2013 டிசம்பர் 20 ஆம் திகதி, கொழும்பு 58, தர்மராஜ வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில்(WERC), திரு. லெனின் மதிவானம் எழுதிய சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வை புதிய பண்பாட்டுத் தளம் அமைப்பினர் ஒழுங்கமைத்தனர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது), புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஸ்தாபகரும், தலைவருமான தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 25ஆம் ஆண்டு விடைபெற்ற தினத்தை ஒட்டி "சமூக இலக்கியத் தளங்களில் படைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் " என்ற நூலின் சமர்ப்பணமும்,விமர்சன நிகழ்வும் கொழும்பில் இடம்பெற்றது.
பேராசிரியர் தை.தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு ஆர் சங்கரமணிவண்ணன், மல்லிகைப்பூ சந்தி திலகர், எம். வாமதேவன், கலாநிதி ந.இரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர் மணியம் அவர்களது "விடைபெறுகிறேன் ஓளி நாடாவும் ஒளிபரப்பப் பட்டது .
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். பெருந்தொகையான தோழர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும் வந்திருந்து சிறப்பித்தமை மிகுந்த உற்சாகம் தருகிறது.
ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் !!
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்