புதுவை இரத்தினதுரை பாடல் வரிகளில்.... நிச்சாமம் தோழர் க. நல்லப்பு பற்றிய கவிதை.............
***************************************************************************
“..........வாய்க்கால் வரம்பருகே வளர்ந்து வரும் செங்கீரை
பூக்காத காவிடையே பூத்த ஒரு செம்பருத்தி......
என்றே உனைநினைந்து இறுமாந்திருந்த வேளையில்
எம் கன்றைத் துவக்கெடுத்து ஒரு காக்கி உடை சுட்டழிக்கும்
என்றா நினைத்திருந்தோம் இல்லையடா இல்லையடா.....
........................................................................................
“தட்டைச் சரிவினில் ஓர் தனிஉருளை உருள்வது போல்.....
நெட்டை மரமொன்று பூத்துக் குலுங்குதல் போல்..............”
சிந்தனை விரிந்த பின்பு….{ஆக்கம் வள்ளியம்மை சுப்பிரமணியம் }
சிந்தனை விரிந்த பின்பு சீறிவரும் உணர்வினாலே
உந்தனைநினைத்தோம் நல்லப்பு என்னும் வீரனே
நிந்தனை செய்தால் போராட்டம் நின்று விடுமோ
வந்தனை செய்வோம் மார்க்சின் வழிவந்தோர் நாமெல்லாம்
அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழல் என்ற வரலாற்றை
காண்பித்தீர் உந்தன் இறப்பதனால்
இரக்கமற்ற ஆயுதப்படை செயலால்
உரமாகி நம்மையெல்லாம் உருவாக்கியேவளர்த்தீர்.
நல்லப்பு என்பவனின் அன்பினால் மனமுருகி
சொல்லப்பு என்ற உடன் சுறுசுறுப்பாய் குழந்தை....
கொல்லப்பட்டிறந்தார் என்றும் கொள்கைப் பிடிப்பினில்
வல்லவனாய் வாழ்ந்தவனின் வாழ்வும் நிறைந்தன்றோ!
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்