Saturday, August 25, 2001

Lost of my son .... 25 August 2001 என் மகன் சத்தியராஜனை இழந்தது .... என் மகன் மாத்திரமா?

இன்று 25 08 2011 என் மகன் சத்தியராஜனை  ( மீரான் மாஸ்ட்ர் ) இழந்து 10 வருடங்கள்  ...... நினைவு கூர்ந்து ............


என் மகன் மாத்திரமா?
---------------------------------------
தந்தைதாய் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனால்
    முந்தித் தானெடுத்த முடிவினை நிறைவேற்ற
சுந்தரத்தின் வழிபார்த்து சந்ததியின் உபதேசத்தால்....
    பந்தபாசங் களைத்துறந்து...பக்தியாய்த் தமிழின்மேலே....
சிந்தனை செயல்கள் யாவும் சிதறாமலே நடந்து....
   நிந்தனை அனுபவித்து நேசித்த விடுதலையை...
அந்தகராய்ச் சிறைச்சாலை அரணான கோட்டைகுள்ளே....
   விந்தையாய் வருடங்கள் யுகங்களாய்க் கழிந்தனவாம்!
அந்திப் பொழுதினிலே அன்பான வீட்டைவிட்டு....
    சந்திக்குப் போகாமல் சந்துபொந்து வழிபார்த்து....
புந்தியைக் கல்லாக்கிப் புறப்பட்டுப் போனவர்கள்....
   சிந்தையில் விடுதலையை நேசித்த குற்றத்திற்காய்....
வந்தனை செய்தார்கள் வாதாடினால் ‘நாடு”என்று
    மந்தமாய் மறுதலிப்பு மாற்றமாய்ப் போனதாலே....
எந்தன் மகன் மாத்திரமா? எத்தனையோ ஆயிரம்பேர்....
   சொந்த பந்தங்கள் துடிக்கச் சொர்க்கம் போனாரோ?
                                                                                                                  வள்ளியம்மை சுப்பிரமணியம்

  
பின்குறிப்பு:----


மேலே உள்ள 1988 புகைப்படத்தில் எனது மகனுடன் (
 சத்தியராஜன் மீரான் மாஸ்ட்ர்
) நிற்பவர் சுந்தரத்தின் விசுவாசமான தோழரான பாலமோட்டை சிவம்  ( கணபதிப்பிள்ளை சிவனேசன் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ) பெரிய மெண்டிஸ் என  அழைக்க பட்ட பாலமோட்டை சிவம் , தன்னை “சண்முகம் ”  ( சிவசண்முகமூர்த்தி )என பின்னர் பேரிட்டு அழைத்துக்கொண்டதோடு தனது நெஞ்சிலும் சுந்தரத்தைப் பச்சை குத்திக்கொண்டார்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF