............
இலங்கை நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில்
துலங்கும் வட்டுக் கோட்டைத் தொகுதியில்
நீர்வளமும் நிலவளமும் உயர்ந்த பனைமரமும்
போர் வளமும் சூழ்ந்த பதற்றமான காலத்தில்
“சுபாரா” பெயருடன் வந்து பிறந்த வரமிவர்.
அபார வரலாற்றைக் கொண்ட ”சத்திய மனை” யின்
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று
தப்பாது அன்புகாட்டும் அயலோர் உறவுகளும்...
நாட்டு நிலைமையால் தமிழ்நாடு சென்று
காட்டும் முன்னேற்றம் கல்வியில் தானென்று
இளம்வயதில் மறைந்த பெரிய மாமாவின்
உளம் நிறைந்த கனவை நனவாக்க
அமேரிக்க பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற
உண்மைப் பேற்றினைப் பெற்ற செல்வியாம்.
ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி!
சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!
From Sunday "Thinakkural" 13 February 2005






 
 
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமெனின்
ReplyDeleteஔவை வீட்டு அம்மிக்கல்லும் அழகுதமிழ் சொல்லும்
சுபாரா!
கவிதை சூப்பரா இருக்கு.