Sunday, September 8, 2013

பிரதீபன் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( ஏகாம்பரம் பார்த்தீபன் ) 12 -08 - 1966 .......... 30 -06- 1986 நினைவு

ஏகாம்பரம் பார்த்தீபன்
(12 Aug 1966 - 30 June 1986) 

பார்த்தீபனின் வீரம், தியாகம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அனைவரும் விரும்பும் ஒரு இனிய பிறவி. அன்பைப் பொழிவதில் தன்னிகரற்றவர்.நாங்கள் காவியங்களிலும் புறநானூற்றிலும் வாசித்துள்ள வீரமரணம் என்பது நெற்றியிலோ மார்பிலோ விழுப் புண்ணேந்தி மாள்வது என்பது தான். பார்த்திபன் தனது நடுநெற்றியில் வீரத் திலகமேந்தித் தான் வீரமரணம் அடைந்திருந்தார். 

தான் இறக்கப் போவது உறுதி என்பது தெரிந்திருந்தும் பொதுமக்களதும் சகபாடிகளதும் உயிரைக் காப்பதற்காக தன்னுயிரை ஈந்தவர் அவர்.இறுதி மூச்சு வரை மற்றவர்களுக்காகவே வாழ்ந்த உத்தமன் அவர். தான் வாழ்ந்த இருபதே ஆண்டுகளில் சரித்திரம் படைத்து விட்ட மாமனிதன் அவர்.போராட்டம் உச்சநிலை எய்திய போது பல்வேறு காரணங்களுக்காக இயக்கங்களுடன் தங்களை இணைத்து கொண்டவர் பலர் .இருந்தும் ஆரம்ப
கால உறுப்பினர் அனைவரும் இனவிடுதலை உணர்ந்து விரும்பி இணைந்தவர்கள் .
இவரும் இணைந்து பல்வேறு பயிற்ச்சிகளின் பின் குடா நாட்டில் .சம்பவ தினம்
அங்கிருந்து மன்னார் நோக்கி ஜீப் வண்டியில் சகாக்கள் சகிதம் பயணம் .கைதடி பாலத்தை நெருங்கும் போது பஸ் வண்டி ஒன்று பொதுமக்கள் /மாணவர்கள் சகிதம்
பாலத்தின் நடுவில் பழுதடைந்து நின்றுவிட்டது .அக்காலத்தில் தினசரி காலை தோறும் ஒரு ஹெலி பலாலியில் இருந்து காரை நகர் முகாம் சென்று வருவது வழமை .அவர்கள் இவர்களின் ஜீப்பை கண்டதும் தாள பறந்து சரமாரியாக சூடு நடத்த அங்குள்ள பொதுமக்கள் + மாணவர்களை காக்கும் பொருட்டு சகபாடிகளுக்கு இவ்வாறு சொல்லி **நீங்கள் பாலத்துக்கு கீழே பதுன்கிகொள்ளுங்கள் ** நான் சமாளிக்கிறேன் என்று சொல்லி தன்னிடம் உள்ள துப்பாக்கியினால் சூடு நடத்தி உள்ளார்.ஈற்றில் நெற்றி பொட்டில்வீரத் திலகமேந்தி வீரமரணம் அடைந்திருந்தார். எங்கள் பார்த்
தீபன் அவர்கள் கனவு நிச்சயம் பலிக்கும் .......நன்றி-http://www.panncom.net/p/4874/4874

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF