்
சொல்வேனோ?
சொல்வேனோ?
எனக்கு உயிரிருந்தால் நானெடுத்து
வளர்ப்பேனே!
வளர்ப்பேனே!
உயிருள்ள ஒருசிசுவை என்னுள்ளே போட்டுவிட்டு-
தன்
தன்
உயிரோடு மானத்தையும் காப்பாற்றப்
போனாளே!
போனாளே!
ஐயோ!நான் என்னசெய்வேன் ? ஆறாப்பசியோடு
அலையும் தெருநாய்கள் மோப்பம் பிடித்து
வந்தால்.....!
வந்தால்.....!
அநாதையான இச்சிசுவைக் கடித்துக்
குதறுதற்கோ
குதறுதற்கோ
ஐயோ! என்னிடத்தில் அடைக்கலமாய்ப்
போட்டாளோ?
போட்டாளோ?
ஒருகுழந்தை
இல்லையன்று ஏங்கித் தவிப்போரே!
இல்லையன்று ஏங்கித் தவிப்போரே!
ஓடிவந்து காத்திடுவீர் உமக்குப்
புண்ணியந்தான்!
புண்ணியந்தான்!
சிறுவாய் திறந்து அந்தச் சின்ன
உயிர்உம்மை
உயிர்உம்மை
“அம்மா! அப்பா” அழைக்கையிலே ஆனந்தம்
பெறுவீரே!
பெறுவீரே!
என்னுடைய பதற்றத்தை யாரிடத்தில்
சொல்வேனோ?
சொல்வேனோ?
எனக்கு உயிரிருந்தால் நானெடுத்து
வளர்ப்பேனே!
வளர்ப்பேனே!
-குப்பைத் தொட்டி
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்