கடலிற் சிந்திய எண்ணெய்
---------------------------------------------
எண்ணெய்யே......!
ஐம்பெரும் பூதங்களுடன் ஐக்கியம் ஆனவன்நீ.....
செம்மையாக நிலத்திலே ஓடுகின்ற வாகனங்கள்
நம்பிக்கையாய்க் கடல்தனிலே பயணிக்கும் கப்பல்கள்
கும்மிருட்டில் பறக்கின்ற அண்டவெளி ஊர்திகட்கும்.........
ஆக்கமான உந்துசக்தி.... ஆதாரசுருதி நீதானே!
ஊக்கமும் ஒத்துழைப்பும் ஒருங்கே கொடுத்துதவி..........
நோக்கமேது மில்லாது நொடிப்பொழுதில் கடல்நீர்மேல்....
தேக்கமாக அழித்துக் குவித்தாயே உயிரினத்தை!
நீயோ...........
அடிநிலத்துக் கிணற்றுக்குள் அசுத்தமாய்ப் பிறந்தவுன்னை
துடிப்பான மனிதசக்தி துரிதமாகச் செயற்பட்டு...........
வடிகட்டித் தரம்பிரித்து வாகனத்துத் தகுதிப்படி..........
கொடிகட்டிப் பறக்குமாறு கலசத்துள் அனுப்பினரே!
மானிடனே............
நடமாடும் மனிதர்களை நாசமாக்கி அழிப்பதற்கு.....
உடம்பிலே குண்டுகட்டி உருக்குலைந்து சிதறுதற்கு....
இடங்கொடுக்க எண்ணாதே நோக்கத்தை மாற்றிவிடு!
கடலிற் சிந்திய எண்ணெய்க் கதைகேட்ட பின்னாலே!
*இக் கவிதை “ யூனிக்கோட்” எழுத்துருவில் எழுதப்பட்டது
Monday, August 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்